மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

கார் டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது சரியா?

Nitrogen Filled Tyre
சென்னை: கார் டயர்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்புவது சரியா என்பது குறித்து பலருக்கும் பெருத்த சந்தேகமும், தயக்கமும் இருக்கிறது.

ஆனால், நைட்ரஜன் வாயுவை நிரப்பினால், டயர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, நமது பாதுகாப்பையும் அது உறுதி செய்வதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கையாகவே நைட்ரஜன் (N2) தீப்பிடிக்காத தன்மையும், எளிதில் விரிவடையாத தன்மையையும் கொண்டது.

எனவே, நைட்ரஜன் வாயு நிரப்பும்போது, டயர்கள் சூடாவதை தவிர்ப்பதோடு மட்டுமின்றி, எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் டயர்களை விரிவடைய செய்யாது.

இதனால், டயர்கள் வெடிப்பதை 90 சதவீதம் தவிர்க்க முடியும் என்று அடித்து கூறுகின்றனர் ஆட்டோ எஞ்சினியர்கள். நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும்போதும், அதிக வேகத்தில் செல்லும்போதும் நைட்ரஜன் நிரப்பப்பட்ட டயர்களில் சூடாகாது.

மேலும், டயர்களில் வெப்பம் அதிகரிக்காமல் சீரான குளிர்ச்சியை தக்கவைக்கும் குணமும் நைட்ரஜனுக்கு உண்டு.

இதனால், விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்பதோடு, டயர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்கின்றனர்.

நைட்ரஜன் வாயு டயர்களில் நிரப்புவதற்கு செலவு கூடுதல் என்றாலும், அது நம் பாதுகாப்பை உறுதி செய்வதையும் கருத்தில்கொள்ளவேண்டும் என்பதே நமது விருப்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக