மொத்தப் பக்கக்காட்சிகள்

12/01/2011

நீரின்றி அமையாது உலகு




நேற்றிருந்த ஆற்றின்
மணல் வெளிகள்
இன்றில்லை
ஆறேயில்லை.............
ஆறிருந்த இடம் குளமாகி
குளம் குட்டையாகி
குட்டை கிணறாகி
கிணறு மழைநீர் தொட்டியாகி....
அதுவும் எலி வளரும் பட்டியானது
சாலை மரமிழந்தோம்
வயலிழந்தோம்
காடிழந்தோம்
மலையிழந்தோம்
ஈரக்காற்றினை இழந்தோம்
நம்மையும் இழந்தோம்
நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக