மொத்தப் பக்கக்காட்சிகள்

6/16/2012

வெற்றி


  • கடவுளே....
    போலி நண்பர்களிடமிருந்து
    என்னைக் காப்பாற்று..!
    என் எதிரிகளை
    நான் பார்த்துக் கொள்கிறேன்.
  • கதவை தட்டாத
    காரணத்தினால்
    எத்தனையோ வாய்ப்புகளை
    நீ இழந்து நிற்கின்றாய்...!
  • கண்டிக்கும் ஆசிரியர்
    கரையேற்றிவிடுவார்
    கவலைப்படாதே!
  • சிறுகடன் ஒரு கடங்காரனை உருவாக்கும்.
    பெருங்கடன் ஒரு பகைவனை உருவாக்கும்
  • சோம்பல் - எல்லாவற்றையும் கடினமாக்குகிறது
    சுறுசுறுப்பு - எல்லாவற்றையும் சுலபமாக்குகிறது
தானாக வருவதில்லை வெற்றி
அது....

  • வியர்வையின் விளைச்சல்
  • நீ முன்னேறினால் உழைப்பு!
    உன் எதிரி முன்னேறினால் அதிர்ஷ்டமா?
  • பத்து விரல்களால் - பாடுபட்டால்தான்
    ஐந்து விரல்களால் அள்ளி உண்ண முடியும்
  • முயற்சியை நிறுத்துவதும்,
    மூச்சை நிறுத்துவதும் ஒன்றே
  • முதுகுகள் இனணந்தால் முரண்பாடு
    முகங்கள் இணைந்தால் உடன்பாடு
  • தொண்டு செய்து வாழ்ந்தால் நீங்கள் கோயிலுக்கே போகவேண்டாம்.
  • பிறரை இழிவாக பார்ப்பதைவிட ஒரே ஒரு முறை உண்ணையே உற்றுப் பார்த்துக் கொள்.
  • கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு.
  • தேவையற்ற பொருட்களை வாங்குபவன் ஒரு நாள் தேவையான பொருட்களை விற்க நேரிடும்.
  • சுறுசுறுப்பாயிரு; சுதந்திரமாயிரு; சிக்கனமாயிரு;
  • நீங்கள் என்றைக்கு கடன் வாங்குகின்றீர்களோ, அன்றைக்கே உங்களது நிம்மதி, தன்மானம், புகழ் இவைகளை அடகு வைத்துவிட்டீர்கள்.
  • பொழுது போதவில்லை என்று சொல்கின்றவர்கள் சாதனையாளர்கள்.
    பொழுது போகவில்லையே என்று சொல்கின்றவர்கள் சோம்பேறிகள்.
  • கைநீட்டிப் பெறுவதைவிடக், கொடுத்துப் பழக கற்றுக்கொள், உனக்கு அது புண்ணியத்தைச் சேர்க்கும்.
  • சின்னஞ்சிறு செலவுகளைக் கூட எழுதி பாருங்கள் சிக்கனம் தானாக வந்துவிடும்.
  • நீ செய்த நன்மைக்கு விலைவாக உனக்கு தீமை வந்தால் சுகமாக ஏற்றுக்கொள்.
  • நீ பிறர் மேல் காட்டுகின்ற அன்பு, அவனிடத்திலே உள்ள குறையை மறைக்க உதவிட கூடாது.
Thanks to Antony Raj

உயர்ந்தோர் மரணம் - கவிஞர் கண்ணதாசன்

 மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது
 கவிஞர் கண்ணதாசன்


உயர்ந்தோர், நல்லோர், பெரியோர்கள்.ஞானிகள்-


இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன.
அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம்.

அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.

பிறக்கும்போது ஊமையாகவும், பருவகாலத்தில் குருடனாகவும், பற்றும் பாசமும் சூழ்ந்த பிறகு திருடனாகவும், முதுமைக் காலத்தில் பொறுமை இழந்தவனாகவம் வாழ்ந்து மடிகிற சாதாரண மனிதனுக்கு, அவர்கள்தான் செம்மையான சுகமான வாழ்க்கை நிம்மதியைக்காட்டினார்கள்.

அவன் கண்கள் காணத் தொடங்கும்போதே, நல்லவற்றைக் காணும்படி அறிவுறுத்தினார்கள்.

அவன் வாய் பேசத் தொடங்கும்போதே, உணைமையைப் பேசும்படி வலியுறுத்தினார்கள்.

காதலிக்கும்போது பெண்களுக்குப் பண்புள்ள இலக்கணம் சொன்னார்கள்.

எப்படி வாழ்ந்தால் நிம்மதி என்பதற்கும் இலக்கணம் தந்தார்கள்.
நீதிக் கதைகளும் குட்டிக் கதைகளும் சொல்லி, நீதியை மனதில் பதிய வைத்தார்கள்.
ராஜ தண்டனையைவிடத் தெய்வத் தண்டனை உறதியானது என்பதை நம்பிக்கையோடு பதிய வைத்தார்கள்.

பிறரை ஏமாற்றாமல் வாணிபத்தில் லாபம் சம்பாதிக முடியும் என்பதையும், அடுத்தவன் சொத்தை அபகரிக்காமல் சுயமாகச் சம்பாதித்தே சேர்க்க முடியும் என்பதையும், நமக்குக் கிடைக்கின்ற எல்லைக்குள்ளேயே நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் அவர்க்தான் விளக்கிச்சன்னார்கள்ழ.

மரணத்தின்பின், சொர்க்கமோ நரகமோ கிட்டுது, மரணத்திற்குமின்னால் நீ வாழ்ந்து வாழ்க்கையைப் பொறுத்தது என்பதை அவர்கள்தான் தெளிவு படுத்தினார்க்.

“பேராசை பெரு நஷ்டம்’ என்றார்கள்ழ ‘விநாசகாலே விபரீதபுத்தி’ என்றார்களக். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்றார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்றார்கள். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்றார்கள்.

தவறான பாதைக்கு இலக்கியங்களாக ராவணையும் துரியோதன்னையும் காட்டினார்கள்.

நமது வாழ்க்கை எத்தனை நாள் ஓடுகிறதோ, அத்தனை நாளுக்கும் நாட்குறிப்பு எழுதி வைத்ததுபோல் நன்மை, தீமைக் குறிப்பு எழுதி வைத்தார்கள்.

அப்படிச சிலரைப் பாரத பூமி பெற்றதனால் தான் பயங்கர இருளுக்கிடையேயும் வெளிச்சம் நமக்குத் தெரிகிறது.

அயோக்கியர்களிடையே யோக்கியர்களையும், துரோகிகளுக்கிடையே நன்றியுள்ளவர்களையும் நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது.

பற்று பாசத்தால் பரிதவித்து, சுற்றச்சூழல்களால் துடிதுடித்து, ‘கற்றதும் பயனில்லையே’ என்று கதறும் போதும், நம்மைக் கையமர்த்தி, அந்தச்சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை, அவர்களேதான் நமக்குக்காட்டினார்கள்.

சிலந்தி வலைபோல் பின்னப்பட்ட லௌகிக வாழ்க்கையில் துன்பங்களை எப்படிச் சமாளிப்பது என்பதையும், அவர்கள்தான் சொல்லித் தந்தார்கள். அவர்களது வாழ்நாளில் அவர்களைப் பற்றி உணரமுடியாத்தை,அவர்கள் இறந்த பிறகு நாம் உணர்ந்து கொள்கிறோம்.

நலவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அவர்களுக்குமரணம் சம்பவிக்கிறது.

வாழ்ந்த நாளில் அவர்களை வசை பாடியவர்கள் கூட, அவர்கள் இறந்த நாளில் அவர்களுடைய நற்பண்பு களை எண்ணிப் பார்க்கிறார்கள். அன்றாட இகழ்ச்சிகளின் மீது ஆத்திரமுற்று அவர்களைத் தொக்கியவர்களூட அவர்களது மொத்தப் பண்புகளை எண்ணிவிய்கிறார்கள்.

‘அவர்கள் உலகுக்காகவ வாழ்ந்தவர்கள’ என்பதை எண்ணும்பது ‘நாமும் அதுபோல் வாழ வேண்டும்’ என்ற சிலராவது எண்ணுகிறார்கள்.

“குருடனுக்குக் கிடைக்கின்ற கைக்கோல் ஒரு ஞானியைப் போன்றது, அது அவனுக்கு வழி காட்டுவதால், எத்தனையோ குருடர்களுக்கு ஒரே கைக்கோல் வழி காட்டுகிறதென்றால், அது ஞானிக்கு ஞானியாகும்.”

வசிஷ்டர், வியாசர், வாமீகி போன்றவர்கள் இந்து மத்த்தின் பாரம்பரியங்கள்.

அந்தப் பாரம்பரியத்தில், நமுத தலைமுறை கண்ட ஒரு ஞானி, ராஜாஜி.

தசரதன் இற்தபோது, கதாபாத்திரத்தின் வடிவில் கம்பன் இப்படிப் புலம்புகிறான்;

“நந்தா விளக்கனைய
நாயகனே நானிலத்தோர்
தந்தய் தனி அறத்தின்
தாயே தயாநிதியே
ஏந்தாய் இகழ்வேந்தர்
ஏறே இறந்தனையோ
அந்தோ இனிவாய்மைக்
காருளரே மற்றுலகின்?”

-ஆம்; இது தசரதனுக்கு மட்டுமல்ல, காந்திக்கும் பொருந்தும்; நேருவுக்கும் பொருந்தும்; ராஜாஜிக்கும் பொருந்தும்.

உயர்ந்தவர்கள் அனைவரும் ஒரு வரிசை

அவர்களில் ஒருவருக்குச் சூட்டப்படும் புகழ்மாலை அனைவருக்கும் பொருந்தும்.

வார்த்தைகளை மாற்றாமல் பெயர்களை மட்டும் மாற்றினால் போதும்.

அவர்கள் அனைவமு ஒரே சீராக வாழ்ந்தார்கள். அவர்கள் மடியும்போது ‘நாம் அழவேண்டியதில்லை.

அவர்களது தலைமுறையில் நாம் வாழ்ந்ததற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்.

அவர்கள், நமக்காக ஏராளமான நூல்களை வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள் என்பதற்காக, நாம் பெருமைப்பட வேண்டும்.

இந்துமத வேதங்கள் இப்படிச் சொல்கின்றன.

இறந்து போனவர்களுக்காக அழுது கொண்டிருப்பவர் கண்ணீரைத் துடையுங்கள்.

இதற்கு நீங்களும் தப்பமுடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

எழுந்து ஸ்நானம் செய்யுங்கள்.

உங்களது லௌகிக் கடமைகளைச்செய்யத் தொடங்குங்கள்.

உங்களது இரண்டாவது வாழ்க்கை ஈசுவரனிடத்துத்தொடங்கப்படுகிறது.

அந்த நம்பிக்கையோடு உங்கள் முதல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துங்கள்.

ஆம். தெய்வ நம்பிக்கையின் மீது உங்கள் கண்ணீரைத் துடையுங்கள்.

புனிதன் ராஜாஜியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தியுங்கள்.

‘அவரது காலடிச் சுவடுகளில் இருந்து இன்னும் சில ஞானிகள் முளைத்தெழுவார்கள்’ என்ற நம்பிக்கையோடு உங்கள் லௌகிக வாழ்க்கையைத்தொடங்குகள்.

கிருஷ்ணார்ப்பணம்