மொத்தப் பக்கக்காட்சிகள்

3/29/2013

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்!



1. உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு ராஜாவைப் போல வாழுங்கள்.

2.அனைத்துவித தூண்டுதல்களிலிருந்தும் விலகி இருங்கள். தூண்டுதல்களை உண்டாக்கும் இடங்களுக்கு செல்லாதீர்கள். பிறகு தூண்டுதல்களை தவிர்க்க போராட வேண்டியிருக்கும். அது உங்கள் இச்சா சக்தியை வீணடிக்கும். தூண்டுதலை தடுப்பதில் நீங்கள் வெற்றி பெற்றாலும், அது உங்கள்மனதில் ஒரு ஆசையை விட்டுச் செல்லும். ஆசை அல்லது விருப்பமே மன சஞ்சலத்தைத் தூண்டுகிறது.

3.உங்கள் பொதுவான புறவேலைகளுக்கேற்ப தேவையானவற்றை மிகமிகக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆசைகளும் தேவைகளும் மிக மிகக் குறையும்போது மன அமைதி மிகவும் அதிகரிக்கும். உடைமைகள் துன்பத்தைத் தருகின்றன.

4. ஒரு சில நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள். பழக்கத்தை பெருக்க வேண்டாம். எவருடனும் அதிகமாக நெருங்கிப் பழகவேண்டாம். அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்குலைத்து மன அமைதியைக் கெடுக்கிறது.

5.காரணத்துடன் மட்டும் பேசுங்கள். அனைத்துவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள், களங்கமற்ற, நல்நோக்கம் கொண்ட வார்த்தைகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகிறது. எதிலும், எவருக்கும் புத்திமதி கூறாதீர்கள். உங்களிடம் கேட்காத வரையில், நமது வேலையைப் பார்ப்போம்.

6. விவாதம் செய்யாதீர்கள். ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள். அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும் மற்றவரைப் புண்படுத்தும், நண்பர்களுக்குஇடையே பிளவை உண்டாக்கும்.

7. மன அமைதியும், பொருள்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எதுதேவையோ அதை தேர்ந்தெடுங்கள்.

8. நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்!

9. மக்கள் உண்மையாகவே உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். ஆனால், உதவி செய்தால் உங்களையே தாக்கக்கூடும். இருந்தாலும் உதவியையே செய்யுங்கள்.

10.உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள். ஆனால்,இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள்.

11. நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளைக்கே மறுக்கப்பட்டுவிடும். இருந்தாலும் நல்லதைச் செய்யுங்கள்.

12. உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப்பாதையில் செல்லுங்கள்!

13. வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த உலகத்தினர் குறை சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறைகூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

14. நியாயத்திற்கு விரோதமாக, தர்க்கத்திற்குப் பொருந்தாதவர்களாக, தன்னலம் மிகுந்தவர்களாக மக்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களிடம் அன்பாக இருங்கள்.

15. பிரார்த்தனையைப் போன்று பரிசுத்தப்படுவது வேறு ஒன்றும் கிடையாது. ஒழுங்காக நாள்தோறும் பிரார்த்தனை செய்து வந்தால் உங்களது வாழ்க்கை நன் முறையே உருவாக்கப்படும்.

16.  நீங்கள் நல்லநிலை பெற வேண்டுமென விரும்பினால் முதலில் உங்களிடமிருக்கும் கீழான ஆசைகளை துறந்துவிடுங்கள்.

-சிவானந்தர்

Thanks to Dinamalar

3/28/2013

இப்பூமியில் பிறந்த உடனேயே ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இப்பூமியில் பிறந்த உடனேயே ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படும் நாள் தள்ளி வைக்கப்படலாம். இது தான் வாழ்க்கை!



வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கின்ற நிகழ்வுகள் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் வாழ்க்கையின் மேல் மனிதர்களாகிய நமக்கு பயம் ஏற்படுகின்றது. எத்தனையோ வகையான பயம் மனதில் பிண்ணிப்பினைந்து கிடக்கின்றது. அந்த பயந்திலிருந்து மீண்டு வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்கின்றோம். நினைத்தது நிறைவேற இறைவனை வேண்டுகின்றோம்; மாட்டிக் கொண்டிருக்கின்ற பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறோம்; தீங்குகள் வரக் கூடாது என்பதற்கு முன்னெச்செரிக்கையாக இருப்பதற்காகப் பூஜைகள் செய்கின்றோம்; வேண்டுதல்களை ஏற்கின்றோம்; விரதம் இருக்கின்றோம். கடவுள் என்ற ஒன்றின் மேல் பற்று இல்லாதோருக்கும் பயம் இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் இறைவனுக்குப் பதிலாக மனிதர்களையோ மற்ற பொருட்களையோ (பணம், சொத்து, அதிகாரம்) பற்றிக் கொள்வதன் வழி தமது பயத்திலிருந்து தற்காலிகமாக விடுபட்டுக்கொள்கின்றனர்.

எனக்கு சிலந்திப் பூச்சியைக் கண்டால் பயம். எனது தோழி ஒருத்திக்கு பாம்பைக் கண்டால் பயம். (எனக்கு பாம்பை பார்த்தால் பயமே தோன்றாது. பாம்புகளைப் விளையாட்டுக்காகப் பிடித்து வைத்திருந்திருக்கின்றேன்.) எனது மற்றொரு தோழிக்கு திருமணத்தை நினைத்தாலே பயம். எனது நண்பன் ஒருவனுக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வதை நினைத்தால் பயம் (அங்கே அதிகமாக பூச்சிகள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றான். பூச்சிகள் கடித்து இறந்து விடுவோம் என்ற அச்சம் அவனுக்கு!) இப்படி பலருக்கும் பல வகையில் பயம். இந்த பயத்தின் அளவைப் பொருத்தே ஒவ்வொருவரின் பற்றுக்கோட்டின் அளவும் அமைகின்றது.

உலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனாலும் நாம் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு வாழ்க்கையில் பலவற்றை சேர்க்கின்றோம். வாழ்க்கை நமக்கு பல வேளைகளில் நிலையற்றவற்றினைப் பற்றிய பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் சில தேவைகளைத் தேடிச் சென்று கொண்டேயிருக்கின்றோம். எனது ஜெர்மானிய தோழன் ஒருவனுக்கு நான்கு முறை காதல் தோல்வி; இருந்தாலும் அலுக்காமல் சலிக்காமல் காதலியைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றான்; வாழ்க்கையில் மாறுதல் வேண்டும் என்பதற்காக ஸ்டுட்கார்டிலிருந்து பெர்லினுக்கு வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றான். இலங்கையில் யுத்தத்தின் காரணமாக வாழ்க்கையைத் தேடி வந்த தமிழினம் ஐரோப்பாவில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; தமிழ் பண்பாட்டையும், மொழியையும், கலை கலாச்சாரத்தையும் ஐரோப்பிய மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்; கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஒரு இடத்தில் தடை ஏற்படும் போது மற்றொன்றில் மனதைச் செலுத்தி போராடிப் போராடி வாழ்க்கையைத் தேடிக் கொண்டே இருக்கும் ஆன்ம பலம் உள்ளவர்களுக்கு மாறுதல் வாழ்க்கையில் கிடைக்கத்தான் செய்கின்றது.

பயம் மனதை விட்டு அகல வேண்டுமானால் மகா சக்தியான அப்பேரருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இறை அருள் துணையிருக்கும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையைத் தைரியமாக கடக்க உதவும். உலகில் பிறந்த எந்த மனிதருக்குத்தான பிரச்சனை இல்லை? சோதனை இல்லை? எதாவது ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் அதில் என்ன ஆச்சர்யம் என்றால் இன்று மிகப்பெரிய கவலையாக, அதிர்ச்சியாகத் தெரிவது நாளைக்கு அதே அளவிளான மன பாதிப்பை அளிப்பதில்லை. நமது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் நாம் பயந்திருக்கின்றோம் என்று காணமுடியும். ஆனால் அந்த விஷயங்களை வெற்றிகரமாக கடந்து வந்த பின்னர் அவை நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றினைச் சாதிக்கக் கிடைத்த வெற்றியின் முதற்படியாகத் தான் நமக்குத் தோன்றும்.

வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் போராட்டத்திற்கு அஞ்சி வீழ்ந்து விட மாட்டான். ஒரு வாசல் அடைக்கப்படும் போது மற்றொரு வாச்ல் திறக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சித்துச் செல்லும் போதுதான் பிரபஞ்ச அமைப்பைக் காணும் திறமைக் நமக்கு கிட்டும். இத்திறமை சாதாரணமான ஒன்றல்ல. உடலுக்குள் உறைந்திருக்கும் இறைசக்தி இயக்குவதை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவனாலேயே தோல்வியிலுருந்தும் கஷ்டங்களிலிருந்தும் மீண்டு, சாதிக்க முடிகின்றது. அச்சக்தியைக் காண முடியாதவனுக்குச், சவம் போல அன்றாட வாழ்க்கையில் அமுங்கி வாழ்க்கையைத் தண்டனையாகக் காண்கின்ற நிலைதான் ஏற்படுகின்றது!

இறைவனை மனிதர்கள் பற்றிக் கொள்வதன் வழி எவ்வாறு உலக இன்பங்களிலிருந்து விலகி வாழ முடியும் என்பதை காட்டுகின்றது. இந்த உபநிஷத்தில் ருத்ரனனே அனைத்தையும் ஆக்கி, காத்து, அழிக்கும் வல்லமை பொருந்திய தெய்வமாகக் காட்டப்படுகின்றார். சைவ சித்தாந்தத்தின்படி எத்தெய்வம் அழிக்கும் சக்தியைக் கொண்டதோ, அதுவே அனைத்தையும் உருவாக்கவும், காக்கவும், தொழிற்படுத்தவும் கூடிய வல்லமை படைத்த தெய்வம் என்பது உண்மை.

 நேற்று என்பது வெறும் கனவு
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே
 இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
 நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
 அதனால் இன்றைய தினத்தைக் கவனி
 அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது"

இந்த அருமையான வரிகளுக்கு சொந்தக்காரர் - மகாகவி காளிதாசர். இதைப் போல, எத்தனையோ நம் படித்து இருந்தாலும், தெரிந்து இருந்தாலும் - நிகழ் காலத்தை உருப்படியாக வைத்து இருக்கிறோமா என்றால், இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. 

ஏன் என்றால், அதற்க்கு விடை இல்லை. ஒன்று கடந்த காலத்தை நினைத்து, ஒரு சோகப் போர்வையை போர்த்திக்கொண்டு முடங்கிக் கொண்டு இருப்போம். அல்லது எதிர் காலத்தை நினைத்து மனக் கோட்டையை கட்டிக்கொண்டு, முண்டி முரண்டு பிடித்துக் கொண்டு - நிகழ் காலத்தில் நிம்மதியைத் தொலைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
..
நம் நிகழ்கால நம்பிக்கையை குலைப்பதில் தான் விதி விளையாடுகிறது. நம்பிக்கையை வளர்க்க நாம் என்ன செய்யலாம்?

1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.

அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்படுத்து..
சிறப்பான வழிகளை தேர்வு செய்..
எப்படி செய்வதென எழுது..
வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு..
தினமும் எப்படி செய்வதென எழுது..
தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், செயலாக்கு..
வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..
தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..
மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் ஈடுபடு. .

2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண்டுதலை வழங்கி வெற்றி பெறு..

3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே.

4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து அதில் சிறந்ததை தெரிவு செய்..

5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியாகும்படி மனதில் பேசிப்பழகு...

6. உறுதியுள்ள மனிதரோடு அடிக்கடி பேசிப்பழகு..

7. பகை எண்ணங்களை விட்டொழிந்து தைரியமாக செயற்படு..

8. தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து செயற்படு..

9. சிறந்த வழியை கண்டெடுத்து உடனடியாக செயற்படு..

10. எப்போதோ சுடுவதற்கு இப்போது ஏன் பயிற்சி என்று கேட்காதே, கேப்டன் சுடச் சொல்லும் போது சுட்டால் குறி தவறிவிடும் நீ பகைவனின் குண்டுக்கு பலியாவாய்.

11. ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும், தன் வசமாக்கும் சாகசக்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து செயற்படுபவனே வெற்றியாளன்.

12. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.

13. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை..

14. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும் அஞ்சாமல் முன்னேறு...

15. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே...

16. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்...

17. எதையும் பின்தள்ளிப் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு...

18. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும்.

19. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.

20. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.

21. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி தானாகத் தேடி வரும்.

22. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும்.

23. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.

24. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.

25. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.

26. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.

27. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.

28. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.

29. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம்.

30. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது.

31. பறவைகள் கூடு கட்டும்போது ஒரு சொட்டு நீர் கூட உள்ளே புகாத வகையில் கூட்டைக் கட்டும். இந்தப் பொறியியல் அற்புதத்தை எங்கிருந்து அவை பெற்றன. அவை தமது தாய்ப்பறவையின் கருவில் இருந்தே கற்றுவிட்டன. பிறக்கப் போகும் குஞ்சுகள் மீதுள்ள அன்பு, குஞ்சுகளுக்கு கூடுகட்டும் கலையையே கற்றுக் கொடுக்கிறது.

32. தங்கள் மனைவியைவிட தங்கள் அபிப்பிராயத்தை பலர் அதிகமாக காதலிக்கிறார்கள். இதனாலேயே பலர் தங்கள் மனைவியை மதிக்காது அவமதிக்கிறார்கள். ஆகவே உங்கள் கருத்துக்களை கண் மூடித்தனமாக மதிக்காதீர்கள், உலகத்தில் எந்தக் கருத்தும் மாறக்கூடியதே.

33. பாரம்பரியத்தை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, உறவுப் பிணைப்புக்களை கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

34. காதலி ஏமாற்றிவிட்டாள் என்று கருத வேண்டாம், காதலி மீது நீங்கள் இதுவரை வைத்திருந்த அபிப்பிராயம்தான் உங்களை ஏமாற்றிவிட்டது என்பதே உண்மை.

35. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரணம் முழுமையாக நடைபெற வேண்டுமானால் குறைந்தபட்சம் மற்றவருக்கு உதவுவதை நிறுத்தாதீர்கள். ஒருவேளை உங்களால் மற்றவருக்கு உதவ முடியாமல் போனால் அவர்களை வேதனைப்படுத்தாதாவது இருக்கப்பாருங்கள்.

36. அறிவு புத்தகங்களில் இருந்து படிக்கும் ஒன்றல்ல, ஒருவர் பழகும் முறையில் இருந்து அவரிடமுள்ள அறிவின் ஆழத்தைப் படிக்கலாம்.

37. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 சதவீதமான அறிவு போதமானது. 65 சதவீதம் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

38. நீங்கள் செய்த தவறு என்னவென்று .. கூறியபடி மற்றவருடன் பேச ஆரம்பிக்க வேண்டாம். புகழ்ச்சியுடன் இடையிலேயே விமர்சனங்களை வையுங்கள்.

39. துறை முகத்தில் இருக்கும் கப்பல் பாதுகாப்பாகவே இருக்கும், அதற்காக கப்பல்கள் எல்லாம் துறைமுகத்திலேயே இருக்க வேண்டுமானால் கப்பல்களே வேண்டியதில்லையே.

40. முதன் முதலில் சிகரட்டை பிண நாற்றமெனக் கூறி ஒதுக்கிய மனிதன் பின்னர் புகைத்தலே ஆண்மைக்கு அழகு என்பது போன்ற பிரச்சாரங்கள் வந்ததும், பிணத்தையும் மறந்து, நாற்றத்தையும் மறந்து அதற்காகவே பணத்தையும் இழந்தான். இப்படித்தான் பிரச்சாரமும், மூளைச் சலைவையும் சமூகத்தை சீரழிக்கக் காரணமாகியிருக்கின்றன.சிகரெட்டை பிடிக்கும்போது தட்டும் சாம்பல், புகையிலையை எரிப்பதால் வருவது அல்ல! உங்களை எரிக்கும்போது கிடைக்கப் போகும், அந்த கடைசி சாம்பல்... அதை, நீங்களே தட்டிப் பார்க்கிறீர்கள் என்பதை உணருங்கள்!   

41. நீ கேட்க முடியாத ஒரு குரலை நான் கேட்கிறேன், அது சொல்கிறது நீ பின்தங்கிவிடக் கூடாது என்று, அதுபோல நீ காண முடியாத ஒன்றை நான் காண்கிறேன் அது என்னை பொருத்தமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. காணவும் முடியாது, கேட்கவும் முடியாத உன்னை நான் எப்படி பின்பற்றுவது ?

42. தான் செய்ய வேண்டிய வேலையுடன் பிறக்காத மனிதன் எவனும் உலகில் இல்லை. அதை அறிய முன்னரே பிள்ளைகளை பலவந்தப்படுத்தி இன்றய உலகின் மோசமான கல்விக்குள் கட்டாயப்படுத்தித் திணிக்காதீர்கள்.

43. யாரோ ஒருவர் பணம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக அவருடைய தொழிலையே நீங்களும் தேர்வு செய்யாதீர்கள்.

44. வாய்ப்பை உபயோகிக்கத் தெரியாத மனிதனுக்கு அதைக் கொடுப்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது. வாய்ப்பு வந்தும் பலர் செக்குமாடுகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு வாய்ப்பு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

45. வாய்ப்புக் குறைவு என்று கூறுவது பலவீனமான சஞ்சல மனம். உண்மையில் வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன என்பதே யதார்த்தம்.

46. ஊருக்கு உபதேசம் செய்து தம்மை உத்தமர் போல காட்டுவோர், இரகசியமாக ஒழுக்கம் குன்றி நடப்பது அம்பலமாகும் போது அவர்களே செல்லாக்காசுகளாகிறார்கள்.

47. தன்னை வளர்க்க, உருவாக்க, தயார்படுத்த பொருத்தமான காலம் இளமைப்பருவமாகும்.

48. இந்த உலகம் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாகும் அதை அறிந்து உலகை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும்.

49. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்

50. பூரணத்துவத்தை மெதுவாகவே அடைய வேண்டும், அதற்குக் காலம் என்ற கை உதவ வேண்டும்.