மொத்தப் பக்கக்காட்சிகள்
11/11/2011
அடுத்த 40 வருடங்களில் உலக மாற்றங்கள்
சமகால ஆய்வு, பிரதான செய்தி
புதிய வருடம் தொடங்கி விட்டதால் ஆய்வு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன மேற்குலகில் வருடத் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் வெளியிடும் அறிக்கைகள் நல்ல வரவேற்புப் பெறுகின்றன. காத்திரமான ஆய்வுகளின் அடிப்படையில் எதிர்காலத் திட்டமிடல் நடத்தப்படுகிறது.
அல்வின் ரொவ்லர் (ALVIN TOFFLER) 1970 களில் எதிர்கால அதிர்ச்சிகள் (FUTURE SHOCKS)என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார் அந்த நூலில் அவர் பட்டியலிட்ட எதிர்வு கூறல்கள் அப்படியே நடந்துள்ளதாகப் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர் உலகச் செய்திகள் படுவேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவும் என்ற அவருடைய கூற்று அப்படியே நிறைவேறியதால் அவர் சொல்வதை நம்புவதற்கு உலகம் தயாரகி உள்ளது.
எதிர்கால அதிர்ச்சிகள் என்ற தனது நூலில் ஆண்களை ஆண்களும் பெண்களைப் பெண்களும் திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கும் சட்டங்கள் மேற்கு நாடுகளில் இயற்றப்படும் என்று கூறினார் வாடைகைத் தாய் மார்களை அமர்த்தி அவர்களுக்குத் தமது விந்தணுக்களைச் செயற்கை முறையில் செலுத்தி மகப் பேற்றையும் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
கட்டுக் கதை போல் இருந்த இந்த எதிர்வு கூறல்கள் இன்று நடை முறையில் காணக் கூடியதாக இருக்கிறது ரொவ்லர் கூட்டமைப்பு (TOFFLER ASSOCIATES) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு வருடத் தொடக்க எதிர்வு கூறல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அண்மையில் வெளிவந்த சில முக்கிய எதிர்காலம் பற்றிய அறிவிப்புக்களைப் பார்ப்போம். உலக விவகாரங்களில் பெண்களின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கும். ஆண்கள் தமக்கென்று ஒதுக்கிய துறைகளில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் நுளைவார்கள் இதனால் அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான மாற்றங்கள் ஏற்படும்.
உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரான இஸ்லாம் மதத்தினர் மேற்கு நாடுகளில் குடியேறுவார்கள் எவ்வளவு முயன்றாலும் இதைத் தடுக்க முடியாது அரசுகளின் கொள்கைகள், சட்டங்கள், சமூக நலன் திட்டங்களில் இதன் மூலம் மாற்றங்கள் ஏற்படும்
உணவு. தொழிற்சாலை ஆக்கங்கள், எரிபொருள் போன்ற வற்றை கடல் பாதை மூலம் நகர்த்தும் கடற்கலங்கள் மிகப் பெரியதாகவும் வேகமாகச் செல்லக் கூடியதாகவும் மாற்றியமைக்கப் படும் இது துறைமுகங்களைப் பெரிதாக்க வேண்டிய தேவையை உருவாக்கும்.
மேலும் இந்தப் பாரிய கடற் கலங்களின் நகர்வுக்கும் பொருத்தமாகச் சுயெஸ் கால்வாய் பனாமா கால் வாய் ஆகியன பெருப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மலாக்கா நீரிணைக்கு மாற்றீடாகத் தாய்லாந்திற்கும் மலேசியாவுக்கும் இடையிலுள்ள ஒடுங்கலான தரைப் பரப்பில் புதிய கால்வாய் தோண்ட வேண்டி வரும்.
கிரா (KRA) என்ற பகுதியில் புதிய கால்வாய் தோண்டுவதற்கான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறினால் மலாக்கா நீரிணை மூலம் முக்கியத்துவம் பெறும் சிங்கப்பூர் துறைமுகம் வீழ்ச்சி அடையும்
உலக ஒழுங்கிற்குக் (WORLD ORDER) கட்டுப்படாத நாடுகளின் எண்ணிக்கை அதிகளவில் குறையும் ஈரான் வட கோரியா போன்ற நாடுகள் உலக ஒழுங்கிற்கு கட்டுப்படக் காலம் எடுக்கும்
உலகின் பொருளாதார வல்லரசாகச் சீனா வளர்ச்சி அடையும் சீனாவின் யுவான் நாணயம் அமெரிக்காவின் டாலரை வீழ்த்தி விடும்.
சீனாவின் பொருளாதார ஆதிக்கம் காரணமாக வல்லரசாக வரத்துடிக்கும் இந்தியா, பிறேசில் வெனசுவெலா போன்ற நாடுகள் சீனாவுடன் கூட்டுச் சேர வேண்டி வரும்.
உலகின் அதி முற்போக்கான தொழில் நுட்பத் தேவைகளுக்கு வேண்டிய கனிம வளங்களில் கிட்டத்தட்ட 90 விகிதமானவை சீனாவில் காணப்படுகின்றன. மிகுதி அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவற்றில் உள்ளன இதனால் சீனாவின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும்.
எண்ணை, எரிவாயு போன்ற வற்றால் செல்வந்த நாடுகளாகிய சவுதி அரேபியா, ருஷ்யா, வளை குடா நாடுகள், வெனசுவெலா, ஈரான், ஈராக் போன்றவை மாற்று எரிபொருள் மற்றும் சூரிய சக்திப் பயன்பாடு, கடல் அலை மூலம் மின்சாரத் தயாரிப்பு. காற்றாடி மின்சாரம் என்பனவின் பரவலான பயன்பாட்டில் நிதி வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
பூமி வெப்பமடைதல் தொடர்வதால் கடல் மட்டம் உயரும் சிறிய தீவுகள் கடலில் மூழ்கும் கரையோரங்கள் காணமற் போகும் வடதுருவப் பனிப்பாறைகளின் மறைவால் அப்பகுதியில் பெரும் நிலப்பரப்பபு கடல் மட்டத்திற்கு மேல் உயர்ந்து நிற்கும் அதற்கு உரிமை கோரும் நோர்வேயும் ருஷ்யாவும் செல்வாக்குப் பெறுவது நிட்சயம்.
கணினிப் பாவனை கூடுதலாகும் பெத்தாபைற் வேகத்தில் இயங்கும் சுப்பர் கணினிகள் மலிவான விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் கணினிகளில் சேமிக்கப் படும் தகவல்களின் அளவும் எண்ணிக்கையும் எல்லை கடந்து செறிந்துள்ளதால் அவற்றை முழ அளவில் பயன்படுத்த உலக மக்களால் முடியாது.
மல்துஸ் (MALTHUS)என்ற சமூகவியலாளர் மக்கள் தொகை உயரும் போது உணவு மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்வு கூறினார். அவருடைய கூற்றைப் பொய்ப்பிக்கும் விதத்தில் உணவுத் தயாரிப்பும் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திடடமும் விரிவாக்கப்படும்.
ஐரோப்பாவின் சிறிய தரைப்பரப்பு நாடுகளான சுவிற்சர்லாந்து, சுவிடன், பெல்ஐpயம், நெதர்லாந்து, அவுஸ்திரியா போன்றவை பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் தமது பொருளாதார உபாயங்களை மாற்றியமைக்க இவை பெரிய நாடுகளின் உதவியை நாடலாம்.
உணவு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சுப்பர்- பவர்களாக (SUPER_POWERS) அமெரிக்காவும் கனடாவும் முன்னிலையில் இருக்கப் போவது நிட்சயம் கடல் மட்டம் உயர்வதால் கோடிக் கணக்கான மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர நேரிடும் இது உலகம் எதிர்நோககும் மிகப் பெரிய வருங்காலப் பிரச்சனையாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக