மொத்தப் பக்கக்காட்சிகள்

3/29/2013

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்!



1. உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு ராஜாவைப் போல வாழுங்கள்.

2.அனைத்துவித தூண்டுதல்களிலிருந்தும் விலகி இருங்கள். தூண்டுதல்களை உண்டாக்கும் இடங்களுக்கு செல்லாதீர்கள். பிறகு தூண்டுதல்களை தவிர்க்க போராட வேண்டியிருக்கும். அது உங்கள் இச்சா சக்தியை வீணடிக்கும். தூண்டுதலை தடுப்பதில் நீங்கள் வெற்றி பெற்றாலும், அது உங்கள்மனதில் ஒரு ஆசையை விட்டுச் செல்லும். ஆசை அல்லது விருப்பமே மன சஞ்சலத்தைத் தூண்டுகிறது.

3.உங்கள் பொதுவான புறவேலைகளுக்கேற்ப தேவையானவற்றை மிகமிகக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆசைகளும் தேவைகளும் மிக மிகக் குறையும்போது மன அமைதி மிகவும் அதிகரிக்கும். உடைமைகள் துன்பத்தைத் தருகின்றன.

4. ஒரு சில நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள். பழக்கத்தை பெருக்க வேண்டாம். எவருடனும் அதிகமாக நெருங்கிப் பழகவேண்டாம். அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்குலைத்து மன அமைதியைக் கெடுக்கிறது.

5.காரணத்துடன் மட்டும் பேசுங்கள். அனைத்துவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள், களங்கமற்ற, நல்நோக்கம் கொண்ட வார்த்தைகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகிறது. எதிலும், எவருக்கும் புத்திமதி கூறாதீர்கள். உங்களிடம் கேட்காத வரையில், நமது வேலையைப் பார்ப்போம்.

6. விவாதம் செய்யாதீர்கள். ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள். அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும் மற்றவரைப் புண்படுத்தும், நண்பர்களுக்குஇடையே பிளவை உண்டாக்கும்.

7. மன அமைதியும், பொருள்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எதுதேவையோ அதை தேர்ந்தெடுங்கள்.

8. நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்!

9. மக்கள் உண்மையாகவே உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். ஆனால், உதவி செய்தால் உங்களையே தாக்கக்கூடும். இருந்தாலும் உதவியையே செய்யுங்கள்.

10.உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள். ஆனால்,இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள்.

11. நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளைக்கே மறுக்கப்பட்டுவிடும். இருந்தாலும் நல்லதைச் செய்யுங்கள்.

12. உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப்பாதையில் செல்லுங்கள்!

13. வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த உலகத்தினர் குறை சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறைகூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

14. நியாயத்திற்கு விரோதமாக, தர்க்கத்திற்குப் பொருந்தாதவர்களாக, தன்னலம் மிகுந்தவர்களாக மக்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களிடம் அன்பாக இருங்கள்.

15. பிரார்த்தனையைப் போன்று பரிசுத்தப்படுவது வேறு ஒன்றும் கிடையாது. ஒழுங்காக நாள்தோறும் பிரார்த்தனை செய்து வந்தால் உங்களது வாழ்க்கை நன் முறையே உருவாக்கப்படும்.

16.  நீங்கள் நல்லநிலை பெற வேண்டுமென விரும்பினால் முதலில் உங்களிடமிருக்கும் கீழான ஆசைகளை துறந்துவிடுங்கள்.

-சிவானந்தர்

Thanks to Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக