மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

குழந்தை தொழிலாளர்-சிறுகதை




ஐயா, உங்களைப் பார்க்க ஒரு அம்மாவும் அவங்களோட சின்ன பையனும் வந்திருக்காங்க"--அலுவலக உதவியாளர் கூற...


"உள்ளே வரச் சொல்!" என்றார் தொழிலாளர் ஆய்வாளர் சந்திரஹரி.
...
"ஐயா இது உங்களுக்கே நியாயமாயிருக்கா? குடிச்சே காசையெல்லாம் அழிக்கும் தகப்பனுக்குப் பிள்ளையாய் பிறந்ததைத் தவிர இந்தப் பையன் செய்த பாவம்தான் என்ன? இவன் சேட்டு கடையில் வேலை பார்த்து கொண்டு வந்த ஐநூறு ரூபாய்லதான் கஞ்சியோ கூழோ கால் வயிறு கழுவிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் வேட்டு வச்சிட்டீங்களேய்யா! குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சிக்கக்கூடாதுன்னு நீங்க போட்ட உத்தரவுனால சேட்டு இவனை நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்க நல்லா இருக்கணும்!" என்று புலம்பியும் வாழ்த்தியும் நின்றவளை "என்கூட வாங்க" என்று தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சந்திரஹரி.

கதவைத் திறந்த அந்த வயதான பெண்மணியைப் பார்த்த மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தாள் அந்த சிறுவனின் தாய்.

சந்திரஹரி தொடர்ந்தார்.

"என்னோட அப்பாவும் ஒரு குடிகாரர், சீட்டாட்டக்காரர், ரேஸ் பத்தியம். அவரோட மரணத்துக்குப் பிறகு என்னோட அம்மா ஒரு விபத்தில் தன்னோட வலது காலை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்காம ஊன்றுகோலின் துணையுடன் ரெண்டு வீட்ல சமையல் செய்து போட்டு என்னைப் படிக்க வச்சு இந்த வேலையில் அமர்த்துவதற்குள் எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டாங்க. இப்படி நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சாவது உங்க மகனைப் படிக்க வைக்கக் கூடாதா?"

" எப்பாடு பட்டாவது இவனைப் படிக்க வச்சு காட்டறேன் சார்!". சொன்ன அந்த தாயைப் பெருமிதத்துடன் பார்த்தார் சந்திரஹரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக