உங்கள் இல்லங்களில் தீப ஒளி மலரட்டும்
உங்கள் உள்ளங்களில் புன்னகை ஒலி பரவட்டும்
உங்கள் உறவுகளில் துன்ப இருள் ஒழியட்டும்
உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...
இருள் என்னும் மாயை
ஒளி என்னும் தீயை கண்டால் ஓடும்
தீப திருநாள் என்றால்
இல்லங்களில் மகிழ்ச்சி கூடும் - இந்த
மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க
தீப திருநாள் நல்வாழ்த்துகள்...
வேற்றுமையில் ஒற்றுமை
வடக்கே இராம_இலக்குவனின் வரவு
தெற்கே நரகாசுரனின் பிறிவு - தீபாவளி.
தீபாவளிக்கு வடக்கே தெற்கே என காரணம் வேறு வேறு
இரண்டும் போதிக்கும் உண்மைகள் நூறு நூறு --தீபாவளி அன்று
அகல் விளக்கை மற்றும் ஏற்றாமல் - நாம்
அக விளக்கையும் ஏற்றுவோம்
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...
என்றும் அன்புடன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக