மொத்தப் பக்கக்காட்சிகள்

5/10/2013

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
விளக்கம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால் ஊழ்வினையால் வரும் என்பதல்ல நீ மனத்தாலும் செயலாலும் செயத ம்ற்றும்  செயற்படும் தன்மையால் நீயாகவே தேடிக்கொள்கிறாய் என்பது. எனவே நன்றாக எண்ணித் தெளிந்து செயற்படு என்பதாகும்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், நாட்டில் உள்ள அனைவரும் எங்கள் உறவுகள் தான்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை  நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு பலாபலனாக திரும்பி வருகின்றது; நல்லது செய்தால் நமக்கு ம்ற்றும் நமது சந்ததிக்கு  நன்மை கிடைக்கின்றது. தீமை இழைத்தால் தீமையே கிடைக்கின்றது

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன - துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் - செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் - வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு மாறி, - வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

வானம் தண் துளி தலைஇ ஆனாது,- வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று -  கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் - அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது

முறைவழிப் படூஉம் என்பது திறவோர் - முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் - அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

பெரியோரை வியத்தலும் இலமே! - பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! - சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை - துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

5/09/2013

அறிவை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம்.ரஜினிகாந்த்நான் மிகவும் மதிக்கும் நடிகர்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதா பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜிபி கார்டன் துவக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அனைவரும் விஜிபி பன்னீர் தாசின் உழைப்பை பாராட்டி பேசினர். எம்.ஆர்.ராதா பேச எழுந்ததும், தனக்கே உரியபாணியில், என்ன எல்லோரும் விஜிபி பன்னீர்தாஸ் மட்டும்தான் உழைத்தது போல அவரை பாராட்டுகிறீர்கள், ஏன் நான் உழைக்கவில்லையா? நீங்கள் உழைக்கவில்லையா? எல்லோரும் தான் உழைக்கிறோம்.

அதேபோல் வி.ஜி.பன்னீர்தாசும் உழைக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம், நாம் மாடுகளை போல உழைக்கிறோம். அவர் மனிதரை போல உழைத்திருக்கிறார். நான் எங்கோ 500 ஏக்கர் வாங்கியிருக்கிறேன். அவர் கடலுக்கு அருகே 100 ஏக்கர் வாங்கியிருக்கிறார். இது அவரது புத்திசாலித்தனம். இவ்வாறு எம்.ஆர்.ராதா பேசினார்.

அவர் கூறியது போல அறிவை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம்.
   
------ரஜினிகாந்த்