விறகு வைத்து சமையல் செய்த காலம் மாறி போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas ) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம் .
LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் . சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு . கீழ் உள்ள படத்தை பாருங்கள் .

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும் . இதில் 4 ஆங்கில எழுத்துகள் ( A , B , C , D ) என்று வரும் . இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை ) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) , நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .
மேற்கண்ட படத்தின் படி , இந்த சிலிண்டர் டிசம்பர் 2013வரை பயன் படுத்த முடியும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது . ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது . அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது . ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .
பொதுவாக LPG , சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் ) திறந்து வைப்பது நல்லது .
சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் . படுக்க ( Horizontally ) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும் . அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது

மிகவும் சரியாக தெரிவிக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்துகிறேன் நன்றி சோ.உலகநாதன்
பதிலளிநீக்கு