மொத்தப் பக்கக்காட்சிகள்

11/30/2011

'இன்னைக்கு நம்ம வீட்டுல மீன் குழம்பு



புருஷன் டாக்டர்கிட்ட போய், 'டாக்டர், என் பொண்டாட்டி எது சொன்னாலும் சரியாவே காதுல வாங்க மாட்டேன்கிறா, அவளுக்கு காது கேக்குதா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?' என்று கேட்டான்.

டாக்டர், 'நான் சொல்றபடி செஞ்சி பாருங்க, தூரமா நின்னுட்டு உங்க பொண்டாட்டிகிட்ட ஏதாச்சும் கேட்டு பாருங்க. அவங்க பதில் சொல்லலைன்னா இன்னும் கொஞ்சம் கிட்ட போய் கேளுங்க.

அப்பவும் பதில் சொல்லலைன்னா இன்னும் கிட்ட போய் கேளுங்க.

அப்படியே செஞ்சிட்டு இருந்தீங்கன்னா அவங்களுக்கு எவ்ளோ தூரம் காது கேக்கலைன்னு நீங்க தெரிஞ்சிக்கலாம்' என்றார்.

புருஷனும் வீட்டுக்கு வந்து அதே மாதிரி முயற்சித்து பார்த்தான்.
வாசப்படியிலியே நின்னுகிட்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.

பதில் ஏதும் வராததால் உள்ளே நுழைந்து ஹாலில் நின்று கொண்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.

அப்பவும் பதில் ஏதும் வராததால் படுக்கை ரை வாசலில் நின்று கேட்டான். அப்பவும் பதில் வராததால் கிச்சன் வாசலில் நின்று கொண்டு கேட்டான்.

அப்பவும் பதில் இல்லாததால் கிச்சனுக்குள் நுழைந்து பொண்டாட்டி காதுக்கு அருகில் சென்று, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்'என்று கேட்டான்.

அதுக்கு அவள் அவன் காதுக்கு அருகே வந்து, 'இன்னைக்கு நம்ம வீட்டுல மீன் குழம்புன்னு பத்து தடவை சொல்லிட்டேன்.. உங்க காதுல விழலையே.. டாக்டர்கிட்ட உங்க காதை காமிங்கன்னு எத்தனை தடவை சொல்றது..' என்று சொன்னாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக