மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

எண்ணிப் பாருங்கள்


•கடுமையான ஒரு வார்த்தை பேசுமுன், பேசவே முடியாதவர்கள் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.

•சாப்பாடு சுவையாக இல்லை என்று புகார் சொல்லுமுன், சாப்பிட எதுவுமே இல்லாதவர்களை எண்ணிப் பாருங்கள்.

•வீடு குப்பையும் கூளமுமாக இருப்பதைப் பற்றி மனைவியிடம் சண்டை போடுமுன், நடை பாதையில் வாழ்கிறவர்களை எண்ணிப் பாருங்கள்.

•அலுவலக வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுமுன், வேலையே இல்லாமல் கஷ்டப்படுவோரை எண்ணிப் பாருங்கள்.

•பைக்கில் ரொம்ப தூரம் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சல் ஏற்படும் சமயம், அதே தூரத்தை நடந்தே செல்கிறவர்களை எண்ணிப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக