மொத்தப் பக்கக்காட்சிகள்

11/07/2011

கலோரி (Calorie


கலோரி (Calorie) என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுக்கு முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
தற்போது வெப்பம் அல்லது ஆற்றலுக்கு அனைத்துலக முறை அலகான ஜூல் என்பதே பரவலாகப் பயன்படுகிறது.
 உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப் படுகிறது.
சுமார் ஒரு கிராம் எடையுள்ள நீரை ஒரு பாகை செல்சியசு உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றலே ஒரு கலோரி அளவு ஆகும். ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும்.

கலோரி சேவிங்ஸ் அக்கவுண்ட்.

தினமும் வாக்கிங் போயிட்டு ஆபீஸ் போறவங்களுக்கும், ஓரளவுக்கு உடற்பயிற்சி செய்யறவங்களுக்கும் ஒரு நாளைக்கு 2500 கலோரி (இனிமே கிலோ கலோரிய கலோரி-ன்னே சொல்லுவோம். புரிஞ்சுக்கறதுக்கு ஈசியா இருக்கும்) தேவைப்படுதுன்னு வெச்சுக்குவோம்.
காலங்காத்தால ஒரு காபி, அப்புறம் ஒரு தோசை, இல்ல ஒரு பொங்கல், 10 மணிக்கு ஒரு காபி, மதியம் சாம்பார், ரசம், பொரியலோட ஒரு சாப்பாடு, சாயங்காலம் ஒரு காபி, நைட், வீட்ல அஞ்சு ஆறு சப்பாத்தி இல்ல பூரி இதெல்லாம் சாப்டா ஒரு 5000 கலோரி சேர்ந்துடுது.
frontசரி, இன்னிக்கு 2500 கலோரிதான் தேவை, மீதியெல்லாம் வெளில அனுப்பிடுவோம்-ன்னு வயிறோ, இல்லை, உடம்போ தேவையில்லாத கலோரிய எல்லாம் வெளில அனுப்பிடுச்சுன்னா எல்லோருமே ஆரோக்கியமா இருந்துடலாம்.
உடல் எடை கூடவே கூடாது. ஆனா நம்ம உடம்புக்கு அது தெரியறது இல்ல. ஒருவேளை பின்னாடி தேவைப்படலாம்-ன்னு நெனைச்சு எல்லா எக்ஸ்ட்ரா கலோரியையும் கொழுப்பா மாத்தி ‘பின்னாடி’யும் முன்னாடியும் சேர்த்து வெச்சுக்குது.
இப்டி சிறுக சிறுக சேக்கற கலோரிகள், சுமாரா, ஒரு 7500 கலோரி சேர்ந்துடுச்சுன்னா, உடம்புல ஒரு கிலோ எடை கூடிடும். (பவுண்டு கணக்குக்கு, சுமாரா 3500 கலோரிக்கு ஒரு பவுண்டு)
என்ன கதை விடறீங்க? சும்மா 7500 கலோரி சாப்டா எடை கூடிடும் அது இது-ன்னு. I don’t believe this!! அப்டீன்னு நெனைச்சேன். எப்டி சோதிக்கறது? மனைவிய கூட்டிகிட்டு நேரா சரவண பவன் போனேன். ஒரு ஆனியன் ராவா மசாலா தோசை, ஒரு சில்லி பரோட்டா, ஒரு சாதா பரோட்டா குருமா எல்லாம் ஆர்டர் பண்ணினேன். ரெண்டு பேருக்கு இல்ல. எனக்கு மட்டும். எப்டி எக்ஸ்ட்ரா கலோரி எடையா மாறுதுன்னு, ஒரு கை பார்த்துடுவோம்-ன்னு வயிறு முட்ட சாப்டேன்.
ஹி ஹி. எடை கூடிடுச்சு.
back7500 கலோரி அதிகமா சாப்டுட்டு உடனே போயி எடை மிஷின்ல ஏறி நின்னு பாக்காதீங்க. எக்ஸ்ட்ரா கலோரிய கொழுப்பா மாத்தி ‘பின்னாடி’ டெப்பாசிட் பண்றதுக்கு உடம்புக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகுது.
உடம்புக்கு தேவைப்படற கலோரிகள்ல 60ல இருந்து 70 சதவீதம், இதயம், நுரையீரல், வயிறு மாதிரி உடல் பாகங்கள் இயங்கறதுக்காக உபயோகப்படுது. மீதி இருக்குற 30 ல இருந்து 40 சதவீதம்தான் உடம்ப தூக்கிகிட்டு ஓடறதுக்கும், உடற்பயிற்சி செய்யறதுக்கும் உபயோகப்படுது.
நம்ம உடம்புல, முன்னாடியும், பின்னாடியும் கொழுப்பா சேரற கலோரிகள் எல்லாம் ஓடறதுக்கும், உடற்பயிற்சி செய்யறதுக்கும் உபயோகப்படுமே தவிர, இதயமும், நுரையீரலும் வயிறும் வேலை செய்ய உபயோகப்படாது. உடம்புக்கு தேவைப்படற 60-70% கலோரிகள் தினமும் அந்தந்த வேளைக்கு நாம சாப்டற சாப்பாட்ல இருந்துதான் கெடைக்குது.
சரி போன வாரம் எக்ஸ்ட்ராவா வந்த ஒரு 7500 கலோரிய டெப்பாசிட் பண்ணி வெச்சிருக்கோம்,
இந்த வாரம் மூணு நாளைக்கு பசிக்காம இருந்துடுவோம். போன வாரம் டெப்பாசிட் பண்ண கலோரியையெல்லாம் இந்த வாரம் வித்ட்ரா பண்ணிக்கலாம்-ன்னு உடம்பு விட்டுடறது இல்ல.
கரெக்டா வேளா வேளைக்கு வயிறு பசிச்சுகிட்டேதான் இருக்கு. வேளா வேளைக்கு ஃப்ரெஷ்ஷா கலோரிகள் தேவைப்படுது.
அடுத்து வருவது…
சேர்த்து வெச்ச கலோரியை எல்லாம் எப்டி செலவு பண்றது?
எக்ஸ்ட்ராவா நெறையா கலோரி டெப்பாஸிட் ஆகட்டுமே அதுனால என்ன?
வயிறு முட்ட சாப்டா, அத செறிக்க வயிறு ஓவர் டைம் வேலை பாக்கும்-ல? அதுக்கு கலோரி செலவாகும்-ல? செலவாகும்-ல?? செலவாகும்-ல???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக