மொத்தப் பக்கக்காட்சிகள்

1/11/2016

மனித நேயம்

மனதைத் தொட்ட உண்மைக் கதை..
.
அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
.
ரெடி, ஸ்டார்ட் , கோ
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
“இப்போ வலி போயிடிச்சா”

அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள்.
பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள்.
கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை
.
அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
.
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆணல் குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?

மனித ஒற்றுமை

மனித நேயம்

மனித சமத்துவம்.
.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
.
அன்பு நண்பர்களே .

அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.
தூய்மை ,  பொறுமை , விடா முயற்சி இவை முன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் . அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும் ... .......

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!




உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. 

என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!!


Thanks to Karthik




உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை !!!

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...

இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் !!!

உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம். 

இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது, அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. 

மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரிய நகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது. 

இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது.