மொத்தப் பக்கக்காட்சிகள்

5/28/2016

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்.....

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்.....

 images of street dogs க்கான பட முடிவு

ஒரு பங்களா வீட்டு நாயும் தெரு நாயும் பேசிக்கிட்டுருந்திச்சி!.....

தெரு நாய் : என்னப்பா எப்படி இருக்கே,வாழ்க்கை எல்லாம் எப்படிப் போகுது?....

பங்களா நாய்:நமக்கென்னப்பா சுகம்மா போகுது......மட்டன்,முட்டை,பிஸ்கேட்டுன்னு .....
உனக்கெப்படி.......

தெரு நாய் :: நாளொரு தெரு, பொழுதொரு குப்பத் தொட்டின்னு பொழப்பு ஓடுது!.....

பங்களா நாய்: : சுகமான வாழ்க்கப்பா உனக்கு.....

தெரு நாய் ::உனக்கென்னப்பா குறைச்சல்.....நல்ல சொகுசா நிழல்ல இருக்கே.......நேரத்துக்கு சாப்பாடு போட்டு,நோவுன்னா மருந்து குடுத்து முதலாளி நல்லா தான வச்சிருக்காரு!..

பங்களா நாய்: :அடப் போப்பா எல்லாம் கேக்க நல்லா இருக்கும் ஆனா எப்போப் பாரு கட்டிப் போட்டே வச்சிருக்காங்கே......நாலு தெருவுக்குப் போனோம் நாலு நாய்ங்களைப் பாத்து சைட் அடிச்சோம்னு இருக்கா.....என்னதான் இருந்தாலும் தெருநாய் வாழ்க்கை போல வராதுப்பா!.....

தெரு நாய் ::அப்போ எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்துர்றியா?.......

பங்களா நாய்:: வரலாம் தான்....ஆனா.......

தெரு நாய் ::என்ன ஆனா?......

பங்களா நாய்: :இந்த வீட்டு முதலாளி சொன்ன ஒரு வார்த்தை தான் என்னைத் தடுக்குது......

தெரு நாய் :என்ன சொன்னாரு உன் முதலாளி.....நீ இல்லேன்னா செத்துப் போய்டுவேன்னாரா?..

பங்களா நாய்: :இல்லப்பா இவருக்கு ஒரு பொண்ணு இருக்கா,சும்மா சினேஹா மாதிரி செமையா இருப்பா!....

தெரு நாய் : :சரி........

பங்களா நாய்: :அவளுக்கு ஜாதகத்துல ஏழாம் வீட்ல ராகுவாம் அதனால கல்யாணத்துல ஏதோ தோஷம் வருமாம்....அப்பா சொல்றாரு!ஆனா சினேஹா சொல்லுது ஏழாம் வீட்ல ராகு இல்ல ரகு தான் இருக்காரு நன் அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு......

தெரு நாய் : சரி தானேப்பா........

பங்களா நாய்: :ஆனா முதலாளி கண்டிசனா சொல்லிட்டாரு.....அதான் யோசிக்க வேண்டியது இருக்கு.....

தெரு நாய் : என்னப்பப் போட்டுக் குழப்புற.....அப்படி என்ன தான் சொன்னாரு உன் முதலாளி ?...

பங்களா நாய்: :இல்ல......இந்த நாய்க்கு வேணாக் கட்டிக் குடுப்பேன் ஆனா அந்த ரகுவுக்குக் கட்டிக் குடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு........அதான் கொஞ்சம் வெய்ட் பண்றேன்.....

தெரு நாய் :டேய்.......அந்தப் பொண்ணு நினைக்குறது ஆசை.......ஆனா நீ படுறியே அது பேராசைடா .......

குடிகாரன் திருந்துவதற்கு ஒரு வழி !

குடிகாரன் திருந்துவதற்கு ஒரு வழி !


ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர்
இருக்குமிடத்துக்கு வந்தான்.

“நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி
கூறுங்கள் ஐயா…” என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி, “நாளை மாலை என்னை வந்து பார்
சொல்கிறேன்”.

மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.
அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு
நின்றார். தூணைப் பார்த்து, “ஐயோ என்னை விட்டுவிடு…
விட்டுவிடு…” என்று கத்திக் கொண்டிருந்தார்.

உடனே குடிகாரன், “நீங்கள்தானே தூணைப் பிடித்துக்
கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்” என்றான்.

உடனே ஞானி, “நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது
போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்.
நீயே விட்டுவிடு” என்றார்.

5/26/2016

தர்மம் தலைகாக்கும் !




வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.