மொத்தப் பக்கக்காட்சிகள்

10/17/2013

பட்டினத்தார் அமுத மொழிகள்..
* மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள். 

* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.

* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. 

* ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள். 

* தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.

புகைப்பழக்கத்தை விட வேண்டுமா..?!

தினமும் ஒரு பாக்கெட் சிகரட்
வாங்கு வதற்கு பதில் உலர்
திராட்சை பாக்கெட் அல்லது 100
கிராம்
வாங்கி வைத்து கொள்ளுங்கள் .
சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர்
திராட்சை வாயில் போட்டுச்
சுவையுங்கள் .
மிகவும் அதிமிக முக்கியமான
மருத்துவக் குணம் கொண்ட உலர்
திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகைப்
பிடிப்பவர்களைத் தடுக்கும்
அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால்
ஏற்படும்
நிகோடினை உலர்திராட்சைக்
கரைத்து விடுகிறது, மேலும்
புகைபிடிக்க மனதுக்கு தோன்றும்
முன்பு சில உலர்திராட்சைகளை
சாப்பிடும் பொழுது அதன்
இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க
தூண்டும் உணரவைக்
கட்டுப்படுத்துகிறது,
இது சைனாவில் பிரபலம்
நமக்கு காசு கொடுத்தால்
மட்டுமே நல்ல
மருத்துவத்தை சொல்லும் சில
சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட
இந்த உண்மையை சொல்வதில்லை,
இதை நீங்களும், உங்கள் உயிரான
உறவுகளிடம் சொல்லிப்
புகைப்பழக்கத்தை ஒழிக்கச் சிறந்த
வழி.

விசேசங்கலில் உணவு மீதமாகி விட்டால்

உங்கள் வீட்டில் நடக்கும் விசேசங்கலில் உணவு மீதமாகி விட்டால் 1098க்கு போன் செய்யவும். அவர்கள் பசியால் வாடும் குழந்தைகளுக்கு பகிரிந்தளிப்பர்கள். ஷேர் செய்யவும்.

10/16/2013

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.

* முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.

* ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.

* மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.

* வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.

* எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.

* வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது". இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது.

ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம். அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம். அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு.

* ஆபத்து ஏற்படுவதாக லேசாக சந்தேகம் வந்தாலும் உடனடியாக 100 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

சாலையோர குற்றவாளிகள்
நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் முக்கியச் செய்தி....

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்களை நோக்கி முட்டையை வீசினால்... வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

துடைப்பானையும் பாவிக்க வேண்டாம். ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு. பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம்.

சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர். இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுனாமி - உன்னை மன்னிக்கமாட்டேன் ...!

 
சுனாமியால் தன் தாய் தந்தையை 
இழந்த ஒருவன் எழுதினான் ...

ஏ !
கடலே
கோடிமுறை
நீ என் பாதங்களை
கழுவினாலும்

ஒருமுறைக்கூட
நான் உன்னை
மன்னிக்கமாட்டேன் ...!

10/15/2013

பெண்மையின் உண்மைபெண்மையை தெய்வீகத்துக்கு ஒப்பிட்டால், அதை இயற்கையோடும் ஒப்பிடலாம். தவறில்லை. இயற்கையின் சுழற்சியை வலுக்கட்டாயமாகச் சிதைப்பதால், இயற்கையே சிதைந்து சின்னாபின்னமாவதைப் போல, பல்வேறு காரணங்களினால் பெண்மை அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்படும் போது, பெண்மை வெடித்துச் சிதறுவதையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இரவு, பகல் என்ற கணக்கில்லாமல் 24 மணிநேர வேலை; அம்மா, மனைவி, சகோதரி, மகள், மருமகள் பலதரப்பட்ட  ‘ரோல்’கள்; சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட  வேலை, நர்ஸ், டீச்சர் இப்படி சகலகலாவாணி போல எல்லா வேலைகளையும் செய்யும் திறமை கொண்டவள்; வார விடுமுறை, மாத விடுமுறை, மருத்துவ விடுப்பு என்று ஒருநாள் கூட ஓய்வே இல்லாத வேலை; இது தான் நம் இந்திய பெண்களின் நிலை.

இன்றைய நவீனப் பெண்களுக்கு இன்னும் கூடுதல் சலுகையாக இரட்டிப்பு பணிச்சுமை; ஆம். அலுவலகம், வீடு என இரண்டையும்  நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்தால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்ற நிலை போய், அச்சுதந்திரமே இரட்டிப்புச் சுமையை பெண்களின் தலையில் சுமக்கச் செய்கின்ற சூழல் இன்றைக்கு.

அன்பு, அறிவு, ஆற்றல் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தன்னுள் அடக்கி இந்த அகிலத்தையே ஆட்டிப் படைக்கின்ற மாபெரும் சக்தியே பெண்கள். ஆனால் அந்தப் பேருண்மை அவளுக்குத் தெரிகிறதா என்று யோசித்துக்  கொண்டிருந்த போது என் கண்களில் ஒரு கதை தென்பட்டது.

சுமார் 10 வருடங்களுக்கு முன் மாத பத்திரிகை ஒன்றில் வெளிவந்த ஒரு கதை…

கடவுள் பெண்ணைப் படைத்துக் கொண்டிருந்தார். ஒரு வார காலம் ஆகியும் படைத்து முடிக்கவில்லை. வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை கடவுளிடம் கேட்டது. ‘ஒரு பெண்ணைப் படைக்க நீங்கள் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்?’. அதற்கு கடவுள்  பதில் சொன்னார்:

    ‘நீ என்ன இவளை சாமானியப் படைப்பு என்று கருதி விட்டாயா? இவள் உடம்பில் நான் முன்னூறுக்கும் மாறுபட்ட பாகங்களைப் பொருத்த வேண்டும்…

    வெறும் தண்ணீரைக் குடித்துக் கொண்டும், வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின் மிச்சம் மீதியை சாப்பிட்டுக் கொண்டும் உயிர் வாழ்பவளாக இருக்க வேண்டும்…

    ஒரே சமயத்தில் மூன்று நான்கு குழந்தைகளை மடியில் தவழ விட்டுக் கொள்பவளாக இருக்க வேண்டும்…

    அவளின் ஒரே ஒரு பாச முத்தத்தினால் குழந்தைகளின் அழுகை, ஆத்திரம், ஆங்காரம், கோபம், பிடிவாதம் போன்று எல்லா விதமான உணர்வுகளுக்கும் வடிகாலாக இருக்க வேண்டும்…

    ஆனால் இதை அத்தனையையும் செய்வதற்கு அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்க வேண்டும்….

கடவுள் சொல்லிக் கொண்டே போக தேவதை ஆச்சரியத்தினால் விழியை விரித்துப் பார்த்தது. உடனே கடவுள் சொன்னார், ‘என்ன இதற்கே மலைத்து விட்டாயா? இன்னும் கேள் இவளைப் பற்றி…’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்.

    ‘அவள் தனக்கு உடம்புக்கு வந்து விட்டது என்று சொல்லி படுக்கவே மாட்டாள். தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்வாள்…’

    ‘ஒரு நாளுக்கு 18 மணி நேரம் கூட தொடர்ந்து உழைப்பாள்…’

   ‘இவள் பார்வைக்கு மிருதுவானவள்…ஆனால் மனதளவில் வலிமையானவள்…இவளது எதையும் தாங்கும் சக்தியை உன்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது…’

    ‘சிந்திக்கும் ஆற்றல், எல்லா விஷயங்களையும் தீர அலசி பார்க்கும் தன்மை, அவற்றுக்காக, தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறனையும் கொண்டவள்…’

இதற்குள் தேவதை கடவுள் படைத்துக் கொண்டிருந்த பெண் உருவத்தின் கன்னத்தில் வழிந்த ஈரத்தை கவனித்தது. தொட்டுப் பார்த்து விட்டு பதறியது. ‘கடவுளே…இங்கு பாருங்கள் ஈரக் கசிவு… மெதுவாக படையுங்கள்…’.  கடவுள் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார்.

    ‘அது ஈரக் கசிவு இல்லை தேவதையே…அது தான் பெண்ணின் கண்ணீர்த் துளி…அந்தக் கண்ணீர்த் துளி தான் அவளது ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு…அவளது சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம், அன்பு, பெருமை அத்தனையையும் அந்த கண்ணீர்த்  துளிதான் வெளிப்படுத்துகிறது…’

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவதைக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். கடவுள் மேலும் தொடர்ந்தார்…

    ‘பெண்ணால் மட்டும் தான் அழ வேண்டிய நேரத்தில் கூட அழகாய் சிரிக்கவும் பாடவும் முடியும்.’

    ‘அவளால் மட்டுமே நெருக்கடியான பரபரப்பான சூழ்நிலையிலும் சிரிக்க முடியும்.’

    ‘அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில் கண்ணீர் சிந்த முடியும்.’

    ‘அவளால் மட்டுமே மற்றவர்கள் சாப்பிடுவதற்காக தான் பட்டினி கிடக்க முடியும்.’

    ‘அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, ஒரு குட்டி முத்தம் கொடுத்து ரணமாகிய உள்ளங்களுக்கு மருந்திட முடியும்.’
 
  ‘அவளால் மட்டுமே உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரது சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டு சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களைப் பாதியாக்க முடியும்.’

    ‘தன் குழந்தைகளின் சாதனைக்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்து மேலும் ஊக்கப்படுத்த முடியும்.’

    ‘ஐயோ…என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே என்று உடைந்து கொண்டிருக்கும் போதே, தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளால் வாழ்க்கையை எதிர்நோக்க முடியும்.’

கடவுள் பெண்ணின் பெருமையை இப்படி அடுக்கிக் கொண்டே போக, தேவதை கேட்டது.  ‘அப்படியானால் நீங்கள் படைக்கின்ற பெண்ணிடம் குறை ஏதும் இல்லையா?’. இதற்கு கடவுள் சொன்னார்.

    ‘இந்த உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும் இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு. அது என்னவென்றால்… தன்னிடம் இருக்கின்ற அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்…’

தேவதைக்கு புல்லரித்தது. ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றது. தேவதைக்கு மட்டுமல்ல படித்துக் கொண்டிருக்கும் நமக்கும் புல்லரிக்கிறது தானே? இக்கதையில் சொல்லியிருக்கின்றபடி, பெண்ணைப் பற்றிய உண்மையை நம்மில் யாராலாவது மறுக்க முடியுமா? முடியாதல்லவா?