விளக்கம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால் ஊழ்வினையால் வரும் என்பதல்ல நீ மனத்தாலும் செயலாலும் செயத ம்ற்றும் செயற்படும் தன்மையால் நீயாகவே தேடிக்கொள்கிறாய் என்பது. எனவே நன்றாக எண்ணித் தெளிந்து செயற்படு என்பதாகும்.
யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், நாட்டில் உள்ள அனைவரும் எங்கள் உறவுகள் தான்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு பலாபலனாக திரும்பி வருகின்றது; நல்லது செய்தால் நமக்கு ம்ற்றும் நமது சந்ததிக்கு நன்மை கிடைக்கின்றது. தீமை இழைத்தால் தீமையே கிடைக்கின்றது
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன - துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் - செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் - வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு மாறி, - வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;
வானம் தண் துளி தலைஇ ஆனாது,- வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று - கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர் - அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் - முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில் - அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]
பெரியோரை வியத்தலும் இலமே! - பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! - சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை - துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக