மொத்தப் பக்கக்காட்சிகள்

4/15/2016

ஜெனரேஷன் கேப்!கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !
அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம்
நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50
ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான்
ஜெனரேஷன் கேப்!
எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி
ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!
தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை
கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என்
நாடு சுத்தம் ஆகாது!!!
'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும்
குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!
வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை
கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள்
கொடூரமானவை. !
அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா
ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும்
இருக்கானுங்க !!
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன
நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா
உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி
நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்
இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து
அது சாப்புடு இது சாப்புடுனு
சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து
எதையும் சாப்புடகூடாதுனு
சொல்லுவான்.!
இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே
என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற
கவலை சிலருக்கு!!
250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு
சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு
படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!
மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள்
ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது
வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்த
ுகிறார்கள்...!!!
தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம்
கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள்
எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

4/13/2016

சர்க்கரை

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,

"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.

கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.

இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்: "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.

அப்புறம் எறும்புகள் உள்ளே வராது"

அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. "

உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,

பரமஹம்சர் சொன்னார்:

" எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். 

மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்".