மொத்தப் பக்கக்காட்சிகள்

10/09/2015

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்....!!!

யாம் பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டும்.....
*

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.
*
கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.
*
"எலி":- எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
*
"பல்லி":- உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
*
"ஈ":- சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

*
"கொசுக்கள்":- கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.
*
"கரப்பான் பூச்சி":- கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
*
"மூட்டைப்பூச்சி":- மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.
10/08/2015

மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள்

 
உடல்நிலை சரியில்லை என மருத்தவரிடம் சென்றால் கண்டிப்பாக நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும், டானிக் என்ற பெயரில் ஓரிரு பாட்டில்களும் தருவார். ஆனால், இந்த மருந்துகளைவிட, சாதாரணமாக ஏற்படும் நோய்களுக்கு இரட்டிப்பு மடங்கு சிறந்து தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன.

அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறை பிரபலமாவதற்கு முன்பு, நம் உணவு முறையினால் தான் நோய்களை விரட்டவும், குணமடையவும் பயன்படுத்தி வந்தனர். அதிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுகளை பற்றி காணலாம்.....

மலைத் தேன் வறட்டு இருமல் சரியாக மலைத்தேனை பயன்படுத்தலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு இதுபோன்ற வறட்டு இருமல் ஏற்படும் போது மாத்திரைகளை வாயில் திணிக்காமல், இயற்கை மருந்துகளை தருவது தான் அவர்களது உடல்நலத்திற்கு நல்லது.

ஊறுகாய் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் புளிப்பு உணவுகள் சாப்பிட்டாலே போதுமானது. தயிர், காய்கறி ஊறுகாய்கள் போன்றவை நல்ல தீர்வு தரும். இந்த வகை உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

இஞ்சி மாதவிடாய் பிடிப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு இஞ்சி சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. ஆசியாவின் காரமான மசாலா உணவுப் பொருளில் இஞ்சி இன்றியமயாத மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி குமட்டல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற கோளாறுகளுக்கும் இஞ்சி நல்ல தீர்வளிக்கிறது.

பெப்பர்மிண்ட் குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெப்பர்மிண்ட் நல்ல தீர்வளிக்கிறது. மிட்டாய்கள், சூயிங் கம் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் குடல் எரிச்சல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.

செம்பருத்தி டீ உயர் இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு ஓர் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது செம்பருத்தி டீ. மூலிகை டீ வகைகளில் இது ஓர் சிறந்த டீயாக கருதப்படுகிறது..

மஞ்சள் தென்னிந்தியாவின் சொத்து மஞ்சள். அலர்ஜிகள், நோய் எதிர்ப்பு, ஞாபக மறதி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது மஞ்சள். மற்றும் உடல் செல்களின் இயக்கத்தை ஊக்குவித்து உடலை வலுவாக்க உதவுகிறது.

சியா விதைகள் சியா விதைகள் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் சிறந்த உணவாகும். உடலில் சேரும் எல்.டி.எல் எனப்படும் இதயத்திற்கு தீது விளைவிக்கும் கொழுப்பை உடலில் இருந்து கரைக்க சியா விதைகள் உதவுகின்றன.

பீன்ஸ் குறைந்த இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய பீன்ஸ் ஓர் சிறந்த உணவாகும். மற்றும் அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்தவும் பீன்ஸ் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீறி செய்து, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.