மொத்தப் பக்கக்காட்சிகள்

10/21/2026

ராஜஸ்ரீ

🌹"காதலிக்க நேரமில்லை" படத்தி்ல் அனுபவம் புதுமை பாடல், "குடியிருந்த கோயில்" படத்தில் எம்ஜிஆருடன் வாள் நடனம், என பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ராஜஸ்ரீ.. பாமா விஜயம் படத்தில் ஒரு நடிகையாகவே தோன்றி நடித்திருப்பார்..

🌹பூம்புகாரில் நடனமங்கை மாதவியாக, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதிவு செய்தவர்.. இப்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து, பிரபலமானவர் ராஜஸ்ரீ.. எனினும் பெரும்பாலும் கவர்ச்சி் நடனம்தான் இவரது பிரதான சினிமா பங்களிப்பாக இருந்திருக்கிறது.

🌹இவருடைய உருவத்தை உருவகமாகக்கொண்டு, கவிஞர் வாலி ஒரு பாட்டு எழுதினார்.. அதுதான், "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே" என்ற பாடல்.. தலைமுதல் கால் வரை ராஜஸ்ரீயை வருணித்தே அனைத்து வரிகளும் அதில் இடம்பெற்றிருக்கும்..

🌹தெலுங்கு தாய்மொழி என்பதால், இவருக்கு தமிழ் எழுத படிக்க வராது.. கடந்த 1978 க்குப் பிறகு எங்கும் எந்த மொழியிலும் நடிக்கவில்லை. கடைசியாக நாளை நமதே படத்தில் நடித்திருந்தார்.. ஒரு அரசியல்வாதியுடன் 1978 ல் திருமணம் நடந்துள்ளது.. ஒரு ஆண் குழந்தை பிறந்து, 4 வயது ஆரம்பிக்கும் போதே, இவரது கணவர் மாரடைப்பால் காலமாகி விட்டார்.. முழுமையாக 5 ஆண்டுகள் கூட இவரது இல்லறம் நீடிக்கவில்லை..

🌹திருமணம் செய்யும்போது, "இனிமேல் எப்பவுமே நீ சினிமாவில் நடிக்கக்கூடாது" என்று இவரது கணவர் ராஜஸ்ரீயிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.. அதனால்தான், அவருக்கு கொடுத்த வாக்குறுதிபடி, இன்று வரை சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ கூட நடிக்காமல் உள்ளார் ராஜஸ்ரீ.

🌹சினிமாவில் நடித்துவந்த ராஜஸ்ரீ, திடீரென காணாமல் போய்விட்டார்.. சாய்பாபாவின் பக்தையோ, எங்கே ஓரிடத்தில் வெளி உலகத்துக்கே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார்.. ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை.. சென்னையிலா, ஆந்திராவிலா? அல்லது உயிருடனே கூட இல்லையா? என சினிமா உலகில் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது.. ஒருநாள், கர்நாடக சேனல்களில் ராஜஸ்ரீ பாட்டுக்களை தொடர்ந்து ஒலிபரப்பி வந்திருக்கிறார்கள்..

🌹இதனை பெங்களூரில் இருந்த சரோஜாதேவி கவனித்துள்ளார்.. எதுக்காக ராஜஸ்ரீ பாடல்களை திடீரென நாள் முழுக்க ஒலிபரப்புகிறார்கள்? என்று பதறிப்போனார்.. அவருக்கு என்ன நேர்ந்ததோ என்ற கலவரத்துடன், சென்னையிலுள்ள நல்லி குப்புசாமியை தொடர்பு கொண்டு, ராஜஸ்ரீ பற்றி விசாரித்து சொல்லும்படி கேட்டுள்ளார்.

🌹நல்லி குப்புசாமியும் ஆட்களை அனுப்பி, பல இடங்களில் விசாரித்து, கடைசியில், சினிமாவைவிட்டு ஒதுங்கி, தி.நகரில் ராஜஸ்ரீ வசிப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.. அதற்கு பிறகுதான், சரோஜாதேவிக்கு நிம்மதியானதாம்.

🌹மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று, தன்னுடைய மகனின் திருமணத்துக்கும் அழைப்பு தந்துவிட்டு வந்தார்.. தற்போது இவரது ஒரே மகன் அமெரிக்காவில் வசித்தாலும், சென்னை தி.நகர் வீட்டில், சினிமா வாடையே இல்லாமல் தனியாக வசித்து வருகிறார் ராஜஸ்ரீ...


அனிருத் ரவிச்சந்திரன் - காவ்யா மாறன் திருமணம் !

  இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் - காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ஆம் திகதி நடைபெற உள்ளது.

அனிருத் ரவிச்சந்திரன் - காவ்யா மாறன் திருமணம்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் SRH அணி உரிமையாளர் காவ்யா மாறனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக நீண்ட நாட்களாக தகவல் பரவி வந்த தற்போது திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காவ்யா மாறனை கரம் பிடிக்கும் அனிருத்; ஐரோப்பிய நாட்டில் திருமணம், சென்னையில் வரவேற்பு | Anirudh To Marry Kavya Maran At Greece Nov 11

சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி ஆகியோர் நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து திருமண வரவேற்பிற்கான அழைப்பிதழை வழங்கினர்.  


மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அப்போது மணமகன் அனிருத்தும் உடனிருந்தார். 

காவ்யா மாறனை கரம் பிடிக்கும் அனிருத்; ஐரோப்பிய நாட்டில் திருமணம், சென்னையில் வரவேற்பு | Anirudh To Marry Kavya Maran At Greece Nov 11

நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சி வரும் நவம்பர் 11ஆம் திகதி க்ரீஸ்(Greece) நாட்டில் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து, நவம்பர் 21 ஆம் திகதி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கு வகையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஓட்டலில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். 

காவ்யா மாறன், சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி தம்பதியின் ஒரே மகள் ஆவார்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்ளுப்பேத்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பேத்தி ஆவார்.

35 வயதான காவ்யா மாறன் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்களை பட்டமும், இங்கிலாந்து வார்விக் பிசினஸ் ஸ்கூலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

தொலைக்காட்சி, ரேடியோ, செய்தித்தாள், DTH மற்றும் சினிமா ஆகியவற்றை உள்ளடக்கிய, சன் குழுமத்தில் நிர்வாக இயக்குநராகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய அணிகளின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார்.

36 வயதான அனிருத் ரவிச்சந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரா மற்றும் நடன கலைஞர் இலட்சுமியின் மகன் ஆவார். நடிகர் ரவி ராகவேந்திரா ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் சகோதரர் ஆவார்.    

மதிய விருந்து ! ட்ரீட் கொடுக்க பணம் வேண்டும்

கல்லூரி மாணவி ஒருவர் தன் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, ‘‘எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’’ என்றார் மகள்.

‘வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?’ என்று வியந்த அப்பா, ‘‘என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன்’’ என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘எனக்கு இப்போதே பணம் வேண்டும்’’ என்று கேட்டார்.

‘‘அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செல வழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது. ஆகையால் குறைந்தது மூன்று நாட்களாவது பொறுத்துக் கொள்’’ என்று அப்பா சொன்னார்.

மகள் அதை ஏற்காமல் பதிலுக்குப் பேச, அப்பா அதற்கு விளக்கம் கொடுக்க, அது காரசாரமான விவாதமாகி விட்டது. கடைசியில் மகள், ‘‘நான் யாருக்கும் ட்ரீட் கொடுக்கலை. ஆனா நான் மட்டும் யாராவது ட்ரீட் கொடுத்தா வெட்கமே இல்லாம நல்லா தின்னுக் கிறேன். இப்ப உங்களுக்குத் திருப்தியா?’’ என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே போனார். அப்பாவின் குரல் பின்னால் கேட்க, அதை அலட்சியம் செய்துவிட்டு வெளியே போனார்.

நகரத்தில் இலக்கே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். அவசரத்தில் மொபைல் போனையும் எடுத்து வரவில்லை. அது மாலைப் பொழுது ஆனதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இங்கும் அங்கும் சுற்றியதில் பசித்தது. பைக்கை ஒரு டீக்கடை அருகே நிறுத்தினார். பெரிய சாலையின் ஓரம் பெரிய நடைபாதை. நடைபாதையை ஒட்டி டீக்கடை இருந்ததால் பலர் அந்நடை
பாதையில் நின்று கொண்டு பொறுமையாக டீ குடிக்க வசதியாய் இருந்தது. இவர் ஒரு டீயும் வடையும் வாங்கிக் கொண்டார்.

அப்போது அங்கே மூன்று ஆட்டோக்கள் வந்து நின்றன. ஒவ்வொரு ஆட்டோவிலும் ஆண்களும் பெண்களுமாய் பலர் நெருக்கயடித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தினர் என்று அவர்கள் பேசுவதை வைத்துத் தெரிந்து கொண்டாள்.

அதில் ஓர் இளைஞன் உற்சாகமாய் டீக்கடையில் வந்து தட்டு தட்டாக சமோசாக்களும், உளுந்து வடைகளும் வாங்கி வாங்கி ஆட்டோவில் இருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். சட்னியை அவர்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்து வந்து ஊற்றினான். சமோசாக்களுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் தேவைப்பட்டபோது எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட்டார்கள்.

எல்லோரும் சாப்பிட்டபிறகு அந்த இளைஞன் பணம் கொடுத்தான். 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 15 பேருக்கு 500 ரூபாய்க்குள் அவன் ட்ரீட் வைத்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தார்கள்.

‘பணம் செலவழிப்பதற்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே உற்சாகமாய் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ‘எவ்வளவு செலவழிக்கிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படி ஆழ்மனதில் இருந்து ரசித்து செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதையும் உணர்ந்தார். ‘நண்பர்களுக்கு பெரிய உணவகத்தில்தான் ட்ரீட் வைக்க வேண்டும் என்று போலித்தனமான கௌவுரவம் பார்த்து அப்பாவை வேறு மனக்கஷ்டப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினார்.

அவசரமாக வீட்டுக்குத் திரும்பியவர், பைக்கை நிறுத்திவிட்டு அப்பாவிடம் ஓடிச் சென்றார். மகளைப் பார்த்து பதறிய அப்பா, ‘‘எங்கம்மா போனே? கவலைப்படாதே! நீ கேட்ட பணம் ரெடி பண்ணிட்டேன். ஆனா இனிமே எப்பவுமே இப்படி கோபத்துல பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்பாதே. அப்பாவுக்கு ரொம்ப பயமா இருக்கு’’ என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது ஒரு குழந்தையாகத் தெரிந்தார்.

‘‘இல்லப்பா! ட்ரீட்டுக்கு இவ்வளவு பணம் வேணாம். நான் என் ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்குக் கூப்பிடப் போறேன். நானே சமைச்சி நம்ம வீட்டு மொட்டை மாடில நண்பர்களுக்கு விருந்து வைக்கப்போறேன்’’ என்ற மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அப்பா.

‘உலகம் இவளுக்கு ஏதோ நல்லதாய் கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டார். ‘‘சாப்பிடுங்கப்பா, ருசியா இருக்கு’’ என்று அப்பாவுக்காக வாங்கி வந்திருந்த சமோசாவை நீட்டினார் அந்த அன்பு மகள்.

படித்தத்தில் பிடித்தது