மொத்தப் பக்கக்காட்சிகள்

7/08/2014

டோணி 33 !

 •  1981ல் பிறந்த டோணி 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ராஞ்சி நகரில் பிறந்தார் மகேந்திர சிங் டோணி. 
 •  
 • டிடிஆர்....! டோணி கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்தவர்.
 •  
 • 18 வயதில் ரஞ்சி கிரிக்கெட் தனது 18வது வயதில் பீகார் அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
 •  
 • 2004ல் சர்வதேச கிரிக்கெட் 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார்.
 •  
 • 2005ல் டெஸ்ட் 2005ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
 •  
 • 2007ல் கேப்டன் 200ம் ஆண்டு ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் டோணி.
 •  
 • முதல் உலகக் கோப்பை டோணி தலைமையில் டுவென்டி 20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
 •  
 • 3 முக்கியக் கோப்பைகள் டோணி பையில் ஐசிசியின் டுவென்டி 20, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் டோணி மட்டுமே.
 •  
 • டோணி தலைமையில் டெஸ்ட்டில் நம்பர் ஒன் டோணி தலைமையில்தான் 2009ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் தரவரிசையைப் பிடித்தது.
 •  
 • விக்கெட் கீப்பராக அதிரடி ரன் குவிப்பாளர் டோணி, ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக ரன் குவித்த வீரர் என்றசாதனையை வைத்திருக்கிறார். 2005ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் 183 ரன்களைக் குவித்தார்.
 •  
 • ராஜீவ் காந்தி விளையாட்டு விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற நாட்டின் உயரிய விளையாட்டு விருதை பெற்றவர் டோணி.
 •  
 • 2முறை ஐசிசி சிறந்த வீரர் 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் ஆண்டின் சிறந்த வீரர் விருதைப் பெற்றவர் டோணி.
 •  
 • 5 முறை ஐசிசி அணியில் 2008, 2009, 2010, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் உலக லெவன் அணியில் இடம் பெற்றவர் டோணி.
 •  
 • 3 முறை ஐசிசி டெஸ்ட் அணியில் அதேபோல 2009, 2010, 2103 ஆகிய ஆண்டுகளில்ஐசிசியின் டெஸ்ட் லெவன் அணியில் இடம் பெற்றார்.
 •  
 • மக்கள் சாய்ஸ் விருது 2013ம் ஆண்டு ஐசிசியின் எல்ஜி மக்கள் சாய்ஸ் விருதைப் பெற்றவர் டோணி.
 •  
 • பைக்குன்னு பிரியாணி சாப்பிடுவது போல... எப்படி அஜீத்துக்கு பைக் என்றால் உயிரோ அதேபோலத்தான் டோணிக்கும். பைக் பிரியர் மட்டுமல்ல வெறியரும் கூட. 12 பைக் வைத்துள்ளார். அவருடைய முதல் மோட்டார் சைக்கிள் ராஜ்தூத்.
 •  
 • வெற்றிகரமான கேப்டன் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனும் கூட. 24 வெற்றிகளை ஈட்டியுள்ளார்.
 •  
 • கேப்டனாக சாதனை அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றிய இந்தியரும் இவர்தான். 53 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை கேப்டனாக இருந்துள்ளார்.
 •  
 • விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டிகளில் 263 டிஸ்மிஸ்ஸல்களை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
 •  
 • சாதனை ஸ்டம்பர் ஒரு நாள் போட்டிகளில் 298 டிஸ்மிஸ்ஸல்கள். இதுவும் கூட சாதனையே
 • மஹி ரேசிங் டோணி, மஹி ரேஸிங் டீம் இந்தியா என்ற பெயரில் ஒரு ரேஸ் அணியையும் வைத்துள்ளார். வேர்ல்ட் சூப்பர்ஸ்போர்ட் போட்டியில் இந்த அணி பங்கேற்று வருகிறது
 • அதுவும் 7... இதுவும் 7 டோணியின் பிறந்த நாள் எண்ணான 7தான் அவர் போட்டிகளின்போது அணியும் ஜெர்ஸியின் எண்ணும் கூட.
 •  
 • சென்ட் பார்ட்டியும் கூட 7 பை எம்எஸ் டோணி என்ற பெயரில் சென்ட்டும் கூட டோணி பெயரில் வருகிறது. குளிக்காதவர்களின் ஆபத்பாந்தவனாக இது கருதப்படுகிறது.
 •  
 • அதிகம் சம்பாதிக்கும் வீரர் கடந்த மாதம்தான் அதிகம் சம்பாதிக்கும் 100 வீரர்கள் வரிசையில் டோணியும் இடம் பெற்று, 22வது இடத்தைப் பிடித்தார். இவரது வருட சம்பாத்தியம் 30 மில்லியன் டாலராகும்.
 •  
 • 25 கோடிக்கு ஒரு டீல் கடந்த ஆண்டு டோணி, ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமீத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு ஸ்பான்சர்ஷிப்பி் கையெழுத்திட்டார். அதன் மதிப்பு ரூ. 25 கோடியாகும்.
 •  
 • 2 முறை ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியனாக 2 முறை அந்த அணிக்கு கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
 •  
 • ஸ்டம்புன்னா உசுரு போட்டிகளில் வெற்றி பெற்றால் முதல் வேலையாக ஸ்டம்ப்பை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொள்வது டோணியின் பொழுதுபோக்கு. இதுவரை மிகப் பெரிய அளவிலான ஸ்டம்புகளை சேகரித்து வைத்துள்ளார். இதையெல்லாம் வைக்க தனியாக ரூம் போடப் போகிறாராம்.
 •  
 • 2010ல் சாக்ஷியுடன் கல்யாணம் 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சாக்ஷி சிங் ராவத்துடன் இல் வாழ்க்கையில் இணைந்தார் டோணி.
 •  
 • கோல் கீப்பர் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பு பள்ளி கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தவர் டோணி
 •  
 • 2011ல் ராணுவத்தில் டெரிடோரியல் ராணுவத்தில், 2011ம் ஆண்டு அவருக்கு கெளரவ லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது.
 •  
 • 2012ல் டாக்டர்.. டோணி! இங்கிலாந்தின் டி மான்ட்போர்ட் பல்கலைக்கழகம் டோணிக்கு 2012ம் ஆண்டு கெளரவ டாக்டர் பட்டத்தை அளித்தது.
 •  
 • அதிக டெஸ்ட் ஸ்கோர் டோணிதான் இந்திய கேப்டன்களிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த சாதனையாளர். 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 224 ரன்களை அவர் குவித்துள்ளார்.
 •  
 • விக்கெட் கீப்பராக ரன் குவிப்பு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக 4000 ரன்களை பூர்த்தி செய்து சாதனையும் படைத்தவர் டோணி.

THANKS TO one india.com