மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2014

கடவுள் !

 
 
அண்டம் காக்கும்
கடவுளைப் பார்க்க
காத்திருக்கிறேன்
தரிசன
வரிசையில்!

 
எனக்கு மட்டும்
காட்சி தருகிறார்
என் கடவுள்
விஷேச கட்டணத்தில் !


என் கடவுள்
காக்கும் கடவுள்
என் மதத்தினரை
மட்டும்!
இது உண்டியல்
அல்ல
நான் தெரிந்தேசெய்த
தவறுகளை
அங்கீகரிக்க
நான் கடவுளுக்கு
அளிக்கும்
தூண்டில்!தெய்வம்
எனக்குச் சொந்தமா
தெரியாது
ஆனால்
எனக்குச் சொந்தமாக
குலதெய்வமே
இருக்கிறது!


கடவுளைத்தேடி
சென்ற
இடமெல்லாம்
நான்
இருந்தேன்
கடவுள் மட்டும் இல்லை!என் கடவுள்
மட்டுமே
உயர்ந்தவர்
என்று
தாழ்ந்தவர்கள்
சண்டையிட்டுக்கொள்கிறார்கள் !
மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை !என்னைக் காப்பாற்ற
வேண்டிய கடவுளுக்கு
திருடர்களிடம்
தன்னைக் காப்பாற்ற
இயலவில்லை !அந்நியர்கள்
யாரும்
உட்பிரவேசிக்கக்கூடாது
என கடவுளின்
சந்நிதானத்தில்
கடவுளுக்கு
அந்நியமானவர்கள்
எழுதிவைத்திருக்கிறார்கள் !தாயுள்ளம் கொண்ட
கடவுள்
தாயார்கள் தொட்டாலே
தீட்டாகிவிடும்
மாயம் என்ன ?தீண்டாமை நன்று
கடவுளின் பெயரால்
சக மனிதனின்
உணர்வுகளை
தீண்டாமை நன்று!
 
 
Thanks to 
 http://naveenprakash.blogspot.in

தாயுள்ளம் !
புலம்பும் தாய்

புலம்ப மறுக்கும் தந்தை..
 

புடவை பின்னால் ஒளிந்து கொண்ட மகன்...
 

மறந்து போனான்..
 

தான்  பெற்றதும் மகன் என்பதை...

*************

10 மாதம் கருவறையில் சுமந்த எனக்கு

என் மகன் வீட்டில் ஒரு சிறு அறை கூட கிடைக்கவில்லை!


**************

மார்பிலே தவழவிட்டு
மகனோடு கொஞ்சுகிறான்
என் மகன்!
இப்படித்தான் அவனை
ஈரமுடன் நான் வளர்த்தேன்!
எப்படித்தான் மறந்தானோ…
என்னை இன்று துரத்திவிட்டான்!
முதுமையில் தனிமையாய்
வறுமையின் கொடுமையோடு
தள்ளாடித் தவித்தபோதும்
விழிகள் பரபரக்கும்
தூரத்தில் நின்றேனும்
ஒருமுறை என் மகனைக் காண!
பிரார்த்தனை
வேறொன்றுமில்லை
கடைசிவரை கைவிடாமல்
பேரனாவது காக்க வேண்டும்
என் மகனை!
 
Thanks to tamilparents.com