மொத்தப் பக்கக்காட்சிகள்

11/05/2011

காந்தியின் பொன்மொழிகள்


தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை வெளிக்காட்டுவது தான் தற்காப்புக்கலை.

இதைத்தான் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். தற்காலத்தில் தங்களை, எல்லாம் தெரிந்துவிட்ட பெரியவர்களாகக் கருதிக் கொள்கிற வழக்கம் நம் வாலிபர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

உண்மையான தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக் கொண்டே போகும்.

அமைதியிலிருந்து அதிகமான அமைதிக்கு அவன் வளர்ந்து கொண்டே போகிறான்.

 என் உடலுழைப்பாலும், மூளையுழைப்பாலும் வெளிப்படும் சக்தியையும், வேகத்தையும் நேரில் பார்த்தவர்கள் அவை அதிசயிக்கத்தக்கவை என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார்கள். அதற்கு மூல காரணமானதும், நீண்ட காலமாக நான் நோய்க்கு ளாகாமல் ஆனந்தம் அனுபவித்து வருவதற்கும் காரணம் தன்னடக்கமே என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.


நமது இன்றையச் சமுதாய அமைப்பில் தன்னடக்கத்தை வளர்க்கும்படியான வசதிகள் எதுவும் அமைந்திருக்கவில்லை.நம்முடைய வளர்ப்பு முறையே அதற்கு எதிராக இருந்து வருகிறது.

தன்னடக்கச் சக்தியானது பெண்களைவிட ஆண்களிடமே குறைவாகக் ணப்படுகிறது.தன்னடக்கத்தைப் பயில்வது ஆணைவிடப் பெண்ணுக்கு வெகு சுலபம்.

எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதுதான் தன்னடக்கத்தின் முதற்படியாகும்.

சத்தியத்தையும் அகிம்சையையும், பலிகொடுத்து விட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக