மொத்தப் பக்கக்காட்சிகள்

8/30/2017

25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் )

25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்
பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மதிய உணவு
பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்
கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ்
கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்
முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
தொலைத்தோம்..!


"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்..!


அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!


இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!


இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்


தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்

மீட்க முடியாது...


படித்ததில் பிடித்தது. பிடித்திருந்தால் பகிருங்கள்


Thanks to C. Malathi Teacher

8/24/2017

விரும்பவில்லை ! விரும்புவதே இல்லை !இறப்பு
எல்லோருக்கும் வந்தே தீரும் !
ஆனால் யாரும்
~_இறக்க விரும்புவதில்லை_~!

உணவு
எல்லோருக்கும் வேண்டும் !
ஆனால் யாரும்
~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~ !

தண்ணீர்
எல்லோருக்கும் வேண்டும் !
ஆனால் யாரும் அதை
~_சேமிக்க விரும்புவதில்லை_~ !

பால்
எல்லோருக்கும் வேண்டும்!
ஆனால் யாரும் ~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~ !

நிழல்
எல்லோருக்கும் வேண்டும் !
ஆனால் யாரும் ~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~ !

மருமகள்
எல்லோருக்கும் வேண்டும் ! 
ஆனால் யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை_~ !

நல்ல செய்தி
படித்து ஆஹா வென,
புகழ்பவர் அதை ~_மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதே இல்லை_~ !

 

நீங்கள் எப்படி?
நல்ல பதிவை
எல்லோருக்கும் படிக்க ஆசை  !
ஆனால் யாரும் அப்படி பதிவு செய்ய விரும்புவதில்லை!

7/28/2017

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
 
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

அப்துல் கலாம் தேசிய நினைவகம் !


1.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம், ஒன்பது மாதங்களில் பிரமாண்டமாகவும், பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் வகையிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

2.நாட்டின் ஒருமைப்பட்டை வலியுறுத்தும் வகையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல், கலாம் நினைவகப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

3.50 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த நினைவிடத்தின் நுழைவுவாயிலானது, பிரிட்டிஷார் அமைத்த 'இந்தியா கேட்' போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4.இதன் தரைதளம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட உயர் ரக கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

5.நினைவு மண்டபத்தின் வெளிப்பகுதி முழுவதும் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் கிரானைட் மற்றும் ஆக்ரா சிவப்பு கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.

6.கடற்கரைப் பகுதி என்பதால் உப்புக் காற்றினால் நினைவிடம் பாதிக்கப்படாமல் இருக்க, வழக்கத்தைவிட பல மடங்கு கூடுதலான கன அளவு கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

7.நினைவு மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ள நான்கு அரங்குகளில் கலாமின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியக் காட்சிகளும், வரையப்பட்ட படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

8.இவை முழுக்கமுழுக்க காய்கறிகள் மற்றும் மூலிகைச் சாறினைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

9.கலாமின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரதான கூடத்தின் மேல் ஜனாதிபதி மாளிகையை நினைவுகூரும்வகையில் 12 மீட்டர் உயரத்தில் 9.62 மீட்டர் விட்டம் கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

11.இதன்மேல் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. நினைவகத்தின் மேற்பரப்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஷெகவாட்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

12.நினைவகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள், கோள்கள், அறிவு மரம், ஒற்றுமையை எடுத்துக்காட்டும் பொம்மைகள் வைக்கப்பட்டிருப்பதுடன், ராஜமுந்திரியில் இருந்து கொண்டுவரப்பட்ட செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன.

13.இவற்றுக்கு முத்தாய்ப்பாக கலாமின் வெண்கலச்சிலை அருகே அவரால் கண்டுபிடிக்கப்பட்ட அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

14.கலாம் நினைவிட நுழைவு வாயிலை காரைக்குடி செட்டிநாட்டில் செய்யப்பட்ட மலேசிய தேக்குமரக் கதவுகள் அலங்கரிக்கின்றன.

15.தான் வாழும்போது இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும் அவரின் நினைவிடத்தில், கலாமின் பணிகளைத் தொடரும்வகையில் கோளரங்கம், நூலகம், அறிவுசார் மையம் என பல மைங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 

Thanks to  saratha ashmi:

4/20/2017

வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம் !

Memes on Rajinis press meet about political stand
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்
திடீரென இறந்து போனான்.,
.
அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]
.
#கடவுள் :

"வா மகனே.... நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."
.
#மனிதன் :
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
.
#கடவுள் :
"மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."
.
#மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
.
#கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."
.
#மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"
.
#கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது.."
.
#மனிதன் :
அப்படியானால்,
"என்னுடைய நினைவுகளா?"
.
#கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."
.
#மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"
.
#கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...."
.
#மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"
.
#கடவுள் :
"மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...."
.
#மனிதன் :

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"
.
#கடவுள் :
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."
.
#மனிதன் :
"என் உடலா?"
.
#கடவுள் :
"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."
.
#மனிதன் :
"என் ஆன்மா?"
.
#கடவுள் :

"அதுவும் உன்னுடையது அல்ல...,
அது என்னுடையது......."
.
●மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..கண்ணில் நீர் வழிய கடவுளிடம்,
"என்னுடையது என்று எதுவும் இல்லையா?"
எனக் கேட்க,
.
#கடவுள் சொல்கிறார்,

"அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே........"
.
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
.
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
.
-- மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே நிரந்தரம்..
.
-- உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது
.
வாழுகின்ற
ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வோம்.🙏

4/14/2017

மதுரை


மதுரை

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. 


சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர்கள் வாழ்ந்த இடம். மதுரையின் மையத்திலிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் கம்பீரமான கோபுரங்களும் அதைச் சுற்றிச் சுற்றி பிரகாகரமாகவே விரியும் மாடவீதி மாசி வீதி சித்திரை வீதிகளும் கட்டுமான கலை நுட்பத்தில் தழிழர்கள் எவ்வளவு சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு காலத்தின் சாட்சியாய் இன்றும் நிலைத்திருக்கும் எழில்நகர். தழிழர்களின் வீரம் எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்துகாட்டிய பாண்டிய மன்னர்களின் தலைநகரம் இதுதான்.


அழகர் கோயில்


மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது. இந்த மலையில் அமைந்திருக்கும் சோலை மலை என்ற குன்றில்தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. பழமுதிர் சோலை ஆலயத்தின் தொலைபேசி எண்; 0452-2470375
காந்தி அருங்காட்சியகம்
மதுரையில் வரலாற்றுச் சிறப்பு பெற்ற இடங்களில் ராணி மங்கம்மாள் சத்திரமும் ஒன்று. இங்குதான் இந்திய விடுதலைப் போரின் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. மகாத்மாகாந்தி பற்றிய புகைப்படக் காட்சியும் தென்னிந்தியக் கைத்தொழில் கதர் மற்றும் கிராமியத் தொழில் பிரிவுக் கண்காட்சிகளும் உள்ளன. நேரம் காலை 10 - 1 மணி வரை. பிற்பகல் 2-5.45 மணி வரை.

கோச்சடை அய்யனார் கோயில்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் கோச்சடை அய்யனார் மதுரை மாவட்ட மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார். வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக இந்தக்கோயில் எழுந்து நிற்கிறது. 

கூடல் அழகர் கோயில் 
தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான வைணவக் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொலைபேசி - 0452-2338542.

குட்லாம்பட்டி அருவி
மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது. குட்லாம்பட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறுமலைக் குன்றில் 87 அடி உயரத்திலிருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது குதூகலமான அனுபவம். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்தப் பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த அருவியின் அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்


மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சிதான். சுந்தரேஸ்வரருடன் மீனாட்சி மணக்கோலத்தில் கொலுவிருக்கும் உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலின் மூலக் கட்டட அமைப்பை குலசேகர பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். பின்பு 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் இதை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். இந்தப் பிரமாண்டமான கோயிலின் 12 கோபுரங்களும் தமிழகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தொலைபேசி-0452-2344360.

திருமலை நாயக்கர் அரண்மனை


மதுரையை ஆண்ட நாயக்கர்களில் புகழ்பெற்று விளங்கிய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் அரண்மனை இது. தற்போது எஞ்சி இருப்பதைப்போல 4 மடங்கு பெரியதாகக் கட்டப்பட்டது இது. இப்போது இருக்கும் பிரதான மாளிகையில்தான் அந்த மாமன்னன் வாழ்ந்திருக்கிறான. இம்மாளிகையில் இசையும் நாட்டியமும் அன்றாடம் மன்னர் முன்னிலையில் அரங்கேறியுள்ளன. நேரம் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை. தொலைபேசி - 0452 - 2332945.

திருப்பரங்குன்றம்
மதுரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று. இதன் உட்புறம், வைரம் பாய்ந்த பாறையில் இருந்து செதுக்கி சீர் செய்யப்பட்டது. தொலைபேசி - 0452-2482248.

இராஜாஜி பூங்கா
மதுரை மாநகராட்சி கட்டடமான அண்ணா மாளிகைக்கு அருகில் உள்ளது அழகிய ராஜாஜி பூங்கா. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான இந்தப் பூங்காவை மாநகராட்சியே பராமரித்து வருகிறது. குடும்பத்துடன் பொழுது போக்கச் சிறந்த இடம். நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. விடுமுறை இல்லை. நுழைவுக் கட்டணம் 1 ரூபாய். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை. தொலைபேசி - 0452-2531012.

இராமகிருஷ்ண மடம்

பேலூர் மற்றும் ஹவுராவில் தலைமை அலுவலகங்களைக் கொண்ட ராமகிருஷ்ண மடத்தின் மதுரைக் கிளை. தொலைபேசி - 0452-2680224-2683900.
ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்
மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 10 கி .மீ தொலைவில் 6 ஆவது நிறுத்தத்தில் திருநகரில் இந்தத் தியான மண்டபம் உள்ளது. ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மிகப்பழமையான தியான மண்டபங்களில் இதுவும் ஒன்று.
பார்வை / தியான நேரம் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை. தொலைபேசி - 0452-2484341.

திருமோகூர் கோயில்
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் ஒத்தக்கடையில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள விஷ்ணு கோயில் இது. காளமேகப் பெருமாள் செண்பக வள்ளி சுதர்சனா சமேதராய் இங்குக் காட்சியளிக்கிறார். தொலைபேசி - 0452-2423227.

திருவாதவூர் கோயில்


மதுரையிலிருந்து 25 கி.மீ. ஒத்தக்கடையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் இது. சைவ சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த இந்த ஊரில் சிவபெருமானும் பார்வதியும் எழுந்தருளி உள்ளனர்.
வண்டியூர் மாரியம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் இது. திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார் மன்னர். மிகப்பெரிய தெப்பக் குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.
அரசு அருங்காட்சியகம்


காந்தி அருங்காட்சியக வளாகத்துக்குள்ளே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் 1981 ஆம் ஆண்டு மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது திறந்து வைக்கப்பட்டது. 
சித்திரைத் திருவிழா:-

தமிழகத்தின் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மனுக்காக கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும். சித்திரை மாதம் முதல் நாள் தொடங்கும் இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

 Thanks to Tamilnadutoursim.org

4/08/2017

108 நற்பண்புகள் !

108 நற்பண்புகள்;1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
10.கருணை (Mercy)
11.இரக்கம் (Compassion)
12.காரணம் அறிதல் (Consideration)
13.அக்கறையுடன் (Mindfulness)
14.பெருந்தன்மை (Endurance)
15.பண்புடைமை (Piety)
16. அஹிம்சை (Non violence)
17.துணையாக (Subsidiarity)
18.சகிப்புத்தன்மை (Tolerance)
19. ஆர்வம் (Curiosity)
20. வளைந்து கொடுத்தல் (Flexibility)
21.நகைச்சுவை (Humor)
22. படைப்பிக்கும் கலை (Inventiveness)
23.வழிமுறை (Logic)
24.எழுத்து கற்க பிரியம் (Philomathy)
25.காரணம் (Reason)
26.தந்திரமாக (Tactfulness)
27.புரிந்து கொள்ளுதல் (Understanding)
28.பிறர் நலம் பேணுதல் ( Altruism )
29.நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
30.அறம் (Charity)
31.உதவுகின்ற (Helpfulness)
32.தயாராக இருப்பது (Readiness)
33.ஞாபகம் வைத்தல் (Remembrance)
34.தொண்டு செய்தல் (Service)
35.ஞாபகசக்தி (Tenacity)
36மன்னித்தல் (Forgiveness)
37.வாக்குறுதி (Commitment)
38.ஒத்துழைப்பு (Cooperativeness)
39.சுதந்திரம் (Freedom)
40.ஒருங்கிணைத்தல் (Integrity)
41.பொறுப்பு (Responsibility)
42.ஒற்றுமை (Unity)
43.தயாள குணம் (Generosity)
44.இனிமை (Kindness)
45.பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
46.சுத்தமாயிருத்தல் (Cleanliness)
47.அருள் (Charisma)
48. தனித்திருத்தல் (Detachment)
49.சுதந்திரமான நிலை (Independent)
50.தனிநபர் உரிமை (Individualism)
51.தூய்மை (Purity)
52.உண்மையாக (Sincerity)
53.ஸ்திரத்தன்மை (Stability)
54.நல்ஒழுக்கம் (Virtue ethics)
55.சமநிலை காத்தல் (Balance)
56.பாரபட்சமின்மை (Candor)
57.மனஉணர்வு (Conscientiousness)
58.உள்ளத்தின் சமநிலை (Equanimity)
59.நியாயம் (Fairness)
60. நடுநிலையாக (Impartiality)
61. நீதி (Justice)
62. நன்னெறி (Morality)
63.நேர்மை (Honesty)
64.கவனமாக இருத்தல்(Attention)
65.விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
66.எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
67.சீரிய யோசனை (Consideration)
68.பகுத்தரிதல் (Discernment)
69. உள் உணர்வு (Intuition)
70.சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
71.கண்காணிப்பு (Vigilence)
72.அறிவுநுட்பம் (Wisdom)
73.லட்சியம் (Ambition)
74.திடமான நோக்கம் (Determination)
75.உழைப்பை நேசிப்பது (Diligence)
76.நம்பிக்கையுடன் (Faithfulness)
77.விடாமுயற்சி (Persistence)
78.சாத்தியமாகின்ற (Potential)
79.நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
80.உறுதி (Confidence)
81.ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
82.கண்ணியம் (Diginity)
83.சாந்த குணம் (Gentleness)
84.அடக்கம் (Moderation)
85.அமைதி (Peacefulness)
86.சாதுவான (Meekness)
87.மீளும் தன்மை (Resilience)
88.மௌனம் (Silence)
89.பொறுமை (Patience)
90.செழுமை (Wealth)
91.சுய அதிகாரம் (Autonomy)
92.திருப்தி (Contentment)
93.மரியாதை (Honor)
94.மதிப்புமிக்க (Respectfulness)
95.கட்டுப்படுத்துதல் (Restraint)
96.பொது கட்டுப்பாடு (Solidarity)
97.புலனடக்கம் (Chasity)
98.தற்சார்பு (Self Reliance)
99. சுயமரியாதை (Self-Respect)
100.உருவாக்கும் கலை (Creativity)
101.சார்ந்திருத்தல் (Dependability)
102.முன்னறிவு (Foresight)
103.நற்குணம் (Goodness)
104.சந்தோஷம் (Happiness)
105.ஞானம் (Knowledge)
106.நேர்மறை சிந்தனை (Optimism)
107.முன்யோசனை (Prudence)
108.விருந்தோம்பல் (Hospitality)

அனுபவம் !
ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''

கடவுள் சொன்னார்,''பிறந்து கொள்,''

பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,''நான் வளர வேண்டுமே!''

கடவுள் சொன்னார்,''வளர்ந்து கொள்.''

வளர்ந்த குழந்தை கேட்டது,''நான் படிக்க வேண்டுமே!''

கடவுள் சொன்னார்,''படித்துக் கொள்.''

படித்த பையன் கேட்டான்,''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''

கடவுள் சொன்னார்,''தேடிக் கண்டுபிடி,''

வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,''எனக்கு திருமணம் செய்ய வேண்டுமே!''

கடவுள் சொன்னார்,''நல்ல பெண்ணாய்ப்பார்த்து திருமணம் செய்துகொள்.''

திருமணம் ஆனதும் கேட்டான்,''நல்ல குழந்தை வேண்டுமே!''

கடவுள் சொன்னார்,''பெற்றுக் கொள்.''

வயதானபின் அவன் கேட்டான்,''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே,''

கடவுள் சொன்னார்,''இறந்து கொள்.''

அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,'' ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''

கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.''


ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா !

படித்ததில் பிடித்தது

டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..

அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்..

அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்..

விமானம் நின்று படிகள் இணைக்கப் பட சர்மா அவர்கள் வெளிப்படுகிறார்..

அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..

இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது..

எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே..

ஆயிற்று..

அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது...

சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர்
அந்த கேள்வியை அரசரின் வைக்கிறார்..

"இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு".???

அங்கே ஒரு சிறு சலசலப்பு..

அரசர் பதிலளிக்கிறார்,
" நான் இப்போது அரசனாக இருக்கலாம்,
அவர் ஜனாதிபதியாக இருக்கலாம்,
ஆனால் நான் இந்தியாவில் பூனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எனக்கு கல்வி போதித்த ஆசான் அவர்..

வெறுமனே கல்வி போதித்தலையும் தாண்டி அந்நாட்டின் கலாச்சார பண்பாடுகளைப் பற்றிய தெளிவான பார்வையை எனக்கு கொடுத்தவர்..

இன்றளவும் நான் ஓரளவு பண்பானவனாக இருப்பதாக நினைப்பதற்கு அவரின் தோழமையான வழிகாட்டுதலும் ஒரு காரணம்"..

"இந்திய மண்ணில் கல்வி போதிக்கும் ஆசிரியரை கடவுளுக்கு நிகராக போற்றுகிற பண்பாடு கொண்டவர்கள் அவர்கள்..

கொஞ்சம் காலம் நானும் அந்த மண்ணில் இருந்தவனில்லையா..?

அந்த பண்பாடு எனக்கும் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது"..
என பெருமையாக குறிப்பிடுகிறார்..

சர்மா அவர்களுக்கு பூரிப்பாக இருக்கிறது, ஒரு அன்னிய தேச மாணவனுக்கு சிறப்பான பண்பை போதித்த ஆசிரியராக நெகிழ்வில் அவர் குழைந்து போகிறார்..

உள்ளுக்குள் இந்த ஸ்லோகம் ஒலிக்கிறது அவருக்கு...

"குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்பிரம்மம்
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ"..!!

புத்தரின் சிந்தனை துளிகள்....

புத்தரின் சிந்தனை துளிகள்....

* மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள்.

* பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள்.

* யாரையும் புறம் பேசாதீர்கள். பேச்சைக் குறைத்து மனதை நிலைப்படுத்துங்கள்.

* மனிதன் பெற வேண்டிய பெரிய பொக்கிஷம் அறிவு மட்டுமே. அழகு, செல்வம் இவை எல்லாம் நிலையற்றவை.

* விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.

* பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.


திறந்த மனது என்றாலும்கூட அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும்

முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்......

பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும்.

மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்

எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது

எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது

மகானைப் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை

மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்

புத்தர்- புத்தர்


3/28/2017

ஒருபெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?


 ஒருபெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

♥1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது!

♥2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது!

♥3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல், படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது…..

♥4.அழகை திமிராகக் காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது……

♥5.யார் மனதையும் புண்படுத்தாமல், தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க ‘எவ்வளவு நாள்?’ என்று கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது……

♥6.அச்சப்பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது!

♥7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது…..

♥8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது……

♥9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது!

♥10.ஆபாசமில்லாத உடையணிந்து, அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது……

♥11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, ‘நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ’ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது…….

♥12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது!

♥தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்!

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.

படித்ததில் பிடித்தது
 

1] எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...


2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.


5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.


6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.7] ☀சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள்.8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை முட்டாள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
நம்பிக்கையையே ஆகும்.15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

3/11/2017

பணி நிறைவு !

பணி ஓய்வு !

நாளைய பொழுது
எப்படி விடியப்போகிறதோ?

நாளைய பொழுது
நிச்சயம் சூனியமாகத்தான்
இருக்கப் போகிறது.

ஏன் என்றால்?

இன்று எனக்கு
பணியில் இருந்து
ஓய்வு.

எத்தனையோ பிரிவு
உபசார நிகழ்வுகளில்
பங்குபெற்று உள்ளேன்.

ஆனால் அப்போது
எனக்கு
தெரியவில்லை,

ஓய்வு என்பது
எத்தனை கொடுமையானது
என்று.

நாளை காலை
அவசரமாக படுக்கை
விட்டுஎழ வேண்டியதுஇல்லை

என் மனையாளை
துரிதப்படுத்த வேண்டியதுஇல்லை.

எனது இருக்கை
நாளைவேறு ஒருவருடையது.

ஏனோ இந்தஅலுவல்
ஓய்வு மட்டும்
என் இதயத்தில்
ஒருதீரா ரணத்தை
கொடுக்கிறது.

என் இருக்கை
நான் ஓய்வு
பெறுவதை உணர்ந்து
கொண்டதோ என்னவோ?
இன்றுஎன் காலை
தடுமாற செய்கிறது.

என்கணினி கண்ணீர்
விடுவதை உணர்கிறேன்.

நான்என் வாகனத்தை
நிறுத்தும் மரநிழல்இன்று
ஏனோஎனக்கு சுடுகிறது.

எனது பணிக்காலத்தை
இன்னும் ஒருஇரண்டு
ஆண்டு காலம்
நீட்டித்து இருக்கலாமே!

மனசாட்சிக்கு விரோதமில்லாமல்
பணி செய்ததுக்கு.

மரணத்தை விட
கொடுமையானது பணிஓய்வு !

பணியில் இருக்கும்போது
எத்தனை மாலைகள்,
மரியாதைகள் !

ஆனால் இன்று
மற்றவர்கள் பார்க்கும்பார்வையில்
ஏளனம் ஒளிந்து
இருப்பதை போல்உணர்கிறேன்.

எனக்கு வயதாகிவிட்டதை
நான்இன்று தான்உணர்கிறேன்.

2.jpg

2/18/2017

வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்..ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.

அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்..
”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”

ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்

”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்

”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்

”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . 

இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!

”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”

“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.

எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்...

Thanks to C.Malathi

2/17/2017

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் !!!

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் !!!

மனிதனுக்கு 'மன அழுத்தம் ' என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும். அதை மனிதனை அளிக்கும் 'எமன் ' என்று கூட சொல்லலாம். அது எதனால் வருகின்றது மற்றும் அதற்க்கான தீர்வுகளைப் பார்ப்போம்.

வரும் காரணம் : 1

மனதில் 'தாழ்வு மனப்பான்மை ' மேலோங்கி நிற்ப்பது. தான் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாவிதத்திலும் குறைந்தவன் அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என்பது போல் ஒரு உணர்வு.

அதன் தீர்வு : 1

இப்போது இருக்கும் நிலைமையை மட்டும் வைத்து எண்ணிக்கொண்டு இருக்காதே! உனது வாழ்க்கையைவிட மோசமாக உள்ள, சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் கோடிகணக்கான மக்களின் வாழ்கையை ஒருமுறை பார். அவர்களே நம்பிக்கையோடு காலம் தள்ளுகின்றபோது உன்னால் வாழமுடியாதா! தாழ்வு மனப்பான்மையை உன் மனதிலிருந்து அகற்றிவிடு. உன் வாழ்கையை உயர்த்த வரும் உழைப்பு, முயற்சி என்கிற அழகிய தங்க ரதம் உன்பக்கத்தில் நிற்கிறது. உனது தாழ்வு மனப்பன்மையை தூக்கி எறிந்துவிட்டு , அந்த ரத்தத்தில் ஏறிக்கொண்டு வீறுநடை போடு. அதில் உன்னைபோன்று பாதித்தவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு கொடு. அவர்களுக்கு புது தெம்பு கொடு. இன்றிருக்கும் நிலைமை நிரந்தரமானவை அல்ல. மாறக்கூடியவை. மன மகிழ்ச்சி கொள். அனைத்தும் சரியாகிவிடும்.

வரும் காரணம் : 2

வாழ்வில் எவ்வித பிடிப்புமில்லாமல் வீணான கற்பனைகள், எண்ணங்களை வளர்த்து கொண்டு 'தன்னம்பிக்கை 'இல்லாமல் இருப்பது.

அதன் தீர்வு : 2

அதற்கு காரணம் 'பயம் ' தான். யாரைக்கண்டும் பயப்பட தேவையில்லை! அவர்களும் உன்னைப்போன்ற மனிதர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் கிடையாது. அவர்களுக்கென்று தனிப்பட விதத்தில் 'பலம்' தனியாக இருப்பதில்லை. உன்னாலும் பலம் பெறமுடியும். அதற்கு 'தன்னம்பிக்கை ' கொள். உன் வாழ்வில் பிடிப்பு தானாக வரும்.

வரும் காரணம் : 3

பிறர் சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பேசி அவமதிப்பது. கௌரவத்தை குலைப்பது, உண்மைக்குப் புறம்பாக பழிகளை சுமத்துவது போன்றவற்றை பெரிதாக எண்ணி மனதளவில் வருந்திக் கொண்டிருப்பது.

அதன் தீர்வு : 3

வாழ்கையில் முன்னேறும்போது 'விமர்ச்சனங்கள்' வரத் தான் செய்யும். அதைப்பற்றி அதிகம் கவலை படாமல் , உதறிதள்ளி விட்டு உன்னுடைய குறிக்கோளை நோக்கி பயணம் செய்துகொண்டிரு. அப்போது தான் அவைகள் உன் காதில்விழாது. வெற்றி உனதே!

வரும் காரணம் : 4

தொழில்களில் அல்லது வேலையில் முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது, செய்யும் காரியத்தில் முழு ஈடுபாடு செலுத்த முடியாமல் கவனக் குறைவாக செயல படுவது, மறதியின் காரணமாக பல பிரச்சனைகள் உருவாவது.

அதன் தீர்வு : 4

முடிவு எடுப்பது, வேலையில் கவனக்குறைவு, மறதி ஆகியவற்றிக்குக் காரணம் மனம் ஒருமுகப் படுத்தமுடியாமல் இருப்பது. அதை களைவதற்கு தியானப் பயிற்சி சிறிதளவு தினமும் மேற்க் கொள்ளுங்கள். நாளடைவில் அனைத்திலும் தேர்ச்சி பெறுவீகள்.

வரும் காரணம் : 5

சில நேரத்தில் வழக்கமாக இருக்கும் சூழ்நிலைகள் பதிலாக புதிய சூழ்நிலைக்கு மாறும் போது , அதை சமாளிக்க வழி தெரியாமல் திணறுவது, புதிய உணவு மற்றும் உறவுகளில் மாற்றங்கள், தூங்கும் நேரத்தில் பெரிய மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுவது.

அதன் தீர்வு : 5

எவருக்குமே சூழ்நிலைகள் மாறும்போது அனைத்துமே புதியதாயும், கூச்சமாகவும், யாரிடத்தில் என்ன கேட்பது என்று குழம்புவதும் , தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற பிரமையும் உண்டாகும். அந்த சமயங்களில், தான் மட்டுமே அதிகமாக கஷ்டப்படுவது போலவும் ஒரு உணர்வு உண்டாகும். ஆனால் பழகப் பழக அந்த சூழ்நிலைகள் உங்களுக்கு பிடிக்கத் துவங்கிவிடும். அதுவரை பொறுமையுடன் மாற்றத்திற்கேற்ப அனுசரித்து நடந்து கொண்டால் அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். ஆத்திரப்பட்டு அப்போது சட்டுபுட்டென்று முடிவு எடுத்துவிடக்கூடாது. அப்படி எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. பொறுமை கொள். உனக்கேற்றவாறு சூழ்நிலைகள் மாறும்.

வரும் காரணம் : 6

வேலை, வேலை என்று ஓய்வில்லாமல் , மனதிற்கு சிறிதளவு கூட ஓய்வு கொடுக்காமல் இருப்பதும், பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்பது.

அதன் தீர்வு : 6

'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது சரிதான். ஆனால் உடலை, மனதை வருத்திக்கொண்டு உடல் ஆரோக்கியம் இழந்துவிடக்கூடாது. வேலைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அதுவே பல புது பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடாது. உடல், மனதிற்கு கட்டாயம் நிம்மதியான ஓய்வு தேவை. அது தூங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். அதற்காக ஒரு நாள் பிக்னிக், வெளி, உள்நாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் மனதில் உற்சாகமும், உடலில் புத்துணர்ச்சியும் உண்டாகும். பிரச்சனையினால் ஏற்படும் கலக்கம் மறைந்து அதை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கின்றது.

வரும் காரணம் : 7

தோல்விகளையே நினைத்துக்கொண்டு மனச்சோர்வையும், மன உறுதியையும் இழத்தல்.

அதன் தீர்வு : 7

'தோல்வி' என்பது ஒரு பனிப்பாறை. வெப்பம் தாக்காத வரையில் அதன் உறுதி 'டைட்டானிக்' போன்ற மிகப்பெரிய கப்பலையே கவிழ்த்து விடுமளவிற்கு வல்லமை கொண்டது. ஆனால் முயற்சி மற்றும் கடின உழைப்பு என்னும் வெப்பம் அதன்மீது படும்போது , அந்த மலை போன்ற பனிப்பாறை உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். ஆகையால் தோல்வி ஏற்படும் போது உழைப்பையும், முயற்சியையும் விட்டுவிடக் கூடாது.

வரும் காரணம் : 8

அன்பு உள்ளங்களை எதிர்பாராமல் இழக்கும்போது அதனால் தற்கொலை பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் போதும் ....

அதன் தீர்வு : 8

எதிர்பாராமல் அன்புள்ளங்களை இழக்கும்போது மனமதில் பூகம்பங்கள், எரிமலை மற்றும் சுனாமி போன்ற ஆபத்தான உணர்வுகள் ஓங்கி வரும். உன் மனஉறுதி கொண்டு பூகம்பத்தை நிறுத்து! அன்பு , சாந்தம், இரக்க குணத்தை அதிகரித்து எரிமலையை குளிரச் செய். தன்னம்பிக்கை கொண்டு சுனாமி அலைகளை கட்டுப்படுத்து. நீ நினைப்பது இனி நடக்கும்.

வரும் காரணம் : 9

பிறர் உதவியால் எளிதாக தீர்க்கும் பிரச்சனைகளை மனதிலே அடக்கிக் கொண்டு , பிறரிடம் அந்த பிரச்சனை மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது....

அதன் தீர்வு : 9

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை எதிர்கொண்டு சிலர் எளிதாக தீர்த்து வெற்றி கண்டிருப்பார்கள். அவர்களிடம் பிரச்னையை பகிர்ந்துகொண்டு அதன்படி நடந்தால் கை மேல் பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட நபர்களின் நம்பகத்தன்மையை கண்டிப்பாக உறுதி செய்துகொள்ளவேண்டும்.

வரும் காரணம் : 10

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் தொந்தரவினால் எப்போதும் அழுவது.

அதன் தீர்வு : 10

தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை உடனடியாக மேற்கொண்டு அதன்படி நடப்பது. உடற்ப்பயிற்சி, தியானம், யோகா மற்றும் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்போது உங்கள் உடல் மற்றும் மனம் புதிய பலம் பெரும்.

வரும் காரணம் : 11

தான் நினைத்தது நடக்காமல் இருக்கும் சமயத்தில் ஆவேசமும், எரிச்சலும் அதிகரிக்கும் போது....

அதன் தீர்வு : 11

எந்த ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் காலமும், நேரமும் கை கூடும் வரை காத்திருக்க வேண்டும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைவீர்கள்.

வரும் காரணம் : 12

நேரம் காலம் தெரியாமல் செல்போன் அழைப்புகள் வருவது..

அதன் தீர்வு : 12

செல்போன் அழைப்புகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏற்றுக்கொண்டு பதிலளியுங்கள். மற்ற நேரத்தில் 'சைலன்ட் மோட் ' இல் வைத்துக்கொள்ள முயலுங்கள். 'தலை போகும் காரியத்திற்கு ' மட்டும் மதிப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

மன அழுத்தம் என்பது மனதில் ஏற்பட்ட காயங்களை அடிக்கடி நினைவுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் வீணான கற்பனைகளை வளர்த்து, விபரீத எண்ணங்களை உருவாக்கி, ஆபத்தான செயலில் முடிவது.

மன அழுத்தத்தின் வேகம் அசுர வேகம். எதையும் சிந்திக்காமல் , சூழ்நிலைகளை மறக்கச் செய்து ஆபத்தான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டது.

பொதுவாக மன அழுத்தத்தை தடுக்க , எதையுமே திட்டமிட்டுச் செய்யுங்கள். அதனால் செயல்களை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் . நிதானமாக , நினைத்த நேரத்தில் வெற்றிகரமாக செய்துவிடலாம்.

திட்டமிடுவோம்!

மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்போம் !


Thanks to Karuna MSM!

2/14/2017

கவிதை! அப்பா கவிதை!

எழுதியவர் யார் என்று தெரியவில்லை
ஆனா மனச டச் பண்ணிட்டு
படிச்சி பாருங்க!

வாழைத்தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..

எல்லா மரங்களும்
எதாவது...

ஒரு கனி கொடுக்க
எதுக்கும் உதவாத...

முள்மரம் நான்...

தாயும் நல்லவள்...

தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ
நான்...

படிப்பு வரவில்லை...

படித்தாலும் ஏறவில்லை...

இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பை பார்க்க...

இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன்...

பிஞ்சிலே பழுத்ததென்று...

பெற்றவரிடம் துப்பிப்போக ...

எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான்...

பத்துவயதில் திருட்டு...

பனிரெண்டில் பீடி...

பதிமூன்றில் சாராயம்...

பதினாலில் பலான படம்...

பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ...

பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...

பெண்களிடம் விளையாட்டு...

இரண்டு மூன்று முறை கருக்கலைப்பு...

எட்டாவது பெயிலுக்கு...

ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்...

மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...

நூறு தருவார்கள்...

வாங்கும் பணத்துக்கு...

குடியும் கூத்தியாரும் என...

எவன் சொல்லியும் திருந்தாமல்...

எச்சிப்பிழைப்பு பிழைக்க ...

கைமீறிப்போனதென்று...

கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனர்..!

வேசிக்கு காசுவேணும் ...

வருபவள் ஓசிதானே...

மூக்குமுட்ட தின்னவும்...

முந்தானை விரிக்கவும்...

மூன்று பவுனுடன் ...

விவரம் தெரியாத ஒருத்தி...

விளக்கேற்ற வீடுவந்தாள்...

வயிற்றில் பசித்தாலும்...

வயிற்றுக்கு கீழ் பசித்தாலும்...

வக்கனையாய் பறிமாறினாள்...

தின்னு கொழுத்தேனே தவிர...

மருந்துக்கும் திருந்தவில்லை...

மூன்று பவுன்போட...

முட்டாப்பயலா நான்...

இன்னும் ஐந்து வேண்டுமென்று ...

இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...

கறவைமாட்டை சந்தைக்கு அனுப்பி ...

கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான்...

சொந்தம் விட்டுப்போகாமல்...

மாமனாரான மாமன்...!

பார்த்து வாரமானதால்...

பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,

தள்ளிப்போனதென்று தள்ளிவிட்டாள்...

சிறுக்கிமவ
இருக்கும் சனி...

போதாதென்று
இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி...

மணிக்கொருமுறை வாந்தி..,

வயிற்றை காரணம்காட்டி...

வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,

சாராயத்தின் வீரியத்தில்...

சண்டையிட்டு வெளியே அனுப்ப..,

தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டு...

போவார்கள்_கடைசி மூன்று மாதம்...

அப்பன்வீட்டுக்கு அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...

வாசனையாய் வந்துபோனாள்..,

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...

தகவல் சொல்லியனுப்ப..,

ரெண்டு நாள் கழித்து...

கடமைக்கு எட்டிப்பார்த்தேன்...

கருகருவென
என் நிறத்திலே...

பொட்டபுள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை...

கள்ளிப்பால் கொடுப்பாயோ ...

கழுத்தை திருப்புவாயோ...

ஒத்தையாக வருவதானால் ...

ஒருவாரத்தில் வந்துவிடு
என்றேன்...,

ஆறுமாதமாகியும் அவள்வரவில்லை...

அரசாங்க மானியம்
ஐயாயிரம்...

கிடைக்குமென்று
கையெழுத்துக்காக...

பார்க்கப்போனேன் ...

கூலிவேலைக்கு போனவளை கூட்டிவரவேண்டி...

பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச்செல்ல...

ஆடி நின்ற ஊஞ்சலில்...

அழுகுரல் கேட்டது..,

சகிக்க முடியாமல்
எழுந்து ...

தூக்கினேன்_பெண்குழந்தை..!

அடையாளம் தெரியவில்லை ...

ஆனால் அதே கருப்பு...

கள்ளிப்பாலில் தப்பித்துவிட்டு...

கைகளில் சிக்கிக்கொண்டது..,

வந்தகோபத்திற்கு...

வீசியெறியவே தோன்றியது...

தூக்கிய நொடிமுதல்...

சிரித்துக்கொண்டே இருந்தது,

என்னைப்போலவே...

கண்களில் மச்சம்,

என்னைப்போலவே
சப்பைமூக்கு,

என்னைப்போலவே
ஆணாக..,

பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க ....

வேண்டியதில்லை...,

பல்லில்லா வாயில்...

பெருவிரலை தின்கிறது,

கண்களை மட்டும்..,

ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,

ஒரு கணம் விரல் எடுத்தால்...

உதைத்துக்கொண்டு அழுகிறது,

எட்டி விரல்பிடித்து...

தொண்டைவரை வைக்கிறது,

தூரத்தில் வருவது கண்டு...

தூரமாய் வைத்துவிட்டேன்...

கையெழுத்து வாங்கிக்கொண்டு...

கடைசி பஸ்ஸுக்கு திரும்பிவிட்டேன்,

முன்சீட்டில் இருந்த குழந்தை...

மூக்கை எட்டிப்பிடிக்க
நெருங்கியும்...

விலகியும் நெடுநேரம்...

விளையாடிக்கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு ...

தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட
கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...

போட்ட கையெழுத்து பொருந்தவில்லை...

என_இன்னொரு கையெழுத்துக்கு...

மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு,
அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...

பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...

ஒன்று மட்டும் புதிதாய் ...

எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...

எந்த குழந்தையும் இல்லை,

வீடு நோக்கி நடந்தேன்,

பாதிவழியில் கறிவேப்பிலைகாரி...

கைப்பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...

தூக்கம் இல்லை
நெடுநேரம்...

பெருவிரல்
ஈரம் பட்டதால் ...

மென்மையாக இருந்தது ...

முகர்ந்து பார்த்தேன் ....

விடிந்தும் விடியாததுமாய்...

காய்ச்சல் என்று சொல்லி...

ஊருக்கு வரச்சொன்னேன்,

பல்கூட விளக்காமல் ...

பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுவிட்டேன்,

பஸ் வந்ததும் லக்கேஜை காரணம் காட்டி...

குழந்தையை கொடு என்றேன்,

பல்லில்லா வாயில் பெருவிரல்!
இந்தமுறை பெருவிரலை தாண்டி...

ஈரம் எங்கோ சென்றுகொண்டு இருந்தது...

தினமும் என் மீது படுத்துக்கொண்டு...

பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து
அவளை காப்பாற்ற...

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு...

மூக்கை சொரிவாள் விட்டுவிட்டேன் ...

சிகரெட் ஒரு முறை..,

சுட்டுவிட்டது விட்டுவிட்டேன்...

சாராய வாசனைக்கு...

வாந்தியெடுத்தாள் விட்டுவிட்டேன்,

ஒரு வயதானது உறவுகளெல்லாம்...

கூடி நின்று
அத்தை சொல்லு..,

மாமா சொல்லு
பாட்டி சொல்லு ...

அம்மா சொல்லு என்று...

சொல்லிக்கொண்டு இருந்தார்கள்...

எனக்கும் ஆசையாக இருந்தது,

அப்பா சொல்லு
என்று சொல்ல,

முடியவில்லை ஏதோ என்னை தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...

அவள் சொன்ன முதல் வார்த்தையே...

அப்பாதான்!

அவளுக்காக எல்லாவற்றையும்...

விட்ட நான் அப்பா என்ற

அந்த வார்த்தைக்காக...

உயிரைகூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை...

அன்பாலேயே கழுவினாள்...

<3

அம்மா சொல்லி திருந்தவில்லை,

அப்பா சொல்லி திருந்தவில்லை ,

ஆசான் சொல்லி திருந்தவில்லை ,

நண்பர்கள் சொல்லி திருந்தவில்லை ,

நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுதாய் மூன்று வார்த்தை பேசவராத ...

இந்த முகத்தை பார்த்து திருந்திவிட்டேன்..

வளர்ந்தாள்..,

நானும் மனிதனாக வளர்ந்தேன்...

படித்தாள்,

என்னையும் படிப்பித்தாள்...

திருமணம் செய்துவைத்தேன் ,

இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே...

பெரியவர்களாய் வளர்ந்துவிட்டார்கள்,

நானும் கூட தாத்தாவாகிவிட்டேன் ,

என்னை மனிதனாக்க...

எனக்கே மகளாய் பிறந்த...

அந்த தாய்க்காக காத்திருக்கிறது ...

#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,

உயிர் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத்தெரியாதா என்ன,

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்து காத்திருக்கிறேன்...

......................வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள் ,

அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...

என் முகத்தை பார்க்கிறாள் ...

என்னைப்போலவே...

கண்களில் மச்சம்,

சப்பைமூக்கு,
கருப்பு நிறம்,

நரைத்த தலைமுடி
தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக்கொண்டு,

அப்பா அப்பா என்று அழுகிறாள்,

அவள் எச்சில்
என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

#அடங்குகிறது....................
.......................

தாயிடம் தப்பிவந்த
மண்ணும்...

கல்லும் கூட
மகளின் ..,

கைப்பட்டால் சிலையாகும்!

அப்பா ! அப் அப் பா !

அப்பாக்கள்:

🌺ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.

ஆனால்
 
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

🌺🚹அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

🌺🚹கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

🚹🌺தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا

🌺🚹ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையினதும், அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

🌺🚹அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

🌺🚹தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

🌺🚹தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்

பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

🌺🚹நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

🌺🚹யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

🌺🚹ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.ر

🌺🚹விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

🌺🚹இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

🚺🚺ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

🚹🚹தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

🚹ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்?

🚹பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

🚹எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

🚹எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

🚹எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

🚹முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

🚹தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

🚹ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

🚹மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

🚹பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

🚹இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

🚹படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

🚹வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

🌺ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,

குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

🌺அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

🌺தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

🚹அப்பாக்கள்:

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்

🌺அப்பா:
தூய்மையான
அன்பு,

போலியற்ற
அக்கறை,

நேர்மையான வழிகாட்டல்,

நியாயமான
சிந்தனை,

நேசிக்கத்தக்க உபசரிப்பு,

மாறுதலில்லா நம்பிக்கை,

காயங்களற்ற
வார்த்தை,

கம்பீரமான
அறிவுரை,

கலங்கமில்லா
சிரிப்பு,

உண்மையான
அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து

செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுத்தவர் அப்பா.

👪🌸👪🌸👪🌸👪

சிங்கப்பூர் ராணுவம்..!..

சிங்கப்பூர் ராணுவம்..!..

சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது வெகு சிரமம்.ஏன் என்று கேட்கிறிர்களா....?

இதோ அதற்கான விடை...

சிங்கப்பூர்வாசிகளின் பிள்ளைகள் அனைவரும் 18 வயதை தொடும்போது மூன்றாண்டுகள் அவர்கள் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டே ஆகவேண்டும்.

இதற்கு National Service- தேசிய சேவை என்று பெயர்.

இதில் பணக்கார வீட்டு பிள்ளைகள், ஏழை வீட்டு பிள்ளைகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

பிரதமர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.
பயிற்சி காலங்களில் அவர்களுக்கு தற்காப்பு கலைகளும், போர் யுத்திகளும்இரவு பகல் பாராத கடுமையான பயிற்சிகளோடு தினம்தோறும் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும்.

இந்த மூன்று ஆண்டுகளில் ஞாயிற்று கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களை தவிர்த்து ஏனைய நாட்களில் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பயிற்சி முடிந்து வருகைத்தரும் ஒவ்வோரு வாலிபனும் கைதேர்ந்த ஒரு போர்வீரனாகத்தான் வெளியே வருவான்.

பயிற்சியில் இருக்கும் காலக்கட்டத்தில்இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

போர் என்று வந்துவிட்டால் 20 வயதை கடந்த, இராணுவ பயிற்சி முடித்த அத்தனை சிங்கப்பூரர்களுக்கும்...

#துப்பாக்கியால்சுட தெரியும்.

#பீரங்கிகளை இயக்க தெரியும்.

#வானூர்தி ஓட்டத்தெரியும்.

#அவசர காலங்களில் எப்படி- செயல்படுவது எனத்தெரியும்.

#முதலுதவி செய்ய தெரியும்.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா...?
அத்தியாவசிய தேவைகளாக குடிநீர், உணவுப்பொருட்கள், மின்சாரம் போன்ற விஷயங்களில் பிற நாடுகளை சார்ந்திருக்கும் ஒரு சிறிய நாடு...

இன்றைக்கு பொருளாதார வளர்ச்சியிலே உலக நாடுகளுக்கெல்லாம் சவால் விடக்கூடிய் அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு அந்த நாட்டின் கட்டுக்கோப்பான குடிமக்களும்,

நல்ல அரசாங்கமும்தானேகாரணம்..?
இது ..

ஏன் நம் தாய்நாட்டில் சாத்தியமில்லாமல் போனது..?

எல்லா வளங்களும் இருந்தும் ஏன் நமக்கு இந்த நிலைமை..?

18 வயது நிரம்பினால் தன்னுடைய ஓட்டுக்களை விற்று காசாக்கலாம் என நினைக்கும் குடிமகன்கள் என் தேசத்தில் இருக்கும் வரை...
உலகநாடுகளின் குப்பை தொட்டியாகவே எம் தேசம் விளங்கும்

2/11/2017

ஜல்லிக்கட்டின் கில்லி மதுரை மணி!


32 வயதில் 650 பரிசுகள்.. 90 தையல்கள்.. ஜல்லிக்கட்டின் கில்லி மதுரை மணி!

“இதோ இந்தா தொடையில கெடக்கு பாருங்க ஒரு தழும்பு... அது கமுதியில ஒரு கருப்பன்கிட்ட வாங்கினது... வாடிவாசலைத் தாண்டி கொம்பைத் தணிச்சுக்கிட்டு பம்மி அவுட்டோர் சுத்துப் போட்டுச்சு பாருங்க... காலைக் குடுத்து வளைஞ்சேன். சரக்குன்னு இறக்கிருச்சு...
அவனியாபுரத்துல ஒரு செவலையோடத் திமிலைப் பிடிச்சு வளைச்சுட்டேன். லாடக்காலால ஒரு ஒழட்டு ஒழட்டி வீசுச்சிடுச்சு. ரெண்டு விரலு செதஞ்சு போச்சு. இதோ வயித்துல நீளமா ஒரு கோடு இருக்கு பாருங்க... அது கொசவப்பட்டி ஜல்லிக்கட்டுல ஒரு மறைமாடு குத்திக் கிழிச்சது... குடலெல்லாம் கொட்டிப்போச்சு. அள்ளி வச்சு தச்சிருக்கு.

இப்படி உடம்பு பூரா நிறைய வரலாறு எழுதி வச்சிருக்கேன். தவராம்பு கம்மாயில நடந்த ஜல்லிக்கட்டுல ஒரு மாட்டைப் பிடிக்கும்போது கானாம்பரத்துல (உயிர்நாடியில) குத்தி வீசிடுச்சு. பொழச்சதே பெரிசு...”

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... மாடுகளைச் சுத்துப்போட்டு பிடித்த களைப்பு துளியும் இன்றி விருதுகளைக் காட்டும் பெருமிதத்தோடு தம் உடலில் பதிந்து கிடக்கும் காயத்தழும்புகளைக் காட்டுகிறார் மணி. நேற்று (10.02.2017) மட்டும் அலங்காநலூரில் 12 காளைகளை அடக்கியிருக்கிறார் மணி!

மதுரை வட்டாரத்தின் பெயர் பெற்ற மாடுபிடி வீரர் மணி. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அச்சம்பட்டி, கொளமங்கலம், களணை, புதுப்பட்டி, அய்யாபட்டி, சாத்தாம்பாடி, பாரப்பட்டி, சோளங்குருணி என்று தென்மாவட்டங்களில் நடக்கும் எல்லா ஜல்லிக்கட்டுகளிலும் மணிக்கென்று சாதனைப் பட்டியல் இருக்கிறது.

32வயது மணி இதுவரைக்கும் ஜல்லிக்கட்டில் பெற்ற பரிசுகள், 119 தங்கக்காசுகள், 148 வெள்ளிக்காசுகள், 280 குத்துவிளக்குகள், 15 சைக்கிள்கள், 12 பீரோக்கள், 40 மிக்ஸிகள், 8 ஆடுகள், 3 கன்றுக்குட்டிகள், 25 அண்டாக்கள்... இதுதவிர உடம்பு முழுவதும் 90க்கும் மேற்பட்ட தையல்கள்.

மணிக்கு ஜல்லிக்கட்டுதான் வாழ்க்கை. இதன் மீதுள்ள பிடிப்பில் திருமணம் கூட இன்னும் செய்து கொள்ளவில்லை. மாடுகள் வளர்ப்பது, ஜல்லிக்கட்டுக்கு மாடுகளை தயார் செய்வது, இளைஞர்களுக்கு மாடு பிடிக்க பயிற்சி அளிப்பது... ஜல்லிக்கட்டு நடக்கிறதோ இல்லையோ... மணி தன் செயல்பாடுகளை நிறுத்துவதே கிடையாது. காலையும் மாலையும் காளைகளோடு தான். பெரிய இளந்தாரிக் கூட்டம் மணிக்குப் பின்னால் உண்டு.

“ஜல்லிக்கட்டுங்கிறது எங்க வாழ்க்கையோட ஒரு பகுதி. `எப்படா பொங்கல் வரும், எப்படா வாடிவாசல் திறக்கும்'ங்கிற எதிர்பார்ப்பே எங்களுக்குக் கொண்டாட்டம் தான். ஜல்லிக்கட்டை தடை செய்யனும்ன்னு சொல்ற ஒருத்தருக்கும் அதோட தத்துவமும், பண்பாடும், நடைமுறையும் சுத்தமா தெரியாது. எங்க பாட்டன் பூட்டன் காலத்துல காளைகளை வதைச்சிருக்கலாம். இப்பல்லாம் எங்களுக்கு காளைங்கதான் உயிர். அதுங்க மேல எவனாவது அழுத்தமா கை வச்சாவே சுருக்குன்னு கோபம் வரும். காளைங்களை நாங்க மாடுகளாவே நினைக்கிறதில்லை. எங்க குடும்பத்துல ஒருத்தனாத்தான் பாப்போம். அதுக்குன்னு ஒரு பேரு வச்சு, புள்ளை மாதிரி வளர்ப்போம். மிருகவதை பத்திப் பேசுறவங்களுக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாதுண்ணே. ஜல்லிக்கட்டுல நிக்குதோ நிக்கலையே கடைசி வரைக்கும் ராஜா மாதிரி வீட்டில இருக்கும். பலபேரு அப்பன் ஆத்தாளுக்கு சமாதி கட்டுற மாதிரி காலங்கடந்து செத்த மாடுகளுக்கும் சமாதி கட்டி வருஷாவருஷம் நினைவு நாள் கொண்டாடிக்கிட்டிருக்காங்க..”- இடையிடையே சத்தம் போட்டு சக வீரர்களை உற்சாகப்படுத்தியபடி பேசுகிறார் மணி.

மணிக்கு பூர்வீகம் கோரிப்பாளையம். அப்பா அப்பகுதி கவுன்சிலராக இருக்கிறார். ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமல்லாமல், அதன் பின்னால் இருக்கும் உணவு அரசியல், வணிக அரசியலெல்லாம் பேசுகிறார் மணி.

“ஒரு சமுதாயத்துக்கு வீரியமுள்ள விதைங்க முக்கியம்ணே... அதனாலதான் நம்ம பாட்டன் பூட்டனுங்க ஜல்லிக்கட்டு, சிலம்பம்ன்னு வீர விளையாட்டுகளை வாழ்க்கையோட ஒரு பகுதியா வச்சாங்க. அதெல்லாம் இல்லாட்டி, கம்ப்யூட்டரை மட்டுமே இயக்கத் தெரிஞ்ச மாற்றுத்திறனாளி சமூகமா மாறிடுவோம்... விவசாயத்துல நம்ம விதைங்களை அழிச்சுட்டாங்க. இப்பொ மனுஷங்கள்லயும் அழிக்கப் பாக்குறாங்க. - மணியில் பேச்சில் ஆதங்கம்.

“அப்பல்லாம் நல்லா மாடு பிடிக்கிறவங்களுக்கு ஹீரோ கணக்கா ஊருக்குள்ள மரியாதை இருக்கும்ணே. நல்லது கெட்டதுல எல்லாம் அவங்களைதான் முன்னாடி உக்கார வைப்பாங்கே. அதைப் பாத்துத் தான் நமக்கும் மோகம் வந்துச்சு. பத்து வயசுலயே அவனியாபுரம், ஆனையூர், குலமங்களம்ன்னு வாடிவாசலைத் தேடி அலைய ஆரம்பிச்சுட்டேன். குடியரசு தினம், சுதந்திர தினம், நினைவு நாள், பிறந்தநாள்ன்னு ஏதாவது ஒரு காரணத்தைசை சொல்லி தினமும் எங்காவது ஒரு ஜல்லிக்கட்டு நடந்துக்கிட்டிருக்கும். காளைங்க மேல இருந்த ஆர்வத்துல பள்ளிக்கூடத்தை மறந்துட்டேன். ஜல்லிக்கட்டு களமே கதியாக் கெடந்தேன்.

எனக்குள்ள ஜல்லிக்கட்டு கனவை விதைச்சது எங்க அம்மாதான். நிறைய கதைகள் சொல்லும். இந்தப் பகுதியில மாடுபிடி வீரர்களா இருந்த சிலபேரை சிறு தெய்வங்களா மக்கள் கும்பிடுறாங்க. அவங்களைப் பத்தியெல்லாம் சொல்லும்போது அப்படியொரு கொடுப்பினா நமக்குக் கிடைக்காதான்னு ஏக்கமா இருக்கும். அம்மா இப்போ இல்லை. ஆறு வருஷம் முன்னாடி காலமாகிடுச்சு.- கண்கலங்குகிறார் மணி.

“ஸ்ரீதர், பாண்டித்துரை, பால்பாண்டி, லட்சுமண்ன்னு ஏகப்பட்ட ஹீரோக்கள் எங்க பகுதியில இருந்தாங்க. அவங்க களத்துக்குள்ள வந்துட்டா, காளைங்கள்லாம் மிரளும். அவங்களை மாதிரி ஆகனுங்கிறது அப்போ என்னோட கனவு. பதினாறு வயசுல அலங்காநல்லூர்லதான் முதன்முதல்ல களத்துல எறங்கினேன். இப்போ மாதிரி அப்போ கட்டுப்பாடுங்கள்லாம் இல்லை. மனசுல திடம் இருக்கிற யாரும் மாடு பிடிக்கலாம். எறங்குன முதல் களத்துலயே கொம்புக்குள்ள சிக்கிட்டேன்.

வாடிவாசலுக்கு முன்னாடிப் போயிட்டா பயமிருக்கப்புடாது. காளையா, நாமளாங்கிற கேள்வி மட்டும் தான் இருக்கனும். காளை குத்தத்தான் செய்யும். அதுதானே அதோட இயல்பு. அதுல தப்பிச்சு, மாட்டை நம்ம வசப்படுத்துறதுதான் ஜல்லிக்கட்டு விளையாட்டு. முதல்ல நமக்கு அந்த நுட்பமெல்லாம் தெரியலே. முறைப்படி யாரும் கத்துத்தரவும் இல்லை. நாம பாட்டுக்கு குருட்டுத் தைரியத்துல போயி நின்னோம். கொம்பைப் பாத்ததும் பயம் வந்திடுச்சு. என்ன செய்யிறதுன்னு யோசிக்கிறதுக்குள்ள தூக்கி போட்டுட்டு அடுத்த ஆளைப் பாக்க போயிடுச்சு காளை. முத களத்துலயே கையில எலும்பு முறிவு.

இருக்கிறதுலயே பெரிய அவமானம், குத்துப்பட்ட பின்னாடி ஜல்லிக்கட்டை விட்டு விலகுறது தான். காலாகாலத்துக்கும், ”குத்து வாங்கின பயடா”ன்னு கேலி பண்ணுவாங்கே. அந்த வைராக்கியம்... அம்மாவும், ”காயமெல்லாம் படத்தான் செய்யும்... பார்வையை கொம்புல வைக்காதே... திமில்ல வையி... மாட்டைப் பாத்து பயப்புடாதே”ன்னு சொன்னுச்சு. என்னல்லாம் தப்பு பண்ணினோம்ன்னு யோசிச்சேன். அடுத்த இருபது நாள்ல சத்திரப்பட்டி குடியரசு தின விழாவுல ஜல்லிக்கட்டு... மாவுக்கட்டை கழட்டி வீசிட்டு கிளம்பிட்டேன்.
அதுல நின்னு விளாண்டேன். ஒரு பெரிய அண்டா பரிசாக் கிடைச்சுச்சு. அதுக்கப்புறம் பித்தம் முத்திப்போச்சு. நாம இல்லாத களமே இல்லேன்னு ஆயிப்போச்சு. ஆளு வச்சு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. நமக்குன்னு ஒரு கூட்டம் உருவாயிடுச்சு. முழு நேரமும் ஜல்லிக்கட்டு தான். எங்கோ போனாலும் பரிசில்லாம திரும்புறதே கிடையாது. குறைந்தபட்சம் குத்தையாவது வாங்கிட்டு வருவோம்.

ஜல்லிக்கட்டு பத்தி வெளியில நிறைய பேரு தப்பா நினைச்சுக்கிட்டிருக்காங்க. அது உயிரை வதைக்கிற விளையாட்டோ, எடுக்கிற விளையாட்டோ இல்லை. முறையா விளையாட கத்துக்கிட்ட எவனும் மாட்டுக்கிட்டே குத்துப்பட மாட்டான். மாட்டையும் வதைக்க மாட்டான். அவனுக்கு இலக்குத் தெரியும். எங்கே கை வச்சா மாடு கைக்குள்ள வரும்ன்னு புரியும். அப்படியே மாட்டுக்கிட்ட குத்துப்பட்டாலும் அதுக்காக மாடு பிடிக்கிறவங்களோ, அவங்க குடும்பமோ வருத்தப்படுறதில்லை. மதுரைக்காரன் பாதிப்பேருக்கு உடம்புல மாடு குத்தின வடு கிடக்கும்.

ஜல்லிக்கட்டுல மாடு பிடிக்கிறவங்களுக்கு கிரிக்கெட்ல கொடுக்கிற மாதிரி, புட்பால்ல கொடுக்கிற மாதிரி லட்சங்கள்ல, கோடிகள்ல எல்லாம் பரிசு இல்லை. அதிகப்பட்சம் 1 கிராம் தங்கக்காசு, 5 கிராம் வெள்ளிக்காசு, சைக்கிள், கட்டில், மிக்சி.. இதுதான் பரிசு. நம்மளோட தைரியத்தை தக்க வச்சுக்கிறதுக்காக, உடல் வலிமையை பாதுகாத்துக்கிறதுக்காக நம்மோட சுய விருப்பத்தின் பேர்ல தான் மாடு பிடிக்கப் போறோம். பணமோ, புகழோ பெரிசில்லை.

இந்த 32 வருஷ அனுபவத்துல நூற்றுக்கணக்கான வாடிவாசல்களைப் பாத்திருக்கேன். நிறைய காளைகளோட நின்னு வெளையாண்டிருக்கேன். எனக்கடுத்த தலைமுறை, ஜல்லிக்கட்டுல இருந்து அந்நியமாகிக்கிட்டே போகுது. மாட்டைக் கண்டாலே பசங்கள்லாம் பயந்து ஓடுறானுங்க. இன்னொரு பக்கம், அந்நிய சக்திகள் இந்த வெளையாட்டையே அழிச்சிடனும்ன்னு துடிக்கிறாங்க. அவங்க சூழ்ச்சியை முறியடிக்கனுன்னா நல்ல வீரர்களையும், நல்ல வீரியமுள்ள காளைகளையும் உருவாக்கனும். ஒரு மாடுபிடி வீரனா அது எனக்கான கடமைன்னு உணர்ந்தேன். மதுரையைச் சுத்தி நாலு இடத்துல வாடிவாசல் கட்டுனேன். மாடு வச்சிருக்கிற சில பேர், ”நல்ல விஷயம் பண்றே... நாங்களும் வர்றோம்”ன்னு உதவிக்கு வந்தாங்க. பசங்களும் ஆர்வமா வந்தாங்க.

என் அனுபவத்தை வச்சு பாடத்திட்டம் மாதிரி உருவாக்கி இருக்கேன். மனுஷனுக்கும் சரி, காளைக்கும் சரி, வதை கூடாது. அப்படி விளையாடனுன்னா 60 வகையான பயிற்சிகளை முடிக்கனும். பயப்படக்கூடாது. காளையைக் கண்டு ஓடக்கூடாது. மாட்டோட நெற்றியை இலக்கு வச்சு விலகனும். கொம்புல கை வச்சா நாம பயந்துட்டோம்ங்கிறதை மாடு உணர்ந்திடும். திமிலை பிடிக்கனும். எப்போ மாட்டோட காலை பின்னனும், எப்போ பின்னக்கூடாது, எப்போ தொங்கனும், எப்போ ஓடனும்ன்னு நிறைய கணக்குகள் இருக்கு. மாடு ரெண்டு பக்கமும் அட்டாக் பண்ணப் பாக்கும். களத்துல நமக்கு ரெண்டு கண்ணு போதாது. நாலு கண்ணு வேணும். நிறைய இளந்தாரிங்க பயிற்சி முடிச்சிருக்காங்க.

முதல்ல பசங்களுக்குத் தான் பயிற்சி தந்துக்கிட்டிருந்தேன். சிலபேர் வந்து, மாடுகளையும் தயார்படுத்திக் கொடுன்னு கேட்டாங்க. முன்னமாதிரி கௌரவத்துக்கெல்லாம் யாரும் காளைங்க வளக்குறது கிடையாது. அதுவும் கடந்த ரெண்டு வருஷமா ஜல்லிக்கட்டு நடக்காததால பலபேரு காளை வளர்க்கிறதையே விட்டுட்டாங்க. அதைப் பெருக்கனுங்கிற எண்ணத்துல தான் கடந்த ரெண்டு வருஷமா காளைகளுக்கும் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன்.

புளிக்குளம், காங்கேயம் காளைங்க தான் ஜல்லிக்கட்டுக்கு ஏத்தவை. கிடைக்காரங்ககிட்ட நல்ல கண்டுகளாக வாங்கிட்டு வந்து படிப்படியா தயார்படுத்துவோம். ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சின்னு பல விஷயங்கள் இருக்கு என்னைக்கிருந்தாலும் ஜல்லிக்கட்டு திரும்பவும் நடக்கும்ன்னு நம்பிக்கை இருந்துச்சு. அந்த நம்பிக்கையில தான் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்தேன்.. இன்னைக்கு எங்க எதிர்பார்ப்பு நிஜமாயிடுச்சு. ஆயிரம் வருஷமா நம்ம பண்பாடா இருந்ததை எங்கிருந்தோ வந்த சிலபேர் எப்படி தடுக்க முடியும்..? இது வெறும் ஜல்லிக்கட்டு விவகாரம் மட்டுமில்லை. நம்ம உயிர்நாடியிலே கை வைக்கிற வேலை. இதை சரியாப் புரிஞ்சுக்கிட்டுத் தான் நம்ம பசங்க களத்துல இறங்கியிருக்காங்க..." - உற்சாகமாகச் சொல்லிவிட்டு மீண்டும் வாடிவாசலுக்கு விரைகிறார் மணி.

#தலைவணங்குவோம்.