மொத்தப் பக்கக்காட்சிகள்

11/12/2011

குற்றவாளிகள் உருவாவதில்லை, உருவாக்கபடுகிறார்கள்!

"குற்றவாளிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்" என்று சொல்வார்கள். இவை முற்றிலும்  உண்மை. குற்றம் உருவாவதற்கும் சமுகம் சார்ந்த காரணிகளும் அதில் நடக்கும் நிகழ்வுகள்களும் ஒரு காரணமாகவும் இருக்கிறது.
ஏசுநாதர் இருந்த ஊரில் ஒரு பெண் விபசாரம் செய்தால் என்று ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி வந்தனர். அவள் எசுநாதரிடம் அடைக்கலாமானார். அப்போது ஏசுநாதர், "உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்" என்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவரும் கல்லெறிய வரவில்லை.
ஆம், இதில் நாமும் குற்றவாளி மீது கல்லெறிய முடியாது.. ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இச்சமூகத்தில் குற்றவாளிகள்தான். மக்களுக்கு சிறிய, பெரிய குற்றங்கள் தெரியாதவரை அவை குற்றமாக தெரிவதில்லை, அவையே தெரியும்போது ஏற்கனவே அக்குற்றத்தை தெரிந்தவருக்கு கூட  மிக பெரிய குற்றவாளியாகதான் தெரியும். தெரிந்தவர்களும் குற்றவளியாகத்தான் இருப்பான் அவன் குற்றம் வெளியே தெரியாதவரை.
கவுன்சிலரா இருந்தவன் அமைச்சரானால் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் எனபது அவனுக்கு சொல்லிய தெரியவேண்டியதில்லை. உழல் செய்த பணத்தில் சட்டத்தில் அவன் தேவையான அளவுக்கு வளைத்து கொள்வான். இதில் அவன் செய்த குற்றம் எப்படி, எப்படியோ  நியாபடுத்தபடும். ஜேப்படி திருடன் ஒருவன் திருடினான் என்பதற்காக கைதாகிறான்.  இவன் குற்றவாளி, குற்றவாளியாககூட ஆக்கபடுகிறான். அதே பல கோடி உழல் செய்யும் அரசியல்'வியாதி'! அவனும் மக்கள் பணத்தைதான் திருடுகிறான் அப்படியென்றால் அரசியல்'வியாதியும்' ஒரு ஜேப்படி திருடந்தானே. ஆனால், இவன் சமூகத்தால் மதிக்கபடுகிறான். அத்திருடன் மிதிகபடுகிறான் இதுதான் சமுகத்தின் பார்வையில் இருக்கும் குற்றத்தின் ஏற்ற இறக்கம்.
பெண்களின் பெருமையை  பற்றி மணிகணக்காக பேசுவார்கள், பெண்களை தாய் என்பார்கள், சகோதரி என்பார்கள், ஒரு படிமேலே போய் எங்கள் தெய்வங்களே பெண்கள்தான் என்பார்கள் ஆனால் திரைமறைவில் பெண்களிடம் அவர்கள்  செய்யும் லீலைகள் தெரிந்தால் நாறிவிடும். வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான், வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்.
சமூக சுத்தத்தை பற்றி பேசுவார்கள் அரசாங்க எதையும் சுத்தமாக வைத்துகொல்வதில்லை என்று சொல்வார்கள் அது சரி இல்லை..இது சரி இல்லை..என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் அவர்கள்தான் அதில் வெற்றி பெருமளவுக்கு அவர்கள் வாதம் இருக்கும், ஆனால் அப்படி பேசிவிட்டு சாதாரணமா எச்சிலை கண்ட இடத்தில் துப்புவார்கள், கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவார்கள், இன்னும் செய்யகுடாத செயல் எல்லாம் செய்வார்கள்.
ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். இந்த மாதிரி தவறுகள் எல்லாம் வருகிறது. இதுவும் ஒரு குற்றமான ஒரு செய்யலதான்.  ஒவ்வொருவரின் வாழ்விலும் தினம்தோறும் அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான் நடக்கிறது. அதில் முக்கால்வாசி அருவருப்பாகதான் இருந்துகொண்டிருக்கிறது. 

RED SOCIETY1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact "RED SOCIETY"  9940217816. They will help those children for their studies.


2. There is a Website: www.friendstosupport.org  where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.  


3. Engineering Students can register in www.campuscouncil.com  to attend Off Campus for 40 Companies.


4. Free Education and Free hostel for Handicapped children..!
Contact:- 9842062501 & 9894067506


5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital. From 23rd March to 4th April by German Doctors. Everything is free. Contact: 045420-240668,245732 "Helping Hands are Better than Praying Lips"


6. If you find any important documents like Driving license, Ration   card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put them into nearby any Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you lend your hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics 8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all      Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them" 


9. Special phone number for Eye bank and Eye donation 04428281919 and 04428271616(Sankara Nethralaya Eye Bank) For More information about how to donate eyes plz visit these sites. . .

  10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore.  Contact : 9916737471 

11. Please CHECK WASTAGE OF food If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke - Child helpline
http://www.kannoli.com/eyebank.html http://ruraleye.org/ லஞ்சம் முதல் பரிசு நமக்கு தான்.லஞ்சம் இல்லாத நாடு உலகில் எங்கேனும் இருக்கிறதா? தோண்டி துறவி தேடிப் பார்த்தாலும் அப்படி ஒரு நாடு கிடைவே கிடையாது. வளர்ந்த நாடுகள் பணக்கார நாடுகளில் கூட அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், என்று இருக்கும் கும்பல்கள் சர்வசாதாரணமாக லஞ்சம் வாங்கி குவித்து இருக்கிறார்கள், ஏழை நாடுகளை பற்றி கேட்கவே வேண்டாம், லஞ்சம் கொடுக்காமல் மழை கூட வானத்திலிருந்து கிழே இறங்காது, லஞ்சத்தை அடிப்படை மூலதனமாக வ...ைத்தே பல தொழில்கள் அங்கு நடைபெற்று வருகின்றன, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் நின்று விட்டால் அந்நாடுகளில் தொழில் துறை கூட முடங்கி விடும்.

நமது இந்தியாவை பொறத்தவரை லஞ்சம் என்பது கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியது என்றே சொல்லலாம்

இதில் கூட நம் பாணி அலாதியானது தான். மற்ற நாடுகளில் லஞ்சம் கடமையை செய்யாமல் இருப்பதற்கும் அல்லது கடமையை மீறி செயல்படுவதற்கும் தான் கொடுக்கப்படுகிறது. நம் நாட்டிலோ கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இவ்ளவு அற்புதமான நிர்வாகிகளை உலகத்தில் எந்த மூலையில் தேடினாலும் காண்பது கடினம், இந்த அதிசய பிறவிகளை நிர்வாகிகளாக பெற்றதற்கு இந்திய மக்கள் அனைவரும் பலநூறு வருஷம் தவமிருந்திருக்க வேண்டும். லஞ்சம் வாங்குவதில் திறமைசாலிகள் யாரென்று போட்டி நடத்தினால் உலகளவில் முதல் பரிசு நமக்கு தான்.

11/11/2011

சிந்தனைத் துளிகள் சில!


உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".

"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."

"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."

"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".

"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."முற்றிலும் முரண்பட்டது."

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

* மிக மிக நல்ல நாள் - இன்று

* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

* மிகவும் வேண்டியது - பணிவு

* மிகவும் வேண்டாதது - வெறுப்பு

* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

* மிகக் கொடிய நோய் - பேராசை

* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

* கீழ்த்தரமான விடயம் - பொறாமை

* நம்பக் கூடாதது - வதந்தி

* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

* செய்யக் கூடியது - உதவி

* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

* உயர்வுக்கு வழி - உழைப்பு

* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

* பிரியக் கூடாதது - நட்பு

* மறக்கக் கூடாதது - நன்றி

இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

பகவான் கிருஷ்ணர்

* மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி ஆளுதலும், உள்ளத்தூய்மையும் என்ற இவையெல்லாம் நம் மனதுக்குள்ளேயே உள்ளது.

* விரும்பியதை அடைந்து விட்டால் வரம்பின்றி மகிழக்கூடாது. அதுபோல் துன்பம் வரும்போது ஒரேயடியாக மனம் கலங்கவும் கூடாது. மன உறுதியுடன் தெய்வ நிலையில் நிற்க வேண்டும்.

* மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும், ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் அமைதியும் இன்பமும் பெறமுடியாது.

* மனதை அடக்கி இருந்தாலும், எப்படியோ ஆசைப்புயல் புகுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறித்து விடும். அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்து விடாமல் இருக்க வேண்டுமானால், என்னை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.

* பட்டினியாகக் கிடந்தால் உடல் சக்தியன்று அடங்கிப்போகும். ஆனால், தான் நினைத்ததை அடையவேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரடியாகக் காணவேண்டும்என்னும்அளவுக்குஆன்மிகப் பயிற்சி எடுத்தால் தான் இது அடங்கும்.

* கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் புத்தி குழம்புகிறது. புத்தி குழம்பியவன் இறந்தவனுக்கு சமமாகிறான்.

* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது.

நினைவு அழிகிறது. நினைவு கெட்டால், லட்சியம் மறைந்துபோகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான்.

* புகையால் நெருப்பும், புழுதியால் முகப்பார்வையும் மூடப்பட்டு போகிறது. அதுபோலவே காமம் என்ற பகைவனால் மெய்யறிவு மூடப்பட்டு விடுகிறது.

* தானம் அளிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும். இடம், தகுதி, காலம் ஆகியவற்றைக்

கவனித்து, திரும்பத்தர இயலாத ஒருவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானம் எனப்படும்.

எதனால் மனதிற்கு வருத்தம் உண்டாகிறேதோ, எது பிரதிபலன் கருதி செய்யப்படுகிறதோ அந்த தானம் அது "ராஜஸ தானம்' ஆகும்.மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது "தாமஸ தானம்' ஆகும்.

* மிகைபட உண்பவனுக்கு யோகம் இல்லை. உணவின்றி தனிமையில் இருக்க விரும்புபவனுக்கும் யோகம் கிடையாது. மிகுதியாக உறங்குபவனுக்கும், மிகுதியாக விழித்திருப்பவனுக்கும் அது இல்லை. இவற்றில் எல்லாம் அளவோடு இருப்பதே யோகம்.

* பசுவின் பால், அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளதென்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் இருக்கிறான். எனினும் இதயத்தில் தியானத்தால் எழுந்தருளுகிறான்.

மன அமைதி மகிழ்ச்சி


Add caption
மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்களா? சில நெறிமுறைகளை நீங்கள் பின் பற்றுவீர்களானால், உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். பயற்சி செய்து பாருங்கள்.

1. தீயவர்களோடு உறவு கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்கள் மனமும் தீமை உடையதாகிவிடும்.

தீயோரைக் காண்பதும் தீது

தீயோர் சொற்கேட்பதும் தீது

தீயோடருடன் இணங்கி இருப்பதும் தீது.

நல்லோரைக் காண்பதும் நன்று

நல்லோர் சொற் கேட்பதும் நன்று

நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று

நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று.

2. சண்டை, ச்ச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். சளசளவெனப் பேசுவதைத் தவிருங்கள். அது உங்கள் சக்தியை வீணாக்கும். வீணான விவாதத்தில் உங்கள் நேரத்தைப் பாழ்படுத்தாதீர்கள். வீண் சர்ச்சை பகையை வளர்கும்.

3. உங்கள் தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொள்ளுங்கள். அதீதமான ஆசையே துன்பத்திற்கு காரணம்.

ஆசைப்படப்பட ஆய்வறும் துன்பம்

ஆசை விட விட ஆனந்தமாமே!

4. ஒரு போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தடை. உங்கள் மனத்திற்குச் சரி என்று பட்டதை உறுதியாகப் பின் பற்றுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நேர்மையுடனும், மனச் சாட்சியுடனும் செயலாற்றுவீர்களேயானால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.


நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன்

நீங்களே உங்களுக்கு உற்றபகை

என்ற கீதை வாக்கியத்தை ஒரு போதும் மறவாதீர்கள்.

5. மற்றவர்களது கண்டனத்திற்கோ, விமர்சனத் திற்கோ ஒரு போதும் செவி சாய்க்க வேண்டாம். “உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூடமுடியுமா?” உலகத்தார் எப்போதும் குறைசொல்க் கொண்டே தான் இருப்பார்கள்

6. பெயருக்கும், புகழுக்கும் ஒரு போதும் ஆசைப்படாதீர்கள். உங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தால் ஆண்டவன் உரிய பலனைத் தருவான்.

ஏனெனில் பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்யும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை என்றால் ஏமாற்றத் தால் நாம் மனம் தளர்ந்து போவோம்.

7. எப்போதும் மகிழ்ச்சியாகவும், மனநிறை வுடனும் இருங்கள். கவலைப்படுவதை விட்டொழியுங்கள்.

8. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இறைவனது சங்கல்பமே என்று கொள்ளுங்கள். ஒரு போதும் துயரம் உங்களை வாட்டாது.

9. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. பிறரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாரோடு அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளுங்கள்.

10. மனதாறப் பிறரைப் பாராட்டுங்கள். தூற்றுவதால் பகையும், மனக்கசப்பும் நேரிடும். மாறாக போற்றுவதால் உறவும் வளருமன்றோ!

11. சமமானவர்களுடன் “மைத்ரி” (சிநேக பாவத்துடன்), தாழ்ந்தவர்களிடம் கருணை, உயர்ந்தவர்களிடம் மரியாதை, தீயவர்களிடம் அலக்ஷயம் (உபேஷை) ஆகியவை சித்தப் பிரசாதத்தைத் தரும். மன அமைதியைத் தரும் என்கிறார் பதஞ்சலி முனிவர். இந்த குணங்களைக் கொள்ளுங்கள்.

12. மனம் போன போக்கெல்லாம் போக விடாமல், அலைபாயும் மனதைக் கடிவாளம் போட்டு நிறுத்தப்பழகுங்கள். ஒரு போதும் மனம் தளர வேண்டாம். தவநெறியை மேற்கொண்டு மாபெரும் சக்தியைப் பெறுங்கள்.

மனம் தான் நம்மைத் தளைக்குள் சிக்க வைக்கிறது. அந்த மனதைக் கட்டி ஆளும் போது, அதுவே நமக்கு விடுதலையைத் தேடித் தந்து ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.

சக்ரவர்த்தி ஏனைய அரசர்களை எல்லாம் எப்படி வெற்றி கொண்டு. தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறாறோ, அது போல உங்கள் புலன்களை அடக்கி ஆண்டு, மனதை நிலை நிறுத்தி, அமைதியால் திளைக்கச் சதா சர்வ காலமும் தியானம் செய்யுங்கள்.

13. தீய எண்ணங்களை மனதில் புக விடாமல் அணை போடுங்கள். மனதை ஒரு முகப்படுத்தி இறை தியானத்தில் ஈடுபட்டு, சச்சிதானந்த ஸ்வரூபத்தில் திளைத்து, பேரானந்தத்தில் நிலைத்திருப்பீர்களாக!

பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்

தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை.


முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி.


'வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.


தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்று தான் பொருள்.


அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆறுமுறை தோல்வியைச் சந்தித்தபின் அரசியல் வெற்றியை ஆதாயமாக்கிக் கொண்டவர். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய பாதை என்பதில் அவருக்கு உறுதி இருந்தது. எனவே அவர் வெற்றியாளரானார்.


வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், தோல்வி குறித்த பயத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ... எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவதில்லை என்பது தான் நிஜம்.


ஜுராசிக் பார்க் என்றால் நமது நினைவுக்கு சட்டென வரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று டைனோசர். இரண்டாவது இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க். அவர் தெற்கு கலிபோர்னிய திரைப்படக் கல்லூரியான யு.எஸ்.சி. யில் சேர இரண்டு முறை விண்ணப்பித்தார். இரண்டு முறையும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.


தோல்வியால் தளர்ந்து விடாமல் ஸ்பீல் பெர்க் வளர்ந்தார், உலகெங்கும் அவர் புகழ் பரவியது. எந்தக் கல்லூரி அவரை நிராகரித்ததோ, அதே கல்லூரி 1994-ம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது! தோல்விகளால் ஒரு வெற்றியாளனைப் புதைக்க முடியாது என்பதை உலகம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டது.


விழிப்புணர்வு என்பது வேறு, பயம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால், அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறி விடக் கூடாது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தோல்வி குறிந்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை தரும்.


வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து குறித்த பயத்தில் `சீட் பெல்ட்' போட்டுக் கொள்வது எச்சரிக்கை உணர்வு. விபத்து குறித்த பயத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.


தோல்வி குறித்த பயத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை, கடைகளில் விற்பனையாவதில்லை. உங்களுக்கு வேறு யாரும் வந்து தன்னம்பிக்கை எனும் ஆடையைப் போர்த்தி விடவும் முடியாது. தன்னம்பிக்கை என்பதை நமக்கு நாமே தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கான கூட்டைத் தானே உருவாக்கும் ஒரு சிட்டுக் குருவியைப் போல!

அன்னைசிரிக்கும்போது சிரித்து

அழும்போது துடிதுடித்து

தூங்காதபோது கொஞ்சி குலாவி

தூங்கும்போதும் தூங்காது

கண்ணின் கருமணிஎன காத்து

நம் வளர்ச்சியில் மகிழ்ச்சிக் கொண்டு

நம் உயர்வில் பூரிப்பு கொண்டு

தன் நலம் கருதாது

தியாக செம்மலை இருக்க

அன்னையைத் தவிர

யாரால் முடியும்?

அன்னையே உன்னை

வணங்குகிறேன்

வணங்கினாலும் வணங்காவிட்டாலும்

வாழ்த்தைத் தடை இன்றி கொடுக்க

அன...

பராசக்தி தத்துவம்பெண் பிறவி என்பது பாவம் அல்ல! பெண் சிருஷ்டியில் தான் பராசக்தி தத்துவமே அடங்கி உள்ளது"

"எவ்வளவுக்கெவ்வளவுப் பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுகிறார்களோ அவ்வவளவுக்கவ்வளவு உலகம் அழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுகிறது"

"ஆன்மிகத்தின் உச்சியை அடையும் திறமை பெண்களுக்கு உண்டு"

"தூய உணர்வோடும், பயபக்தியோடும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தொண்டு செய்ய வேண்டும்"

"சிறிய அணு குண்டு பெரிய பெரிய காரியங்களைச் செய்கிறது. நீ செய்யும் சின்னஞ்சிறிய தொண்டிற்கும் அணுகுண்டிற்குள்ள சக்தி உண்டு"

"நீங்கள் செய்யும் தொண்டுகளை வைத்து உங்கள் பேரன், பேத்திகளுக்கு என் அருளைக் கொடுப்பேன்"***

பிற:

***

"தொண்டு என்பது அடிமை வேலையன்று. அது தெய்வப்பணி"

"நன்மையை நூறுபேர் விரும்புவார்கள். உண்மையை சிலரே விரும்புவர்"

"ஒரு நாட்டின் நலம் அந்நாட்டுப் பெண்களின் நிலையைப் பொறுத்தது"

"வாதாடப் பலருக்குத் தெரியும். உரையாட ஒரு சிலருக்கே தெரியும்"

"மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பு"

***

காரணமின்றி கண்ணீர் வரும் - உன் கருணை விழிகள் கண்டால்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!


எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் தீயவராவதும்… வளர்ப்பு நட்பு இவற்றால்தான். இன்றைய இளைய தலைமுறைஒரு சில மாற்றங்களைச் செயல்படுத்தினால் உலக அரங்கில் நம் பலம் மேலும் ஓங்கும்.

தமது பெற்றோரின் வருமானத்தை அறிந்து அதற்கேற்ப சிரமம் கொடுக்காதவாறு படிக்கவும் செலவின் சிக்கனமும், பண்பாட்டில் பிடிப்பும் கட்டாயம் வேண்டும். தாய் மொழியில் உரையாடும் துணிச்சல் தேவை. தமிழ்நாட்டில் நன்கு தமிழ் பேசத் தெரிந்த இருவர் கூட ஆங்கிலத்தில் உரையாடுவது வருத்தமளிக்கிறது. மொழி என்பது கருத்தொடராக வருவதால் தான், தாய்மொழி எனக் கூறப்படுகிறது. தாய்மொழியில் உரையாடினால் மற்றவர்கட்கு புரியாது என்ற நிலையில் பிறமொழியில் பேசுவதை வழக்கமாய் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அம்மாவின் சகோதரனை – மாமா என்றும், சகோதரியை சின்னம்மா என்றும், அப்பாவின் சகோதரனை சித்தப்பா என்றும், சகோதரியை அத்தை என்றும் பல உறவுப் பெயர்களில் அழைக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் ஆண்டி (Aunty) என்றும் அங்கிள் (Uncle) என்றும் எல்லோரையும் அழைக்கின்றோம்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்

மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்”

என்ற பாரதி வாக்கு உண்மையே.

தாய் வழி வாழ்க்கை வாழும் நம் இளைஞர்கள் தாய் மொழியிலேயே பேச விரும்ப வேண்டும்.

மழை வெள்ளம் சேதப்படுத்தாமலிருக்க அணை கட்டி தேக்கி வைத்து முறையாகப் பயன் படுத்துவது போல், இளைஞர் பலம் விரையமாகாமல், மேல் நாட்டு பண்பாடற்ற கலாச்சாரத்துக்கு அடிமையாகாமல் இருக்க கல்வி நிறுவனங்கள் பாடங்களைப் போதிப்ப துடன் நல்ல பழக்கங்களையும் ஒழுக்கமான வாழ்க்கை நெறிகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.

உலக நாடுகளில் நம் நாட்டு இளைஞர் பலம் ஒப்புவகை இல்லாதது. கடந்து வந்த பாதையை அடிக்கடி நினைவுகூர்ந்து, இன்றைய நல்ல நிலையில் மற்றவர்கட்கு இயன்றஅளவு உதவும் அன்பர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெருமைப்பட வேண்டிய செய்தி.

பெற்றோர்களும் தம் வீட்டு இளைஞர்கட்கு நல்ல வழிகாட்டி, சரியான பாதையில் பயணத்தை தொடரச் செய்ய வேண்டும். இன்றைய சிறார்கள் தான் நாளைய இளைஞர்கள் என்பதால் அவர்கட்கு நல்ல பழக்கங்களை கற்பிப்போம். இதற்கு இயற்கை வளமும் துணையாக இருப்பதை இனி பார்ப்போம். வாழ்க வளமுடன்

தெய்வம் என்ன செய்கிறது?நமக்கு உள்ளேயும், வெளியேயும் நிகழ்கின்ற செயல்கள் அனைத்தும் தெய்வத்தின் செயல்கள் அல்ல என்றே வைத்துக் கொள்வோம்.
இரவில் தாயின் அருகே படுத்து உறங்கும் குழந்தை, திடீரென கண் விழிக்கிறது. அப்போது சுற்றும் முற்றும் சூழ்ந்திருக்கிற இருளைக் கண்டு அது அச்சம் அடைகிறது. அச்சம் தோன்றியதும் உடனே அதற்குத் தாயின் நினைவு வருகிறது. அந்தத் தாய் எங்கே இருக்கிறாள் என்று தன் கைகளால் தடவிப் பார்க்கிறது. அவள் தன் அருகிலேயே படுத்திருக்கிறாள் என்பதைக் கண்டதும் அது அச்சம் நீங்கி ஆறுதல் அடைகிறது. அப்போது அந்தத் தாய் என்ன செய்துவிட்டாள்? அவள் ஒன்றுமே செய்யவில்லை. அந்தக் குழந்தை கண் விழித்ததோ அல்லது கைகளால் அது தன்னைத் தடவிப் பார்த்ததோ எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவள் தன்னையும் தன் குழந்தையையும் மறந்தவளாய் உறங்கிக்கொண்டுதான் இருந்தாள் என்றாலும் அவள் தன் அருகில் இருக்கிறாள் என்ற உணர்வு ஒன்றே, குழந்தையின் அச்சத்தைப் போக்கி அதற்கு ஆறுதலை அளித்து விட்டது.இது மாதிரி,‘தெய்வம் நமக்கு எதுவுமே செய்ய வேண்டாம்; தெய்வம் நமக்குத் துணையாக இருக்கிறது’ என்ற உணர்வு ஒன்றே நம்முடைய அச்சங்களைப் போக்கும் ஆறுதலை நமக்கு அளிக்கும்!

மாற்று எரிபொருள் ஆராய்ச்சி!

ஒவ்வொரு முறை பெட்ரோல் மற்றும் டீஸல் விலை ஏறும் போது கவலைப்படுவது உலக மக்களின் வழக்கமாகி விட்டது.

தனிப்பட்ட முறையில் வாகனங்களுக்காக - அது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆனாலும் சரி, காரானாலும் சரி- அதிக பணத்தைச் செலவழிக்க வேண்டியதாக இருக்கிறது. லாரி போன்ற வாகனங்கள் கறிகாய் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை ஏற்றிச் செல்வதால் அந்தப் பொருள்களின் விலையும் அபரிமிதமாக ஏறி விடுகிறது.

வாகனங்கள் கக்கும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மானாக்ஸைடு உள்ளிட்ட நச்சுப் புகையால் நகரின் வளி மண்டலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
குளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமாதலுக்கு இந்த வாகனங்களின் நச்சுப்புகையே முக்கிய காரணம். அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் நேர் மேலே ஓஸோன் படுகையில் பெரிய துளை இந்த புவிவெப்பமாதலால் ஏற்பட்டு விட்டது.

இதனால் உலக மக்களுக்கு பெரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தோல் வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

கடலில் அரை டிகிரி செல்ஸியஸ் வெப்பம் உயர்ந்ததால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் ஆபத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆகவே பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருளுக்கு சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்காத மாற்று ஏற்பாடை ஆராய்வது இன்றைய சூழ்நிலையில் அவசியமாகி விட்டது.

உலகில் 174 கோடி வாகனங்கள் இன்று ஓடுகின்றன. இவற்றிற்கு அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீஸல் போட்டு கட்டுபடியாகவில்லை. உலகில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் தோண்டித் தோண்டி சுரண்டப்பட்டு வற்றி வருகின்றன. இன்னும் 40 ஆண்டுகளில் ஒரு சொட்டு பெட்ரோல், டீஸல் இல்லாத நிலை உலகில் ஏற்பட்டு விடும்!

இந்த நிலை ஏற்பட்டால் உலகில் உள்ள அனைத்து போக்குவரத்து சாதனங்களும் செயல் இழக்கும்! ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், கார், லாரிகள், டீஸலால் இயக்கப்படும் ரயில்கள், பெட்ரோலால் இயங்கும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்தும் நின்று போனால் உலகின் இயக்கமே ஸ்தம்பித்து விடும்!

பெட்ரோல் மற்றும் டீஸலை அனைவரும் ஏன் நாடுகின்றனர்? இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம்:- அதில் எனர்ஜி டென்ஸிடி எனப்படும் ஆற்றல் அடர்த்தி மிக அதிகம் உள்ளது. பெட்ரோல் ஆற்றலை உடனடியாகத் தருகிறது.

இரண்டாவது காரணம்:- ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அதைக் கொண்டு செல்வது மிகவும் சுலபம். பைப்புகள் மூலமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பெட்ரோல் விரைவாகவும் சுலபமாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகள், பெட்ரோல் போகிகள் மூலமாகவும் துரிதமாக பெட்ரோல், டீஸலைக் கொண்டு செல்ல முடிகிறது.

மூன்றாவது காரணம்:- மற்ற எரிபொருளை விட எண்ணெயை சுலபமாகவும் அதிகமாகவும் இன்று பெற முடிகிறது.

நிலத்தடியிலும் ஆழ்கடல் அடியிலும் மறைந்திருக்கும் இந்த எண்ணெயை அதி நவீன அறிவியல் உபகரணங்கள் சுலபமாகக் கண்டுபிடித்து மேலே எடுத்து வர வழிவகை செய்கின்றன. பின்னர் இது சுத்திகரிக்கப்படுகின்றது.

கச்சா எண்ணெயை கறுப்புத் தங்கம் என்று சொல்கிறோம். பணத்தை அள்ளித் தரும் கச்சா எண்ணெய் இருக்கும் நாடுகள் எண்ணெய் வள நாடுகள் என அழைக்கப்படுகின்றன. அரபு நாடுகளின் செல்வக் கொழிப்புக்கு இந்த கறுப்புத் தங்கமே காரணம்!

ஆக, இந்த நிலையில் எண்ணெய் இல்லாத சூழ்நிலை ஏற்படப் போவதைக் கருத்தில் கொண்டு மாற்று எரிபொருளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டுமானால் அப்படிப்பட்ட மாற்று எரிபொருள் அதிக ஆற்றலை உடனடியாகத் தருவதாகவும் அதிக அளவில் கிடைக்கக் கூடியதாகவும் கிடைக்கும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாகவும் விரைவாகவும் கொண்டு செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தோடு விலை குறைவாகவும் இருந்து சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கெடுக்காத ஒன்றாக இருந்தால் மிகப் பெரிய வரபிரசாதமாகிவிடும்.

இந்த மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் ஏராளமானவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். எதினால் என்பது கரும்பிலிருந்து எடுக்கப்படும் மாற்று எரிபொருள். லிக்விபைட் பெட்ரோலியம் கேஸ் (எல்.பி.ஜி), கம்ப்ரெஸ்ட் நேச்சுரல் கேஸ் (சி.என்.ஜி), எலக்ட்ரிக் கார்கள், ஹைப்ரிட் கார்கள், ஹைட்ரஜன் கார்கள், சோலார் பவர் வாகனங்கள் என ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் அதிசயமாக இருக்கப் போவது ஹைட்ரஜன் கார் தான்!

அடுத்த 40 வருடங்களில் உலக மாற்றங்கள்


சமகால ஆய்வு, பிரதான செய்தி

புதிய வருடம் தொடங்கி விட்டதால் ஆய்வு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன மேற்குலகில் வருடத் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் வெளியிடும் அறிக்கைகள் நல்ல வரவேற்புப் பெறுகின்றன. காத்திரமான ஆய்வுகளின் அடிப்படையில் எதிர்காலத் திட்டமிடல் நடத்தப்படுகிறது.

அல்வின் ரொவ்லர் (ALVIN TOFFLER) 1970 களில் எதிர்கால அதிர்ச்சிகள் (FUTURE SHOCKS)என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார் அந்த நூலில் அவர் பட்டியலிட்ட எதிர்வு கூறல்கள் அப்படியே நடந்துள்ளதாகப் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர் உலகச் செய்திகள் படுவேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவும் என்ற அவருடைய கூற்று அப்படியே நிறைவேறியதால் அவர் சொல்வதை நம்புவதற்கு உலகம் தயாரகி உள்ளது.

எதிர்கால அதிர்ச்சிகள் என்ற தனது நூலில் ஆண்களை ஆண்களும் பெண்களைப் பெண்களும் திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கும் சட்டங்கள் மேற்கு நாடுகளில் இயற்றப்படும் என்று கூறினார் வாடைகைத் தாய் மார்களை அமர்த்தி அவர்களுக்குத் தமது விந்தணுக்களைச் செயற்கை முறையில் செலுத்தி மகப் பேற்றையும் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

கட்டுக் கதை போல் இருந்த இந்த எதிர்வு கூறல்கள் இன்று நடை முறையில் காணக் கூடியதாக இருக்கிறது ரொவ்லர் கூட்டமைப்பு (TOFFLER ASSOCIATES) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு வருடத் தொடக்க எதிர்வு கூறல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அண்மையில் வெளிவந்த சில முக்கிய எதிர்காலம் பற்றிய அறிவிப்புக்களைப் பார்ப்போம். உலக விவகாரங்களில் பெண்களின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கும். ஆண்கள் தமக்கென்று ஒதுக்கிய துறைகளில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் நுளைவார்கள் இதனால் அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான மாற்றங்கள் ஏற்படும்.

உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரான இஸ்லாம் மதத்தினர் மேற்கு நாடுகளில் குடியேறுவார்கள் எவ்வளவு முயன்றாலும் இதைத் தடுக்க முடியாது அரசுகளின் கொள்கைகள், சட்டங்கள், சமூக நலன் திட்டங்களில் இதன் மூலம் மாற்றங்கள் ஏற்படும்

உணவு. தொழிற்சாலை ஆக்கங்கள், எரிபொருள் போன்ற வற்றை கடல் பாதை மூலம் நகர்த்தும் கடற்கலங்கள் மிகப் பெரியதாகவும் வேகமாகச் செல்லக் கூடியதாகவும் மாற்றியமைக்கப் படும் இது துறைமுகங்களைப் பெரிதாக்க வேண்டிய தேவையை உருவாக்கும்.

மேலும் இந்தப் பாரிய கடற் கலங்களின் நகர்வுக்கும் பொருத்தமாகச் சுயெஸ் கால்வாய் பனாமா கால் வாய் ஆகியன பெருப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மலாக்கா நீரிணைக்கு மாற்றீடாகத் தாய்லாந்திற்கும் மலேசியாவுக்கும் இடையிலுள்ள ஒடுங்கலான தரைப் பரப்பில் புதிய கால்வாய் தோண்ட வேண்டி வரும்.

கிரா (KRA) என்ற பகுதியில் புதிய கால்வாய் தோண்டுவதற்கான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறினால் மலாக்கா நீரிணை மூலம் முக்கியத்துவம் பெறும் சிங்கப்பூர் துறைமுகம் வீழ்ச்சி அடையும்

உலக ஒழுங்கிற்குக் (WORLD ORDER) கட்டுப்படாத நாடுகளின் எண்ணிக்கை அதிகளவில் குறையும் ஈரான் வட கோரியா போன்ற நாடுகள் உலக ஒழுங்கிற்கு கட்டுப்படக் காலம் எடுக்கும்

உலகின் பொருளாதார வல்லரசாகச் சீனா வளர்ச்சி அடையும் சீனாவின் யுவான் நாணயம் அமெரிக்காவின் டாலரை வீழ்த்தி விடும்.

சீனாவின் பொருளாதார ஆதிக்கம் காரணமாக வல்லரசாக வரத்துடிக்கும் இந்தியா, பிறேசில் வெனசுவெலா போன்ற நாடுகள் சீனாவுடன் கூட்டுச் சேர வேண்டி வரும்.

உலகின் அதி முற்போக்கான தொழில் நுட்பத் தேவைகளுக்கு வேண்டிய கனிம வளங்களில் கிட்டத்தட்ட 90 விகிதமானவை சீனாவில் காணப்படுகின்றன. மிகுதி அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவற்றில் உள்ளன இதனால் சீனாவின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும்.

எண்ணை, எரிவாயு போன்ற வற்றால் செல்வந்த நாடுகளாகிய சவுதி அரேபியா, ருஷ்யா, வளை குடா நாடுகள், வெனசுவெலா, ஈரான், ஈராக் போன்றவை மாற்று எரிபொருள் மற்றும் சூரிய சக்திப் பயன்பாடு, கடல் அலை மூலம் மின்சாரத் தயாரிப்பு. காற்றாடி மின்சாரம் என்பனவின் பரவலான பயன்பாட்டில் நிதி வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

பூமி வெப்பமடைதல் தொடர்வதால் கடல் மட்டம் உயரும் சிறிய தீவுகள் கடலில் மூழ்கும் கரையோரங்கள் காணமற் போகும் வடதுருவப் பனிப்பாறைகளின் மறைவால் அப்பகுதியில் பெரும் நிலப்பரப்பபு கடல் மட்டத்திற்கு மேல் உயர்ந்து நிற்கும் அதற்கு உரிமை கோரும் நோர்வேயும் ருஷ்யாவும் செல்வாக்குப் பெறுவது நிட்சயம்.

கணினிப் பாவனை கூடுதலாகும் பெத்தாபைற் வேகத்தில் இயங்கும் சுப்பர் கணினிகள் மலிவான விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் கணினிகளில் சேமிக்கப் படும் தகவல்களின் அளவும் எண்ணிக்கையும் எல்லை கடந்து செறிந்துள்ளதால் அவற்றை முழ அளவில் பயன்படுத்த உலக மக்களால் முடியாது.

மல்துஸ் (MALTHUS)என்ற சமூகவியலாளர் மக்கள் தொகை உயரும் போது உணவு மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்வு கூறினார். அவருடைய கூற்றைப் பொய்ப்பிக்கும் விதத்தில் உணவுத் தயாரிப்பும் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திடடமும் விரிவாக்கப்படும்.

ஐரோப்பாவின் சிறிய தரைப்பரப்பு நாடுகளான சுவிற்சர்லாந்து, சுவிடன், பெல்ஐpயம், நெதர்லாந்து, அவுஸ்திரியா போன்றவை பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் தமது பொருளாதார உபாயங்களை மாற்றியமைக்க இவை பெரிய நாடுகளின் உதவியை நாடலாம்.

உணவு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சுப்பர்- பவர்களாக (SUPER_POWERS) அமெரிக்காவும் கனடாவும் முன்னிலையில் இருக்கப் போவது நிட்சயம் கடல் மட்டம் உயர்வதால் கோடிக் கணக்கான மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர நேரிடும் இது உலகம் எதிர்நோககும் மிகப் பெரிய வருங்காலப் பிரச்சனையாக இருக்கும்.

மாற்று எரிபொருள் இருக்க பெட்ரோல் இறக்குமதி ஏன்?


"எத்தனால்" இது கரும்பு, மக்காசோளம், போன்றவற்றில் இருந்து தாயாரிக்கப்படுகிறது.

இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் இன்றைய இந்தியாவில் "எத்தனால்" உற்பத்தி 4,80,000 டன்தான்.

"எத்தனால்" உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் "எத்தனால் பம்ப்" தனியாக இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் "எத்தனாலைக்" கலந்து கொள்ளலாம். "எத்தனாலில்" மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு.

"எத்தனாலின்" விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, "எத்தனால்" அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம்.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

மரியாதையை

பல நேரங்களில், மரியாதை என்பது

உங்கள் பதவிக்காகவும்,

பணத்திற்காகவும் கொடுக்கப்படுகிறது

அதை உங்களுக்காக தரப்பட்டதாக நினைத்தால்,

அது முட்டாள்தனம்.


எப்போது மதிப்பு உயரும்?

ஒருவன் ஒரு விஷயத்தை

தெரிந்து வைத்திருப்பது என்பது வேறு

தெரிந்து வைத்திருப்பதைச்

செயல் படுத்துவது என்பது வேறு

... எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறான்

என்பதில் ஒருவன் மதிக்கப்படுவதில்லை

தெரிந்து வைத்திருப்பதை

எப்படிச் செயல் படுத்துகிறான் என்பதை பொறுத்தே

அவன் மதிப்பு உயரும்


மன்னிப்புக் கேளுங்கள்


தப்பு செய்து விட்டீர்களா?

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேளுங்கள்.
"உர்" என்ற முகத்துடன் கேட்கப்படுகின்ற மன்னிப்பு,
எதிராளிக்கு நீங்கள் செய்கின்ற
... இரண்டாவது பெரிய அவமானம்.
அதைவிட
மன்னிப்புக் கேட்காமலேயே இருக்கலாம்


குரலை உயர்த்துவது மட்டுமே,
நல்ல விவாதம் ஆகிவிடாது
கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கிவிடுவத்தின் மூலம்,
அவனை ஜெயித்து விட்டதாக நினைப்பது
முட்டாள்த்தனம்.


முகத்துக்குக்கூட சாமர்த்தியம் வேண்டும்.
என் முகத்துக்கு,
அத்தனை சாமர்த்தியம் போதாது என்றே நினைக்கிறேன்
பல சமயங்களில்,
உள்ளத்தை அப்படியே வெளிப்படுத்தி விடுகிறது.

HOW TO IMPROVE YOUR LIFE


1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.

2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment

3. Don't overdo; keep your limits

4. Don't take yourself so seriously; no one else does

5. Don't waste your precious energy on gossip

6. Dream more while you are awake

7. Envy is a waste of time. You already have all you need..

8. Forget issues of the past. Don't remind your partner of his/ her mistakes of the past. That will ruin your present happiness.

9. Life is too short to waste time hating anyone. Don't hate others.

10. Make peace with your past so it won't spoil the present

11. No one is in charge of your happiness except you

12. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.

13. Smile and laugh more

14. You don't have to win every argument. Agree to disagree.

Community:

15. Call your family often

16. Each day give something good to others

17. Forgive everyone for everything

18. Spend time with people over the age of 70 & under the age of 6

19. Try to make at least three people smile each day

20. What other people think of you is none of your business

21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.

Life:

22. Put GOD first in anything and everything that you think, say and do.

23. GOD heals everything

24. Do the right things

25. However good or bad a situation is, it will change

26. No matter how you feel, get up, dress up and show up

27. The best is yet to come

28. Get rid of anything that isn't useful, beautiful or joyful

29. When you awake alive in the morning, thank GOD for it

30. If you know GOD, you will always be happy. So, be happy.

While you practice all of the above, share this knowledge with the people you love, people you school with, people you play with, people you work with and people you live with, not only will it enrich YOUR life, but also that of those around you.

சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது


குறுகலான சாலையில்
ஒரு வாகனத்தின்
தவறான நிறுத்தத்தினால்
ஏற்பட்டது போக்குவரத்து நெரிசல்
இருப்பினும் கடந்து செல்லும்
வாகன ஓட்டிகள் திட்டிக்கொண்டும்
அந்த வாகனத்தை
முறைத்து கொண்டும் செல்கின்றனர்
ஆனாலும் எவரும்
அந்த வாகனத்தை சேதப்படுத்தவில்லை
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது
முன்பெல்லாம்
பெட்ரோல் டீசல் விலையேற்றம்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தற்போது வாரம் இருமுறை
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது

இலங்கை கடற்படையால்
மீனவர் கொல்லப்படுவதும்
சிறைபிடிக்கப்படுவதும்
தினசரி செய்திகளில்
படித்துப் படித்து
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது

முயற்சியில்லாத கனவு பலிக்காது


தவறு செய்வது குற்றம் இல்லை
குறை சொல்லாத சுற்றம் இல்லை
யானைக்கும் அடி சறுக்கும் - இதைப்
புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்...

... வாழ்கை என்பது
வழுக்கு பாறை - அதில்
வழுக்கி விழுவது தவறல்ல
வழுக்கி விழுவதையே வழக்கமாய்
கொண்டிருத்தல் வாழ்க்கையல்ல....

தோல்வியில்லாத வெற்றி இனிக்காது
முயற்சியில்லாத கனவு பலிக்காது

சந்தோசம்


எந்தவொரு நல்ல யோசனையையும் செயலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படுகிற சந்தோசம் அலாதியானது. மனபூர்வமாகவும், நேர்மையாகவும் அதை செய்தால் சந்தோசம் இரட்டிப்பாகும்

அறுபதைக் கடந்துவிட்டேன்


ஓ....புரிகிறது....
எது பிடிக்குமோ
அதை மட்டுமே சாப்பிடுவேன் என்ற
பிடிவாதம்
கரைந்துகொண்டிருக்கிறது.
... எது கிடைக்கிறதோ
அதைப் பிடித்ததாக்கிக்கொள்ளும்
பக்குவத்தை
நான் பெற்றுக்கொண்டு வருகிறேன்
இந்த
அருமையான பக்குவம் எப்படி கைவரப்பெற்றேன்?
ஓ ....புரிகிறது....
நான்
அறுபதைக் கடந்துவிட்டேன்

துன்பங்களுக்கு காரணம் நல்லவர்கள்தான்

இன்று,இந்த சமுதாயம்


அனுபவித்துக்கொண்டிருக்கும்


பல துன்பங்களுக்கும்,அநியாயங்களுக்கும்


காரணம்,


கெட்டவர்கள் அல்ல.


அமைதியாக கண்ணை மூடிக்கொண்டிருக்கும்


நல்லவர்கள்தான்


அன்பு


பிரச்சனைக்கும்,
ஒரு வகையில்,
அன்புதான் காரணமாகிறது.
ஆம்,
அன்பு அதிகமாகிறபோது,
... எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
எதிர்பார்ப்பு அதிகமாகிறபோது,
ஏமாற்றம் அதிகமாகிறது.
ஏமாற்றம் அதிகமாகிறபோது,
கோபம் பெரிதாகிறது.
அந்த கோபம்,
பிரச்சனையைப் பெரிதாக்கி,
பிரிவை ஏற்படுத்தி விடுகிறது

மௌனம் அதிகம் சாதிக்கும்கணவன்,மனைவியிடமும்

மனைவி,கணவனிடமும்

தோற்றுப் போகத் தயாராக இருந்தால்

அங்கே

குடும்பம் ஜெயிக்கிறது


ஞாபகம் - ஞாபக மறதி

நடந்த நல்ல விஷயகளில்

மிதந்து கொண்டிருப்பதற்காக

"ஞாபக"த்தையும்,

... நடந்த கெட்ட விஷயங்களில்

மூழ்கி விடாமல் இருப்பதற்காக

"மறதி"யையும்

ஆண்டவன் நமக்குத் தந்திருக்கின்றான்

பல நேரங்களில்

பேச்சு சாதிப்பதை விட

மௌனம் அதிகம் சாதிக்கும்

சில நேரங்களில்

பேச்சு காயப்படுத்திவிடவும் கூடும்

... முடிந்தவரை

பிறர் மீதான கோபங்களில்

மௌனம் காத்து

மகிழ்ச்சி சேர்க்க முயலலாமே.

பருவப் பெண்


பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது.

ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள்.

பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.

பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது.

இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது.

உண்மையில் பாய்பிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாதுகாப்பானதா? ஒரு அலசல்.

பள்ளி – கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.

பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில்தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள் கிடைக்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள். கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும் அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம்பமாகிறது.

கல்லூரிக்குள் நுழையும்போது சுதந்திரம் அதிகமாகிறது. பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இருந்து விலகி வெளியூர்களில் தங்கி படிக்கும் சூழல் அனேகம் பேருக்கு ஏற்படுகிறது.

இப்போதெல்லாம் பெண்கள்கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்று தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண்-பெண் நட்புக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது. வயதுக்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே பழகுகிறார்கள்.

நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக` மாறி விடுகிறான்.

`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக

காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான்’ என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது. அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும் நம்பி விடுகிறார்கள்

பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும் ஏமாந்து விடுகிறார்கள்.

நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது. இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்பிரண்ட்’ வேறு கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம்’ என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது.

இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால் என்னாகும்? அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள்.

எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்பிரண்ட் வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள்,

திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள்.

பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் பாய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது. இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும்

இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்’ செய்யும் பாய்பிரண்டுகளும் இருக்கவே செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான்.

எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

பாய்பிரண்ட் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண்களும், பெற்றோரும் தெளிவுடன் இருப்பது அவசியம். அதற்கான சில விஷயங்கள்…

* பள்ளி கல்லூரிக் காலத்தில் படிப்பு, எதிர்கால லட்சியம் சம்பந்தமாக பேசுவது, விவாதிப்பது, உதவிக் கொள்வது மட்டுமே நட்பாகும். அதைத் தாண்டி பரிசு கொடுத்தல்- பெறுதல், தனிமையில் சந்தித்தல், புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் எல்லாமே நட்பு வட்டத்தை தாண்டியவை, பிரச்சினைக்குரியவை என்பதை பெண்கள் நினைவில் வையுங்கள்.

* பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியதுமே பருவம் பற்றியும், ஆண்-பெண் நட்பு பற்றியும் பெற்றோர் விளக்க வேண்டியது அவசியம்.

* ஆண்-பெண் நட்பின் அவசியம் எதுவரை, அதன் எல்லை எதுவரை என்பது அந்தப் பருவத்திலேயே விளக்கப்பட்டுவிட்டால் கல்லூரிப் பருவத்தை எட்டும்போது இயல்பாகவே பெண்கள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வார்கள்.

* மகள்களின் மனநிலையை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். `அடக்கி வளர்க்கிறேன்’ என்று நாலு பேர் முன்னால் கண்டிப்பது, அடிப்பது கூடாது. சந்தேகப்படுவது, சதா குறை கூறிக் கொண்டே இருப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

* பள்ளி நிர்வாகத்தினரும் ஒவ்வொரு மாணவ-மாணவிக்குப் பின்னும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கல்வி கற்பிப்பதோடு சமூகம் சார்ந்த ஒழுக்கமும், நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தர வேண்டும்.

* பருவப் பெண்களும் பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றக்

கூடாது. தெரிந்து பழகுகிறேன் என்று ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* ஜாலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான் ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள்.

* ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவிர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள்.

* தேவையில்லாமல் தொடர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும், தொல்லை கொடுப்பவர்களை பற்றியும் பெற்றோரிடமும், பொறுப்புக்குரியவர்களிடமும் சொல்லி வையுங்கள். பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் `பாய்பிரண்டின்` மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். உங்கள் லட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்

மனித நேயத்தை பேண வேண்டும்


மனிதன் பிறப்பிலும், இறப்பிலும் மாற்றமில் லை. ஆனால் இடையில் ஜாதி என்ற அடிப்படையில் பிரிவினை வாதம் மூலம் மோதல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். கல்வியால் தான் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும். அனைவரும் கல்வி கற்று ஜாதியை மறந்து மனித நேயத்தை பேண வேண்டும்

சொர்க்கத்தைப் பெற்

1) பேசினால் உண்மையே பேசுங்கள்!

2)வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்!

3)அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!

4)கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!

5) பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!

6) கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்- தடுத்துக் கொள்ளுங்கள்!

எண்ணிப் பாருங்கள்


•கடுமையான ஒரு வார்த்தை பேசுமுன், பேசவே முடியாதவர்கள் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.

•சாப்பாடு சுவையாக இல்லை என்று புகார் சொல்லுமுன், சாப்பிட எதுவுமே இல்லாதவர்களை எண்ணிப் பாருங்கள்.

•வீடு குப்பையும் கூளமுமாக இருப்பதைப் பற்றி மனைவியிடம் சண்டை போடுமுன், நடை பாதையில் வாழ்கிறவர்களை எண்ணிப் பாருங்கள்.

•அலுவலக வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுமுன், வேலையே இல்லாமல் கஷ்டப்படுவோரை எண்ணிப் பாருங்கள்.

•பைக்கில் ரொம்ப தூரம் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சல் ஏற்படும் சமயம், அதே தூரத்தை நடந்தே செல்கிறவர்களை எண்ணிப் பாருங்கள்.

ரயில்களுக்கு தானியங்கி பிரேக் சிஸ்டம்


விபத்துக்களை தடுக்க ரயில்களுக்கு தானியங்கி பிரேக் சிஸ்டம்: ரயில்வேத்துறை விபத்துக்களை தடுக்கும் வகையில் ரயில்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அரக்கோணம் அருகே சித்தேரி என்ற இடத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த ரயில் மீது பின்னால் சென்ற ரயில் மோதியதில் 10 உயரிழந்தனர...். ஏராளமானோர் காயமடைந்தனர்.

சிக்னலில் சிவப்பு விளக்கை எரிந்ததை பொருட்படுத்தாமல், பின்னால் சென்ற ரயில் எஞ்சின் டிரைவர் தொடர்ந்து ரயிலை வேகமாக ஓட்டியதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுபோன்று அதிகரித்து வரும் ரயில் விபத்துக்களை தடுக்கும் வகையில், ரயில்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, ரயில் எஞ்சின்கள், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் கம்பங்களில் பிரத்யேக கருவிகள் பொருத்தப்படும்.

சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது டிரைவர் ரயிலை தொடர்ந்து செலுத்த முற்பட்டாலும் அல்லது கவனக்குறைவாக சென்றாலும் ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ரயிலின் அவசரகால பிரேக் மூலம் ரயிலை நிறுத்திவிடும்.

இந்த தானியங்கி பிரேக் சிஸ்டத்தை அமைக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ.50 லட்சம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.250 கோடி செலவில் டெல்லி-ஆக்ரா இடையிலான 200கிமீ தூரத்துக்கும், சென்னை-கும்முடிப்பூண்டி இடையிலான 60கிமீ தூரத்துக்கும் இந்த தானியங்கி பிரேக் சிஸ்டத்தை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

சோதனை அடிப்படையில் பொருத்தப்படும் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் முதல்கட்டமாக டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-கோல்கட்டா ஆகிய வழித்தடங்களில் பொருத்தப்படும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய ரயில் தானியங்கி பிரேக் சிஸ்டம் மூலம் ரயில் விபத்துக்களை முற்றிலும் தடுக்க முடியும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதவி பண்ணுங்க....ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்1.துடுப்பு கூட உதவி பண்ணுகிறது ஓடம் செல்வதற்க்கு..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..


2.புல்லாங்குழலும் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
...
3.ஏணியும் கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றிவிட.....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..


4.மரம் கூட நிழல் தந்து நமக்கு உதவுகிறது...எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்...


ரோட்டுல விபத்துல அடிபட்டிருப்பவரை பார்த்து உச்சு கொட்டுவதை நிறுத்துங்கள் முதலுதவி பண்ணுறவரை தடுக்காதீங்க அதுவே நீங்க அவருக்கு செய்யுற மிகப்பெரிய உதவி...


அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.


உதவி பண்ணிட்டு அதை ஊர்ல உள்ள அம்புட்டுபேருக்கும் போஸ்டர் அடிக்காத குறையாக தம்பட்டம் அடிக்காதீங்க ,அதுக்கு நீங்க உதவி பண்ணாமலே இருக்கலாம்.(உ.தா) நம்ம நடிகர்கள் பண்ணுற உதவிகள்.....


கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் நம் மக்கள் தங்கள் பெயரையே அந்த அன்பளிப்பு பொருள் மறையுற அளவுக்கு பொறிச்சுருப்பாங்க.....தேவையா இந்த விளம்பரம்......(உ.தா)டியூப்லைட் அன்பளிப்பு கருவேல்னாயக்கன்பட்டி க.மு.கே.கருப்பசாமி....கருப்பு கலர்ல இதுல எங்க வெளிச்சம் தெரியும்?


கல்யாணவீட்டுல நீங்க அளிக்கும் அன்பளிப்பு மணமக்களுக்கு நீங்கள் தரும் பரிசு அன்பு பரிசாய் இருக்கட்டும் வம்பு பரிசாய் வேண்டாம்(உ.தா) உங்க மகனுக்கு நான் ஆயிரம் மொய்யெழுதினேன் நீங்க ஐனூறுதான் எழுதிருக்கீங்கன்னு ஆரம்பிக்கிற சண்டை பெரிய கொலை கேசே ஆயிருக்கு தேவையா வம்பு......முடிந்ததை செய்யுங்கள்......


நீங்கள் செய்கிற உதவி ஒருவரால் மனதாரா வாழ்த்தட்டும் உதட்டால் அல்ல.....


எண்ணி தருவது உதவியல்ல .... நல்ல எண்ணத்தால் தருவதே உதவி.....


ஒருவேளை உணவளித்தாலும் மனதளவால் அளியுங்கள் கையளாவால் அல்ல.....


தேவைப்படும் பொழுது நீங்கள் உதவும் ஒரு ரூபாயும் ஒருகோடிக்கு சமம்.....


தேவையில்லாத பொழுது நீங்கள் அமிர்தமளித்தாலும் அது நஞ்சாக தெரியும்...


கஷ்டத்திலும், நஷ்டத்திலும் துவண்டிருக்கும் ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்

1996 ல் துக்ளக்கில் ரஜினி எழுதிய கட்டுரை


ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பண கஷ்டம் – அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை. சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழ முடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; ந...மக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்ககூடியவை. நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு, பணம் இருந்தால் என்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம் தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள் தான் நமக்கு அதிக வேதனையை கொடுக்ககூடிய கஷ்டங்கள்.

பிரச்சனைகள் வரும்போது – அது பணப் பிரச்சனையோ, அல்லது மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ – என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க, உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். அந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும். தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய்தாக இருந்தால், அதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல – ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டல், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில் தான் – மனதில் தான் இருக்கிறார். நான் எத்தனையோ வெளி நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால் தான் நம்முடைய தமிழ் நாட்டை ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத்தன்மையும் இருந்தது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா – அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் இது உறுதி”

பாசிடிவ் Approach ஒரு பக்கக் கதை


மெடிகல் ரெப் வேலைக்கான இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.

கடைகளில் கணக்கெழுதிச் சம்பாதிக்கும் அப்பா, நோயாளி அம்மா, கல்யாணத்துக்காக காத்திருக்கும் தங்கை என்று ஒவ்வொருவராய் நினைவில் வந்து போக... தன்னுடைய முறைக்காக காத்திருந்தான் குமார்.
...
இண்டர்வியூ முடிந்து வெளியே வந்தவர்கள் ' சம்பந்தமில்லாம கேள்விகேட்கிறாங்கப்பா ' என்று முணுமுணுத்தார்கள்.

ஜி.எம்.கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் குமார் உடனுக்குடன் பதிலைக் கூற... அவர் அவனிடம்...

"மிஸ்டர் குமார்! இண்டர்வியூவுக்கு வந்திருந்த எல்லோரும் சர்ட்டிபிகேட் மட்டும்தான் கொண்டு வந்திருந்தாங்க. நீங்க மட்டும்தான் எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும்கற தன்னம்பிக்கையில் மத்தியான சாப்பாட்டைக் கூட கையோடு கொண்டு வந்திருக்கீங்க! வெரி பாசிடிவ். இந்த மாதிரி தன்னம்பிக்கை உள்ளவங்களாலதான் எங்க கம்பெனி தயாரிக்கும் மருந்துகளை டாக்டர்களிடம் பேசி மார்க்கெட்டிங் செய்ய முடியும்.‎10 மருத்துவக் குறிப்புகள்


1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்...டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

மீனுக்கும் கற்பு உண்டு - சிறுகதை


" சரவணன் சார்... லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!" . எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ...லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள்.
...
ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இதுவரை அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் வந்ததில்லை.ஆனால் சமீப காலமாக அவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவனும் அதை உணராமல் இல்லை.

அன்று காலை... பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ரமா, கிளம்பிச் செல்கிற வேளையில் தயங்கி நின்றாள். "சார்...என் வாழ்க்கையை உங்களோடு இணைச்சுக்க விரும்பறேன். உங்களுக்குச் சம்மதமா?" என்று கேட்டவள், "அவசரமில்லை நல்லா யோசிச்சு...நாளைக்குச் சொன்னால் போதும், சார்!" என்று கிளம்பிப் போய் விட்டாள்.

அன்றைய தினம் முழுக்க, ஆபீஸ் வேலையில் சரவணனால் கவனம் செலுத்த முடியவில்லை. சின்ன கணக்குகூடத் தப்பாக வந்தது. சித்ரா இருந்த இடத்தில் இன்னொருத்தியா என்று யோசனையாக இருந்தது.

சாயந்திரம் டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது டயர் பஞ்சராகிவிட்டது. போன் செய்து மெக்கானிக்கை வரச் சொல்லிவிட்டு காத்திருந்தவனின் கண்களில் அந்த வண்ண மீன் விற்பனை நிலையம் பட்டது. உள்ளே நுழைந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் சரவணன். கோல்டு, ஏஞ்சல், ப்ளாக் மோலீஸ் எனவிதவிதமான மீன்கள் கண்ணாடித்தொட்டிகளில் நீந்திக் கொண்டு இருக்க, ஒரு மீன் மட்டும் எதனுடனும் சேராமல் தனியாக இருந்தது.

"அதுவா...அது ஆஸ்கர் மீன் சார்! அதன் ஜோடி ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சு. இந்த வகை மீன் மட்டும் ஆண் இறந்து போனா பெண்ணும், பெண் இறந்து போனா ஆணும் வேறு எதோடும் சேராம, கடைசி வரைக்கும் தனியாகவே வாழ்ந்து செத்துப் போயிடும். மத்த பெண் மீன் இதோடு உரசுற மாதிரி வந்தாலும் இது ஒதுங்கிப் போயிடும். அவ்வளவு கற்புள்ள மீன் சார் இது!" என்றார் கடைக்காரர்.

அவனுக்குத் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது.

வீடு திரும்பியதும், ரமாவைக் கூப்பிட்டனுப்பினான் சரவணன். அவளிடம் அந்த ஆஸ்கர் மீன் பற்றிச் சொல்லி, "வாழ்க்கைத் துணை என்பது அந்த மீனுக்கே இவ்வளவு அழுத்தமான விஷயமாக இருக்கும்போது, ஆறறிவுள்ள நமக்கு மட்டும் அதுசாதாரண விஷயமா படலாமா? ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை மீறாம இருக்கறதுதான் மனித இனத்துக்கு அழகுன்னு நான் நினைக்கிறேன்" என்றான்.

"உங்க கண்ணியமும் பண்பாடும் உங்க மேலுள்ள என் மரியாதையை அதிகப்படுத்துது, சார்! ஆனா, நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம் . ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமானதொரு கலாசாரம் தான். மத்தபடி தம்பதியில் ஒருவரது மறைவுக்குப் பின் அடுத்தவர் இன்னொரு திருமணம் பண்ணிக்கறது எந்தவிதத்திலும் மறைந்தவருக்குச் செய்யற துரோகமா நான் நினைக்கலை. மீனுக்குக் குடும்பம், குழந்தைகள் கிடையாது. ஆனா, மனைவி என்கிற ஒரு துணை உங்க வாழ்க்கைக்கும், தாய் என்கிற அரவணைப்பு உங்க மகள் சரண்யாவுக்கும் ரொம்ப முக்கியம் இல்லையா? எங்கோ விதிவிலக்கா இருக்கிறதை உதாரணமா எடுத்துக்காம, நம்ம அளவில் யோசிச்சு எடுக்கிற முடிவே சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன், அதனால...'

" சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும்" என்றான் சரவணன். முன்பைவிட இப்போது இன்னும் தெளிவாகி இருந்தான்.