மொத்தப் பக்கக்காட்சிகள்

11/16/2011

நான் ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீசர்!”

ஒரு குழந்தை ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டது.


உடனே டாக்டரிடம் போக எண்ணி, தாய் அந்தக் குழந்தையைத் தூக்கிக்
கொண்டு வெளியே ஓடிவருகிறாள்…எதிரே ஒருவர்: “”எங்கேம்மா ஓடறே?”


“”என் பிள்ளை காசை விழுங்கிவிட்டான்….


அதுதான் ஆஸ்பத்திரிக்கு…!”


“”குழந்தையை இப்படிக் கொடு!”


கையில்வாங்கி… அதை தலை கீழாகப் பிடித்துக் கொண்டு…
ஒரு கை விரலால்… அதன் வயிற்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரியாகத் தட்ட… காசு வாய் வழியாக வெளியே வந்து விழுகிறது!


தாய்க்கு வியப்பு… மகிழ்ச்சி…


குழந்தையை வாங்கிக் கொண்டு சொல்கிறாள்:


“”ஐயா… ரொம்ப நன்றி…! நீங்க நிச்சயமா ஒரு டாக்டராத்தான்
இருக்கணும்!”


“”இல்லீங்க… நான் ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீசர்!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக