மொத்தப் பக்கக்காட்சிகள்

11/09/2011

3 மாதத்துக்குள் டி.டி, செக்கை மாற்ற வேண்டும்- ஆர்.பி.ஐ அதிரடி அறிவிப்பு



டெல்லி: இனிமேல் வங்கி காசோலைகளை மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இனி சாவகாசமாக காசோலைகளை எடுத்துச்செல்ல முடியாது ஏனெனில் அது செல்லாக்காசாகி விடும்.

இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகளில் வங்கிக் காசோலையும் தப்பவில்லை. வங்கிகளில் நடைபெறும் பலவகையான மோசடிகளை தடுக்கும் வகையில் தற்போது பல அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளன.

முன்பெல்லாம் வங்கிக் காசோலைகள் 6 மாதத்திற்கு செல்லுபடியாகும். இப்போது அது மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே சாவகாசமாக மாற்றுவதை விடுத்து மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

டிடி, வங்கி காசோலை, பேஆர்டர் போன்ற வங்கி பண பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். நீண்டகால அவகாசத்தைப் பயன்படுத்தி சில வாடிக்கையாளர்கள் தவறான முறையில் ஆதாயம் அடைவதாக ரிசர்வ் வங்கிக்கு வந்த புகாரினை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கோடிட்ட காசோலைகள்

இது தவிர பிற மோசடிகளை தடுக்க 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான கேட்புக் காசோலைகளை கோடிட்ட காசோலைகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக