மனித நேயமும், மிருக குணமும் கலந்து படைக்கப்பட்டதுதான் மனிதன். இதில் மிருக குணத்தை அடக்கி மனித நேயத்தை மேலோங்கச் செய்வதே மனிதன் 'மனிதன்' ஆக வாழ்வதற்கான வழி முறையாகும். ஆனாலும் மிருக குணம் சில வேளைகளில் மேலோங்கி இருப்பதுவும் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுமே மனிதன் குற்றங்கள் புரிவதற்கும், கொலைகள் செய்வதற்கும் காரணமாக அமைகின்றது. இதே போல் மிருக குணம் அடக்கப்பட்டு மனித நேயம் மேலோங்கி நிற்கும் போது குற்றங்கள், கொலைகளை தவிர்த்து அவற்றை தடுத்து நிறுத்தும் மகாத்மாவாக மாறுகின்றான். மனித குல மீட்சிக்காக தன்னை அற்பணிக்கும் மக்கள் தொண்டனாக மாறுகின்றான் மனிதன். இதன் தொடர்சியாக அவன் மக்கள் தலைவனாக மாறுகின்றான்.தவறு விடும் மனிதனை திருத்தி மீண்டும் மனிதனாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட வேண்டியனவே சட்டங்களும், அதனை ஒட்டிய சம்பிரதாயங்களும், ஒழுங்கு முறைகளும் ஆகும். மாறாக மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பு அழிகப்பட்டாத சட்டங்களும், சம்பிரதாயங்களும், ஒழுங்கு முறைகளும் மனிதனை வெறும் நரபலியிடுவதைப்போல்தான் ஆகிவிடும். குற்றவாளிகள் விசாரிக்கப்படும் போது வெறுமனவே என்ன குற்றத்ததை செய்தார் என்று மட்டும் பார்க்காமல் குற்றம் சாட்டப்பட்டவரின் சமூகப் பின்னணி, பொருளாதார பின்னணி, வயது எல்லைகள், உடல், மன நிலைகள், என்ன சூழ்நிலையில் அந்த குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பன நிச்சயமாக கருத்தில் கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ் அணுகு முறையே குற்றத்திற்கான சரியான தண்டனை வடிவத்தை தீர்மானிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதன் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருபாடமாக அமையணும். தண்டனை பெறுபவர் தனது தவற்றை உணர்ந்து திருந்தி மீண்டும் சமூகத்தின் நற் பிரஜையாக மாறுவதற்கும் வழி சமைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக