ஒரு நாள் அப்பா ஒரு பொய்காட்டி மிஷின் (Lie Detector) வாங்கி வந்தார்.அப்போது மகன் முத்து தாமதமாக வீட்டுக்கு வந்தான்.
அப்பா கேட்டார்: "முத்து எங்கே போயிட்டு இவ்வளவு நேரம் கழிச்சு வர்றே?
முத்து: " நண்பன் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்"
உடனே பொய்காட்டி மிஷின் "பொய், பொய்" என்று கத்தியது.
உடனே அப்பா: "பார்த்தியா, உன் பொய்யை இந்த மிஷின் கண்டுபிடிச்சுடிச்சு, யார் பொய் சொன்னாலும் கண்டுபிடிச்சுடும், உண்மையை சொல்லு, எங்கே போயிட்டு வர்றே?"
முத்து: " நண்பருடன் சினிமாவுக்கு சென்று வந்தேன்."
அப்பா, கோபமாக : "நான் உன் வயசுல சினிமாவுக்கு சென்றதில்லை"
உடனே பொய்காட்டி மிஷின் "பொய், பொய்" என்று உரக்க கத்தியது.
அப்பாவுக்கு அவமானமாகப் போய்விட்டது.
அம்மா: " உங்களோட மகன் உங்க மாதிரி தானே இருப்பான்" என்றாள்.
உடனே பொய்காட்டி மிஷின் "பொய், பொய்" என்று உரக்க கூவ ஆரம்பித்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக