மொத்தப் பக்கக்காட்சிகள்

2/04/2014

NDTV மிகப் பெரும் சாதனையாளர்கள் விருது – சூப்பர் ஸ்டாருக்கு முதலிடம்December 15, 2013 பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரால் 1988-ம் ஆண்டு துவங்கப்பட்டது நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடட். (NDTV). இந்த நிறுவனம் சார்பாக மூன்று சாட்டிலைட் சானல்கள் இயங்கி வருகின்றன. ஆண்டு தோறும்சிறந்த இந்தியர்விருதை வழங்கும். இந்த ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, “25 சிறந்த இந்தியர்கள்” (25 Greatest Global Living Legends) விருதினை வழங்கியது NDTV.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நிகழ்ந்த இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பலதுறைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேருக்கு இந்த விருதினை வழங்கி கெளரவப்படுத்தினார். தமிழகத்திலிருந்து 5 பேருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
NDTV-யின் சார்பில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலிருந்து இந்த 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6.43% வாக்குகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும், .ஆர். ரஹ்மான் மூன்றாவது இடத்திலும் விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் பதிவான வாக்குகள் : 118,785

விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “அதிசயங்கள் நிகழும். ஒரு பஸ் கண்டக்டர், இத்தனை பெரிய சாதனையாளர்களோடு இங்கே மேடையில் விருதினைப் பெருவது பெரிய அதிசயம் தானே?” என்றார்.


இந்த விருதினை தனது சகோதரருக்கும், தனது குரு கே. பாலசந்தருக்கும், தமிழக மக்களுக்கும் சமர்ப்பிப்பதாகவும் சூப்பர் ஸ்டார் தெரிவித்தார். “தமிழக மக்களின் அன்பும், ஆதரவும், அரவணைப்பும் இல்லையென்றால் நான் இங்கே இன்று இருந்திருக்க முடியாதுஎன்றார்.

விருதினைப் பெற்ற .ஆர்.ரஹ்மான், “இந்தியனாக இருப்பதே பெரிய கெளரவம். என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் தமிழக ரசிகர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார்.


விருதினைப் பெற்று பேசிய சச்சின் டெண்டுல்கர், “நீங்கள் வீழ்ச்சியடையும் போது உத்வேகத்துடன் அடுத்த சவாலை சந்திக்க எழுந்திருங்கள்என்றார்.
மொத்த பங்களிப்பார்களும், அவர்களுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதமும். (முதல் 25 பேருக்கு விருது அளிக்கப்பட்டது).