மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்



ரோமாபுரி நாட்டின் சட்டங்களின் அடிப்படையில்தான் இன்றைய சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்கள் ஆதிக்கத்தை, சொத்துகளைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை.

மதவாதிகள்தான் தூக்குத் தண்டனை போன்ற கொடூரத் தண்டனைகளைத் தொடங்கிவைத்தவர்கள். தனி மனிதன் கோபத்தால் செய்யும் கொலைகளுக்கு விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், போர் மூலம் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு எந்த விசாரணையும் இல்லை.

இலங்கை போன்ற சில அரசுகள் சொந்த நாட்டு மக்களையே போர் என்ற பெயரில் கொன்று குவிக்கின்றன. காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு குறித்தும் விசாரிக்கப்படுவதில்லை.

ஆனால், தனி மனிதன் கோபப்பட்டு செய்யும் கொலையை நீதிபதி விசாரித்து தீர்ப்புக் கூறுகிறார். இது நீதி வழங்குவதில் உள்ள இரட்டை மனப்பான்மையைக் காண்பிக்கிறது.

ஒருவன் நிதானமிழந்து கொலை செய்கிறான். அரசு நிதானத்தோடு விசாரித்து தூக்குத் தண்டனை விதிக்கிறது.

தனி மனிதன் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயலை, அரசு செய்யக் கூடாது என்ற கருத்தில் நியாயம் உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் தூக்குத் தண்டனை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். இது மிகவும் அவசியமானதாகும்.

நாடாளுமன்ற அரசியல் நிர்ணய சபையைக் கூட்டி, 60 ஆண்டு கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏன் திருத்தக் கூடாது என்று யோசிக்க வேண்டும் என்றார்

தா. பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக