தப்பு செய்து விட்டீர்களா?
மனப்பூர்வமாக மன்னிப்புக் கேளுங்கள்.
"உர்" என்ற முகத்துடன் கேட்கப்படுகின்ற மன்னிப்பு,
எதிராளிக்கு நீங்கள் செய்கின்ற
... இரண்டாவது பெரிய அவமானம்.
அதைவிட
மன்னிப்புக் கேட்காமலேயே இருக்கலாம்
குரலை உயர்த்துவது மட்டுமே,
நல்ல விவாதம் ஆகிவிடாது
கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கிவிடுவத்தின் மூலம்,
அவனை ஜெயித்து விட்டதாக நினைப்பது
முட்டாள்த்தனம்.
முகத்துக்குக்கூட சாமர்த்தியம் வேண்டும்.
என் முகத்துக்கு,
அத்தனை சாமர்த்தியம் போதாது என்றே நினைக்கிறேன்
பல சமயங்களில்,
உள்ளத்தை அப்படியே வெளிப்படுத்தி விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக