மொத்தப் பக்கக்காட்சிகள்

9/05/2012

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம்




http://mdusskadl.blogspot.com// ·                             விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.in/        படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/      . பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//         சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/        நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

https://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS

http://sivaadvisor.blogspot.com//          முதலீடு மற்றும் காப்பீடு 

வாழ்க்கையில் கஷ்டம் ஏன் ? ரஜினிகாந்த் பேச்சு

வாழ்க்கை..   மகிழ்ச்சி இருப்பவருக்கு மட்டுமே வாழ்க்கை சுகமானது ....
வாழ்கையில் கஷ்டங்கள் மட்டுமே எதிர் பார்க்கும் நபருக்கு கஷ்டம் மட்டும் சுகமானது .....

ஒரே மண்ணில் பிறந்த ஒரே மாதிரி மனிதர்கள் ஏன் பலவிதமாக வாழவேண்டும்? எதற்கு பலர் கஷ்டப்பட வேண்டும்? சிலர் மட்டும் வசதி வாய்ப்போடு களிப்புபோடு வாழ வேண்டும்? அவர்களில் சிலரால் மட்டும் எப்படி மற்றவரை துன்புறுத்த முடிகிறது? போன்ற கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்கும். நம்மால் என்ன செய்யமுடியும் என்ற இயலாமையும் அதன் பங்குக்கு சுட்டெரிக்கும்.

 வாழ்க்கையில்  கஷ்டம்  ஏன் ? ரஜினிகாந்த் பேச்சு

1)  நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; ஆனா கைவிடமாட்டான்.

2)  கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னிக்குமே நிலைக்காது.

3) ஆண்டவன் எல்லாருக்கு எல்லாம் கொடுக்குறதில்லை. ஏதாவது ஒரு குறை வைக்கிறான். ஏன்னா, குறையே இல்லைன்னா, நாம ஆண்டவனையே மறந்துடுவோம்.

4) உலகினில் எதுவும் நிரந்தரமில்லை. உறங்கிடும் வரையில் சுதந்திரமில்லை.

5) உன் வாழ்க்கை உன் கையில் !

6) என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே

“மக்கள் மனதில் இறைவன் இருக்கிறார்” - ரஜினிகாந்த்

“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மட்டான். ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதே போல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

அது தன் இயற்கை என்று சொல்லும்பொது, அதில் பல அம்சங்களும் அடங்கி இருக்கும். கஷ்டம் - சுகம்; பாவம் - புண்ணியம்; நல்லவர்கள் - கெட்டவர்கள்…. என்று பல வகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டதையும் ஒரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும். நீங்கள் ஓர் ஏர் கண்டிஷ்ண்ட் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறது ஏ.சி.ரூமுக்குப் போனால், அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.

ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப்போய் விடுகிறோம்.

இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால் தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்கு தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதே போல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதால் இருக்கும். அதுதான் நல்லதும் கூட.

ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பண கஷ்டம் - அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை. சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழ முடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்ககூடியவை. நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால் என்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம் தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள் தான் நமக்கு அதிக வேதனையை கொடுக்ககூடிய கஷ்டங்கள்.

பிரச்சனைகள் வரும்போது - அது பணப் பிரச்சனையோ, அல்லது மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ - என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க, உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும். தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய்தாக இருந்தால், அதை அவர்களுக்கு புறிய வைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல - ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டல், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில் தான் - மனதில் தான் இருக்கிறார். நான் எத்தனையோ வெளி நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால் தான் நம்முடைய தமிழ் நாட்டை ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத்தன்மையும் இருந்தது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா - அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டன். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி.”

- நன்றி : துக்ளக்