மொத்தப் பக்கக்காட்சிகள்

11/19/2011

ரூ. 2,999ல் டேப்ளெட் பிசி : அசத்தும் ரிலையன்ஸ்

ரூ. 2,999ல் டேப்ளெட் பிசி : அசத்தும் ரிலையன்ஸ்

விரைவில் பரவலாக்கப்பட இருக்கும் 4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்தையும் இணைத்து, டேப்ளட் பிசி ஒன்றை வடிவமைத்து, பட்ஜெட் விலையில் வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான், உலகிலேயே மிக மலிவான விலையில் ஆகாஷ் என்னும் டேப்ளட் பிசியினை அண்மையில் வெளியிட்டது. மேல் நாடுகளில், பல நிறுவனங்கள் 4ஜி தொழில் நுட்பத்துடன் டேப்ளட் பிசியினை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலான விலையில் இதனைத் தர ரிலையன்ஸ் முன்வந்துள்ளது சிறப்பான முயற்சி ஆகும். ஏனென்றால், இந்த விலை மேல்நாட்டு விலையில் நான்கில் ஒரு பங்காகும். வரும் டிசம்பர் மாதம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்துடன் இயங்கும் டேப்ளட் பிசி ஒன்றை டேட்டாவிண்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் விலை ரூ. 2,999 என்ற அளவில் இருக்கும். முன்பு மொபைல் போன் பயன்பாடு அறிமுகமான போது மிகவும் மலிவான விலையில் நாடு முழுவதும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன் மற்றும் சேவையினை வழங்கி ரிலையன்ஸ் முன்னணி இடத்தைப் பிடித்தது. இதே வழியில், டேப்ளட் பிசி விற்பனையிலும் தன் தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக