மொத்தப் பக்கக்காட்சிகள்

5/14/2016

தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ...!

தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ...!

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...  தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும் தப்பு, சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... பிறரை மாற்றுவோம்...
 
Thanks to R.P.Karthik

5/10/2016

வெற்றி நிச்சயம் !!

      
                                                                                                                                                  அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்
.ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார்
.யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை . முனிவர்
அல்லவா ?

கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர் … 

மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை
வரும் என்பது நம்பிக்கை ). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …) அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது …
 
ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர் .மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ  
செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’ 50  வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும் ..அதனால்தான் தினமும் ருமுறை உழுது
கொண்டு இருக்கிறேன் ” என்றான் .
இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது
.அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம்
சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே ”.என்றே நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய
ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .

” தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ” "Self confident never fail" 
வெற்றி நிச்சயம் !! 

Thanks to C.Malathi


அரசாங்க வேலையை யார் செய்வது?

படித்ததில் பிடித்தது

image not displayed 
என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் 

கட்டமுடியும்,
 

வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் 

வாங்கமுடியும்,
 

செல்போன் வாங்கமுடியும்,
 

வாங்கிய கடனை கட்டமுடியும் .
 

ஆனால்
 

தரமான சாலைகள் போடுவது,
 

தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்குவது,
 

பாலங்கள் கட்டுவது,
 

ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
 

தரமான பேரூந்துகள் பராமரிப்பது,
 

தடையில்லா மின் உற்பத்தி செய்து 

தருவது,
 

அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
 

சிறந்த கல்வி இலவசமாக தருவது,
 

சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
 

ஆறுகளை இணைப்பது,
 

ஏரி,குளங்களை தூர்வாருவது,
 

அணைகள் கட்டுவது,
 

காவல்துறையை நவீனப்படுத்துவது,
 

தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,
 

தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் 

அமைப்பது.
 

தொழிற்வளர்ச்சிக்கு
 

திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்.
 

மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை 

நிறைவேற்றுவது..
 

இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய 

வேலைகள்

ஆயிரம் இருக்கிறது.


இதையல்லாம் நான் செய்யமுடியுமா?


இதையெல்லாம் செய்வதற்கு நிதியை 


பயன்படுத்தாமல்

இலவசமா கொடுக்கறாங்களாமா...


இது ஒரு அரசாங்கமா?


இதுக்கு ஓட்டுவேற போடனுமா?


என் வேலையை அரசாங்கம் செய்தால்,


அரசாங்க வேலையை யார் செய்வது?


என் வீட்டுச்செலவுகளை


அரசாங்கம் செய்தால்,


அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்?


கடன் வாங்குவார்களா?


இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?


என் இனத்தையே விலை பேசுவார்களா...??!!!

Thanks : Vedagiri Venkatraman