மொத்தப் பக்கக்காட்சிகள்

11/05/2011

குற்றாலம் அருவி



குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.

குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.


தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.
7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

படகு குழாம் : குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.


மீன் காட்சியகம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சித்திர சபை : தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குற்றாலம் சித்தர சபையாகும். இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆய்வகம் : பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கோவில்கள் : குற்றாலத்திற்கு உல்லாசப் பயணம் வரும் பயணிகள் தரிசனம் செய்ய பிரசித்த பெற்ற குற்றால நாதர் கோவில், இலஞ்சிகுமாரர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், பண்பொழி திருமலை கோவில், புளியரை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவில், செங்கோட்டை ஆஞ்சநேயர் கோவில், ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் கோவில், அச்சன்கோவில், மற்றும் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

விடுதிகள்: அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) மற்றும் தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.


இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை




 உழைப்பை ஊக்கப்படுத்தி அதற்கு முறையான ஊதியம் வழங்கப்ப    வேண்டும்.

கல்வி:
தொடக்கக் கல்வி முதல் ஆய்வு நிலை வரையிலான கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம் போன்ற அனைத்துக் கல்வியும் குடிமக்கள் அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட  வேண்டும் .

வேலை வாய்ப்பு:
 கல்வி கற்ற குடிமக்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிகேற்ப 100 விழுக்காடு வேலை வாய்ப்பு அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட    வேண்டும்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல்
பராமரிப்பு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தரப்பட  வேண்டும்

 சுய உதவிக் குழுக்களுக்கு பணம் வட்டிக்கு விடப்படுவதைத் தடுத்து பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய  வேண்டும்.

மருத்துவம்:
 குடிமக்கள் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் உயர்தரமான மருத்துவச் சேவையை முற்றிலும் இலவசமாக அரசே வழங்க வேண்டும் 

 இந்திய பாரம்பர்ய வைத்திய முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யூனானி மற்றும் ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு இதன் ஆய்வுகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட  வேண்டும் .

சுகாதாரம்:

 சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் எல்லா உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் அதன் உற்பத்தி பாதிக்கப்படாமல் மாற்று ஏற்பாடு உடனடியாகச் செய்து  தரப்பட வேண்டும் 

 மனிதர்களுக்கும் பூமிக்கும் கேடு விளைவிக்கும் எந்த இரசாயனப் பொருளையும் உற்பத்தி செய்வதற்கும் அதை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கபட வேண்டும் .

 உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பான்பராக், குட்கா, ஜங்புட்ஸ், பெப்ஸி, கோக் போன்ற பொருட்களுக்கு நிரந்தர தடை. மீறினால் அது கொலைக் குற்றமாகக் கருதப்பட வேண்டும்.

 திருப்பூர் உள்ளிட்டு நாடு முழுவதிலும் உள்ள சாயப் பட்டறைகளில் இரசாயன சாயப் பொருட்களுக்கு மாற்றாக மூலிகை சாயப் பொருட்கள் பயன்படுத்திட வழிவகை செய்யப்பட வேண்டும்.

மது:
* 100% பூர்ண மதுவிலக்கு கறாராக அமல்படுத்தப்பபட வேண்டும்.

 கள்ளச்சாராயம் காய்ச்சுவது மரண தண்டனைக் குரிய   குற்றமாக்கப்பட வேண்டும்  .

கள்:

தென்னை,பனை மரங்களிலிருந்து அரசே கள் இறக்கி அவற்றை உணவுப் பொருட்களாகவும் மருந்து களாகவும் உற்பத்தி செய்யும்.

விவசாயம்:
 விவசாயமுறை முற்றிலும் மாற்றப்பட்டு இயற்கை முறையிலான  விவசாயமுறை கடைபிடிக்கப்பட    வேண்டும்.

 இரசாயன உரம், பூச்சி மருந்து போன்றவற்றை உற்பத்தி செய்யவோ இறக்குமதி செய்யவோ தடை விதிக்கப்பட    வேண்டும்

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதை மற்றும் இயற்கை உரங்கள் இலவசமாக வழங்கப்பட    வேண்டும்.

 நாட்டில் உள்ள அத்துனை தரிசு நிலங்களும் விவசாயத்திற்கு ஏற்றவையாக மாற்றப்பட    வேண்டும்.

* யூகபேரம், முன்பேரம் என்ற வியாபார சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட    வேண்டும்.

* விவசாய பொறியியல் பல்கலைக் கழகம் துவங்கப்பட    வேண்டும்.

* மாவட்டம் தோறும் இயற்கை விவசாயக் கல்லூரிகள் உருவாக்கப்பட    வேண்டும்.

நீர்:
 குடி மக்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரம் கிடைக்க வழிவகை செய்யப்பட    வேண்டும்.

* ஏரி, குளங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அவற்றை மழைநீர் சேமிப்பு இடங்களாக மாற்றப்பட    வேண்டும்.

* நகரங்களில் மழைநீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட    வேண்டும்.

* புதிய நீர் தேக்கங்கள், கண்மாய்கள் உருவாக்கப்பட    வேண்டும்.

சுரங்கம்:

 கனிம வளங்கள் மற்றும் அனைத்து விதமான சுரங்கத் தொழிலும் அரசுடமையாக்கப்படும். தனியார் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட    வேண்டும்.
* பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் எடுக்கப்படும் கனிமப் பொருட்களின் மதிப்பில் பெரும்பகுதி அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு செலவிடப்பட    வேண்டும்.

வரி:

* தொழில் வரி, விற்பனை வரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வை, மதிப்புக்கூட்டு வரி, உற்பத்தி வரி போன்ற எல்லா கோமாளித் தனமான வரிகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்.பட    வேண்டும்

* தொழில் மற்றும் உற்பத்தியில் கிடைக்கின்ற இலாபத்தை கணக்கிட்டு ஆண்டிற்கு 21/2 சதம் மட்டும் வரியாக வசூல் செய்யப்பபட    வேண்டும்.

 தொழில் நிறுவனங்களிலும் வீடுகளிலும் புகுந்து சோதனையிடுவதை மனிதனின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாக கருதி அனைத்து துறை சார்ந்த அமலாக்கப் பிரிவுகளும் கலைக்கப்பபட    வேண்டும்.

லஞ்சம் – ஊழல்:

* அனைத்துத் துறைகளிலும் கடமையை செய்ய – கடமையை மீற லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் திருட்டுக் குற்றமாகக் கருதி குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனைக் குரிய குற்றமாக்கப்பட வேண்டும்  .

பொருளாதாரம்:

 வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் முழுவதும் உடனடியாக திரும்பப் பெறப்பட    வேண்டும்.

 வட்டி அடிப்படையிலான அனைத்து பொருளாதார பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பபட    வேண்டும்.

 மனிதாபிமான அடிப்படையிலான வட்டி இல்லா வங்கிச் சேவை அறிமுகப்படுத்தப்பட    வேண்டும்.

* உலக வங்கி, சர்வதேச நிதியகம் போன்ற உலகமகா வட்டி கம்பெனிகளிடம் கடன் பெறுவது தடை செய்யப்பட    வேண்டும்.

* கந்துவட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, வார வட்டி போன்ற அக்கிரமங்கள் அனைத்தும் உடனடியாக முடிவிற்கு கொண்டு வரப்பட    வேண்டும்.

மதிப்பில்லாத காகித நோட்டிற்கு பதிலாக மதிப்புடைய தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் நாணயங்கள் உருவாக்கப்பபட    வேண்டும்.

மின்சாரம்:
* விவசாயத்திற்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட    வேண்டும்.

* வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட    வேண்டும்.

* காற்று, சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்திட அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட    வேண்டும்.

* அணுமின் நிலையங்கள் இழுத்து மூடப்பபட    வேண்டும்.

போக்குவரத்து:

* சாலை வரி, வாகன வரி, சுங்க வரி போன்ற அநியாயங்களிலிருந்து உடனடி விடுதலை         பட    வேண்டும்

* அரசுப் பேருந்துக்கள் தரம் உயர்த்தப்பட    வேண்டும்.

* இரவில் பணியாற்றும் ஓட்டுனர் நடத்துனருக்கான ஊதியம் உயர்த்தப்படும், அவர்களுக்கு தொடர்ந்து இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட    வேண்டும்.

 சாலை விதிகளை கடை பிடிக்காதவர்களுக்கு குற்றங்களுக்கேற்ப  தண்டனைக் .கொடுக்கப்பட    வேண்டும்
.
முதியோர்:

 முதியோரை கைவிடுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்பட    வேண்டும்.

* அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் அனை வரின் உணவு, உடை, மருத்துவம், இருப்பிடம் அனைத்தும் உறுதி செய்யப்பட    வேண்டும்.

பெண்களுக்கு:

* கல்வி மற்றும் சொத்துரிமை உறுதி செய்யப்பட    வேண்டும்.

* கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை.வழங்கப்பட   வேண்டும்

* வரதட்சணை போன்ற சமூக கொடுமைகளுக்கு கசையடி கொடுக்கப்பட    வேண்டும்.

* விபச்சாரத்திற்கு கசையடி மற்றும் மரண தண்டனை வழங்கப்பட    வேண்டும்.

கலாச்சாரம்:

* எல்லா மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளும் பாதுகாக்கபட    வேண்டும்.

* கட்டாய மதமாற்றம் தடைசெய்யப்பபட    வேண்டும்.

* மத துவேசத்தை விதைப்பவர்களுக்கு கடும் தண்டனை.

ஊடகம்:

* மனித வாழ்வை மேம் படுத்திடும் பயனுள்ள சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* பகல் நேர சினிமா காட்சிகள் இரத்து செய்யப்படும்.

பொதுச் சொத்து:

* கோயில் மற்றும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருது மீட்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்.

* கோயில்களை பராமரிக்கும் பொருப்புகள் இந்துமத ஆன்மீக பெரியவர்கள் கொண்ட சபையில் ஒப்படைக்கப்படும்.

மீனவர்கள்:

கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் குளிர் சாதன கிடங்கு அமைக்கப்பட்டு மீனவர்களுக்கு கடல் சார் உணவுகளை பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் போன்ற பயிற்சி அளிக்கப்படும்.


நதி நீர் இணைப்பு சாத்தியமே

காந்திநகர்: நதி நீர் இணைப்பு சாத்தியமில்லாதது. இதனால் இந்தியாவில் சுற்றுச்சூழல், பொருளாதார, மனிதகுல பேரழிவு ஏற்படும் என கூறியுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு குஜராத் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
iron_gate_dam_klamath_river_california_treehugger_american_rivers
   இதுகுறித்து குஜராத் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நதீன் படேல் கூறுகையில், நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது என்பது எளிதல்ல என்ற ஜெய்ராம் ரமேஷின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நிச்சயம் அது சாதாரண விஷயமல்லதான். ஆனால், அந்தத் திட்டத்தால் பேரழிவு ஏற்படும் என்று ரமேஷ் கூறுவதை அப்படியே நிராகரிக்கிறேன்.

குஜராத் மாநிலத்தில், கிட்டத்தட்ட அரை டஜன் நதி நீர் இணைப்புத் திட்டங்களை நாங்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். சுஜலம்-சுபலம், சபர்மதி- சரஸ்வதி, பாதர்- மாஹி ஆறுகள் இணைப்புத் திட்டம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டங்களால் பலன்களும் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டங்களால் வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் குடிநீர்ப் பிரச்சினை, நீர்ப்பாசனப் பிரச்சினைக்கு பெரும் விமோச்சனம் பிறந்துள்ளது.

நதிகள் இணைப்பால் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. குஜராத் முழுவதும் அமலாகிக் கொண்டிருக்கும் நதி நீர் இணைப்புத் திட்டங்களால் நாட்டின் பசுமைச் சூழல் மேலும் அதிகரித்துள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.
ஆறுகளை இணைப்பது என்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடிய திட்டம்தான். ஆனால் அதை விட மக்களுக்கு தண்ணீர் கிடைப்பது முக்கியமல்லவா. அதைத்தான் நாங்கள் கருத்தில் கொண்டு பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கான இந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.

முன்னாள் மத்திய நீர் வளத்துறை செயலாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆலோசகருமான நாவல்வாலா கூறுகையில், நதி நீர் இணைப்பு நிச்சயம் நாட்டுக்கு மிகுந்த நன்மை பயக்கக் கூடியதே.

 நமது நாட்டின் மழை பெய்யும் முறைகள் மாறிப் போய் விட்டன. நீராதாரங்கள் குறைந்து விட்டன. இப்படிப்பட்ட நிலையில் நாட்டில் சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது. ஒரு பக்கம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு பக்கம் வறட்சி தலைவிரித்தாடுகிறது.

இப்படி உள்ளதை மாற்றி தண்ணீர் அதிகம் உள்ள பகுதியிலிருந்து அவற்றைத் திருப்பி தண்ணீரே இல்லாமல் தவிக்கும் பகுதிகளுக்குக் கொடுப்பது நமது கடமையாகும்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982ம் ஆண்டு தேசிய நீர் மேலாண்மை கழகம் உருவாக்கப்பட்டது. நதி நீர் இணைப்பு குறித்து ஆய்வு செய்யவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் சுற்றுச்சூழலியாளர்கள் தேவையில்லாமல் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

ஜெய்ராம் ரமேஷ் கூறியது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. 1992-93ல் நானும், அவரும் மத்திய திட்ட ஆணையத்தின் இணைச் செயலாளர்களாக இருந்தோம். அவர் மிகவும் புத்திசாலியானவர். அதேசமயம், ஆறுகளை இணைப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதனால் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். பல்வேறு மாநிலங்களில் நிலவும் வறட்சி, குடிநீர்ப் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.

இருப்பினும், ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பு அனைத்து உள்ளூர் நீராதாரங்களும் உரிய முறையில் முறைப்படுத்தப்பட்டு விட வேண்டும் என்றார்
 

குருதட்சணை-சிறுகதை



கொலுப் படிகளில் ரங்கநாதர்,   ராமன், லக்ஷ்மணன், சீதை, முருகன், காந்தி, நேரு என ஏகப்பட்ட பேர் குழுமியிருந்தார்கள். எதிரே, தரையில் அமர்ந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற ராகமாலிகை பாடலில், ஒவ்வொரு ராகத்தையும் சந்தியா வயலினில் கையாண்ட விதத்தில் மயங்கி, 'அடடா! இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானம்?முகத்தில் எத்தனை களை?'என்று வியந்து அமர்ந்திருந்த கோபாலுக்கு,ஆறு மாதங்களுக்கு முன் இதே இடத்தில் அவளுடன் பேசினவைகள் ஞாபகத்துக்கு வந்தன.

" வயலின் கத்துக்கறதை விட்டுடலாம்னு இருக்கேன் மேடம்!"

"என்ன இது திடீர்னு... என்ன ஆச்சு உங்களுக்கு?"

"இதுக்கு மேலேயும் உங்ககிட்டே தொடர்ந்து வயலின் கத்துக்கிட்டா, அது ரெண்டு பேருக்குமே நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன்."

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. எதுவாக இருந்தாலும், என்னிடம் தயங்காம சொல்லலாம்."

"ஊர்ல நம்ம ரெண்டு பேரையும் இணைச்சுக் கன்னாபின்னான்னு பேசறாங்க!"

"வேலை வெட்டி இல்லாதவங்க எது வேணா பேசிட்டுப் போகட்டும். அதுக்காக நீங்க வயலின் கத்துக்கறதைப் பாதியிலேயே நிறுத்திடறேன்னு சொல்றது எந்த விதத்தில் சரின்னு நினைக்கறீங்க?"

"அது...வந்து..."

"இதோ பாருங்க, கோபால்! நான் பூவும் போட்டும் வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாத்தான் என் கணவருக்குப் பிடிக்கும். இளம் வயசிலேயே நான் விதவை ஆகிட்டாலும், அவரோட நினைவுகளோடையே வாழ்ந்துகிட்டிருக்கறதாலதான், அவர் விருப்பப்படியே இன்னும் அலங்கார பூஷணியா வலம் வந்துகிட்டிருக்கேன்.அதே போல இனி நான் யாரையும் மறுமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதிலும் உறுதியா இருக்கேன்.அவர் இல்லாத வெற்றிடத்தை இசை ஓரளவு நிரப்பும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்குத் தெரிந்த வித்தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அதை பாதியில் நிறுத்தறது, கருவிலேயே குழந்தையைக் கொல்றதுக்குச் சமம். அந்தப் பாவத்தைச் செய்தவளா நான் ஆகணும்னு நினைச்சா, தாராளமா நின்னுக்குங்க!".

சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி ஏறிச் சென்ற சந்தியாவை மறுநாள் கோபால் சந்தித்து மன்னிப்புக் கேட்டு,தொடர்ந்து வயலின் கற்று அரங்கேற்றம் செய்தததில் சந்தோஷமானாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறான்.

'குறையொன்றுமில்லை' பாட்டை வயலினில் சந்தியா வாசித்து முடிக்கவும் வராந்தாவிலிருந்து கை தட்டிப் பாராட்டியவாறே வந்து அமர்ந்த பெண்ணை அறிமுகம் செய்தான் கோபால்.

"இவள் கஸ்தூரி. கல்யாணமாகி மூன்றே மாதத்தில், பைக் ஆக்ஸிடென்ட்டில் கணவனைப் பறிகொடுத்தவள். நான் அரங்கேற்றம் முடிச்சு ஊருக்குப் போன இடத்தில் இவளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே பார்த்துப் பேசி, பெரியவங்க சம்மதத்தோட தாலி கட்டி, என் மனைவியா உங்களிடம் அறிமுகப்படுத்த அழைச்சுகிட்டு வந்திருக்கேன். நல்ல உறவுகளை கொச்சைப்படுத்தினவங்களுக்கு இதுதான் பதிலாக இருக்கும்னு தோணிச்சு, கூடவே, குருதட்சணையாகவும் அமையும்னு நினைக்கிறேன். எங்களை ஆசிர்வதியுங்கள் மேடம்!" என்றான் கோபால்.

இருவரையும் ஆசிர்வதித்த சந்தியா வாசல் வரை வந்து தயாராக இருந்த ஆட்டோவில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்து, அக்கம்பக்கத்தார்கள் பார்த்துக்கொண்டிருக்க கையசைத்து அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

அவளின் மனசு இப்போது நிறைந்திருந்தது.

( 2006 "ஆனந்த விகடன் " தீபாவளி மலரில் வெளியான  சிறுகதை )

வேட்டை சிறுகதை



கிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யகுமாருக்கு மகாபலிபுரம் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் அறிவழகனின் வீட்டைக் கண்டுபிடிப்பதில்எவ்விதசிரமமும் இருக்கவில்லை.அதிரடியாய் வீட்டுக்குள் புகுந்தார்.அங்கிருந்த பீரோவை குடைந்து அதிலிருந்த ஒரு போட்டோவை எடுத்தார் .

"இந்தப் பெண்ணை எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கே நாயே?" இன்ஸ்பெக்டர் கேட்கவும், ஆடிப் போய்விட்டான் அறிவழகன்.

" அவங்க எங்கிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார்".

"எ...ன்னது உனக்குத் தெரியாதா? அவ பக்கத்தில் இருக்கிறது நீதானே?"

"ஆ...ஆமாம். சார்"

'பின்னே தெரியாதுங்கறே! அவ யாருன்னு தெரியுமா? தீவிரவாதிங்க கும்பல்ல அவ ஒருத்தி.மூணு வருஷமா அவளைத் தேடிக்கிட்டிருக்கோம். அவளோட தலைக்குஅரசாங்கம் நிர்ணயிச்சிருக்கற விலை எவ்வளவு தெரியுமா?மூணு லட்சம்! மரியாதையா அவ இருக்கற இடத்தைக் காட்டிடு . இல்லே உனக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்தா நீ உண்மையை கக்குவேன்னு எனக்குத் தெரியும்டா ராஸ்கல்".

அதிர்ந்தான் அறிவழகன்.தீபா தீவிரவாதி கும்பலை சேர்ந்தவளா? தெரியாமல் போய்விட்டதே!

டூரிஸ்ட் பஸ்ஸில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்தவளிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்துவிட்டு,அவள் புறப்படுகிற சமயத்தில் வழக்கமாக எல்லோரிடமும் கேட்பது போல கேட்டான். "உங்க ஞாபகமா உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே ப்ளீஸ்.."

அவள் சம்மதித்தாள்.அவனுடைய சகாவை விட்டு போட்டோ எடுக்க வைத்து,அவளுடைய அட்ரசையும் வாங்கிக் கொண்டு அனுப்பியது இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டிவிடும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"சார்.. சார், உண்மையை சொல்லிடறேன் சார்," என்று கூறிவிட்டு, மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவளோடு அவன் போட்டோ எடுத்துக் கொண்டது வரை விலாவாரியாக சொன்னான்.

"ம்... அப்ப நான் சொல்ற மாதிரி இந்த பேப்பரில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு!".

"எனக்கும் இந்தப் போட்டோவில் இருக்கும் தீபாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. டூரிஸ்ட் கைடு என்ற முறையில் பக்கத்தில் நின்று நட்புடன் போட்டோ எடுத்துக்கொண்டதுதான் உண்மை."

--- அறிவழகன்.

என்று இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

"இந்த போட்டோவோட நெகடிவ் எங்கேடா வச்சிருக்கே?'--இன்ஸ்பெக்டர் அதட்டவும் பெட்டியில் பத்திரப்படுத்தியிருந்ததை எடுத்து பவ்யமாக நீட்டினான்.

கிண்டி போலீஸ் ஸ்டேஷன்.

"தீபா உங்கிட்டே என்ன சொன்னான் அந்தப் பொறுக்கி?அவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானே? இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே! உன்னோட படிக்கற பொண்னுங்ககிட்டேயும் சொல்லு" .

"இந்தாங்க சார் அந்தப் பையன் எழுதிக் கொடுத்த லெட்டரும் போட்டோவின் நெகட்டிவ்வும்"--தீபாவின் அப்பாவிடம் இரண்டையும் கொடுத்த இன்ஸ்பெக்டர் கடமை செய்துவிட்ட திருப்தியோடு அடுத்த வேலையைக் கவனிக்கப் புறப்பட்டார்.


( "பாக்யா" இதழில் வெளியான சிறுகதை )

பொன் மொழிகள்



கோப மனோநிலையில் உள்ள போது முடீவுகள் எடுப்பதையும்,
சந்தோசமாக உள்ளபோது சத்தியங்கள் வழங்குவதையும் தவிருங்கள்

'அன்பு என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது, மாறாக இதயத்தில் இருக்க வேண்டும்.

கோபம் என்பது இதயத்தில் இருக்கக் கூடாது, வார்த்தைகளில் மட்டும் தான் இருக்க வேண்டும்.'

'உண்மைகள் எப்போதும் மதிக்கப்படுவதில்லை, மாறாக மிதிக்கப்படும்...
உண்மையாக இருப்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன???')

'Leave something for parents,
never leave parents for something
.

'பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.
பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்.
'
'வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது...

தோல்வி என்பத நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது

தவறில்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.'

சொன்னவர் பெரியார்.

கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் யாரும் தமக்கு மொட்டை போடுவதில்லை...

மாறாக மறுபடியும் தங்களுக்கு முடி வளரும் என்ற நம்பிக்கையில் தான் மொட்டை போடுகிறார்கள்...


சம்பாத்தியம்-சிறு கதை

பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.


பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது. குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.


ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.


அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தான் .


இரவு எட்டு மணி ஆகவும் சரவணனை அழைத்துக்கொண்டு கல்லாவிலிருந்த முதலாளியிடம் போய் " அய்யா சம்பளத்தை கொடுத்தீங்கன்னா இவனை அனுப்பிச்சுடுவேன், அப்புறம் எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாது" என்றார் மாசிலாமணி.


" இவன் இந்த வருஷம் இன்ஜினியரிங் காலேஜில் சேரப்போறான் இல்லே? நீ கேட்டிருந்த அட்வான்ஸ் பணம் பத்தாயிரமும் தர்றேன். ஆனா லீவு போடாம வேலை செய்யணும் புரிஞ்சுதா ? " என்று சொல்லியவாறே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.


பணத்தை வாங்கி சரவணனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு "ரொம்ப நன்றிங்க முதலாளி" என்றார் .


" இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். ஓவ்வொரு மாசமும் உன் பையனை இங்க வரவைச்சு சம்பளப்பணத்தை கொடுத்தனுப்பணுமா? ஒரு நடை கிராமத்துக்கு போய் உன் பொண்டாட்டிகிட்டே கொடுத்துட்டு வந்தாத்தான் என்ன? " என்று கேட்ட முதலாளியிடம் ...


"நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை. நான் கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறேன் என்பதை அவனும் உணரணும்கிறதுக்காகத்தான் ஓவ்வொரு மாசமும் சம்பள நாள் அன்று அவனை வரச்சொல்லி சமயலறையில் காக்க வச்சு நான் படற கஷ்டங்களை நேரடியா பார்க்க வைக்கிறதுனால அவனும் அதை உணர்ந்து பொறுப்பா நடந்துகிட்டு நல்லா படிச்சுமுதல் ரேங்க் வாங்கறான் அய்யா" என்றார்.


" நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா "என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.
-.


தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

வேலைக்கான நேர்காணலில்


வேலைக்கான நேர்காணலில்...... உண்மையைச் சொல்ல முடிந்தால்.....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்...?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும் .. எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான் .... அதை தவிர உன் கம்பெனி மேல பெருசா ஒன்னும் மதிப்பு மரியாதைல்லாம் இல்ல ...!!

உங்களுக்கு ஏன் இந்த வேலையை தரவேண்டும் ....?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்... என்கிட்டேதான் கொடுத்துப் பாரேன் ....!!

உங்களுடைய தனித்திறமை என்ன ....?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழி இருக்கான்னு பார்ப்பேன் ... இங்கேருந்து என்னென்ன சுடலாம்னு நோட்டம் உடுவேன் .... உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததை சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன் ... அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதை தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்கு கொண்டு வரணும்ங்கற நம்பிக்கையெல்லாம் கிடையாது...

உங்கள் மிகப்பெரிய பலம்...?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிடுவேன்... மனசாட்சி.. நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா ... இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன் ....!!!

பலவீனம் ....?

ஹி.....ஹி..... பெண்கள் ....!!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன....?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன் ... அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிறத அளவுக்கு சம்பளத்தை கறந்துருக்க மாட்டேனா.....??

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன ...? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்...?
ஆண்டவன் அருள்தான் காரணம்.... இது வரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கிறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபுடிச்சதே இல்ல.....

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள் ....??

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்க்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ .. அதே காரணதுக்காகதான் ..??

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன...?

நல்ல சம்பளம் , வேலை , பக்கத்துக்கு சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண் , நாட்டமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம், அது போதும் ....!!


நன்றி...


காந்தியின் பொன்மொழிகள்


தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை வெளிக்காட்டுவது தான் தற்காப்புக்கலை.

இதைத்தான் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். தற்காலத்தில் தங்களை, எல்லாம் தெரிந்துவிட்ட பெரியவர்களாகக் கருதிக் கொள்கிற வழக்கம் நம் வாலிபர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

உண்மையான தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக் கொண்டே போகும்.

அமைதியிலிருந்து அதிகமான அமைதிக்கு அவன் வளர்ந்து கொண்டே போகிறான்.

 என் உடலுழைப்பாலும், மூளையுழைப்பாலும் வெளிப்படும் சக்தியையும், வேகத்தையும் நேரில் பார்த்தவர்கள் அவை அதிசயிக்கத்தக்கவை என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார்கள். அதற்கு மூல காரணமானதும், நீண்ட காலமாக நான் நோய்க்கு ளாகாமல் ஆனந்தம் அனுபவித்து வருவதற்கும் காரணம் தன்னடக்கமே என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.


நமது இன்றையச் சமுதாய அமைப்பில் தன்னடக்கத்தை வளர்க்கும்படியான வசதிகள் எதுவும் அமைந்திருக்கவில்லை.நம்முடைய வளர்ப்பு முறையே அதற்கு எதிராக இருந்து வருகிறது.

தன்னடக்கச் சக்தியானது பெண்களைவிட ஆண்களிடமே குறைவாகக் ணப்படுகிறது.தன்னடக்கத்தைப் பயில்வது ஆணைவிடப் பெண்ணுக்கு வெகு சுலபம்.

எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதுதான் தன்னடக்கத்தின் முதற்படியாகும்.

சத்தியத்தையும் அகிம்சையையும், பலிகொடுத்து விட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.