மொத்தப் பக்கக்காட்சிகள்

11/19/2011

தீ பற்றி கொண்டால் ... என்ன செய்ய வேண்டும் ..?

நெருப்பு /  தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் .  வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது .  அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..



நெருப்பு என்றால் என்ன .?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது .   நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது . 
  1. வெப்பம்
  2. ஆக்சிஜென்
  3. எரிபொருள்
  4. தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன .  அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்பு 4  வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
  1. Class A நெருப்பு
  2. Class B நெருப்பு
  3. Class C நெருப்பு
  4. Class D நெருப்பு


 Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர்  ,  மரம் , துணி  போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .  இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் .   தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது .  எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .   இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers )  பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு : 

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .   இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் .  ஆனால் அது தவறான நடவடிக்கை 


 இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும்  , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் ,  நெருப்பு அதிகமாகும் .   எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க  CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும் 


Class C தீ / நெருப்பு : 

 மின்சார தீ இந்த வகையில் வருகிறது .  இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் .  அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு :  


தொழிற்சாலைகளில் உள்ள சோடியம்  , பொட்டாசியம் ,  டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது .   சோடியம் க்ளோரைட்  எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக