மொத்தப் பக்கக்காட்சிகள்

1/28/2012

தத்துவம்…!1.நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்ஆனால் BLOOD  TEST ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே THANK YOU  தேங்க் யூ சொல்ல முடியாது

2. . டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

3, என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

5.என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

6.நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7.காசு இருந்தா கால் டாக்சி!!  காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

8.பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

9.இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியை முடியாது.

10.பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

11.இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

12.பஸ்சுல கலெக்டரே ஏறினாலும்  முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

13.சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

14.ஆயிரம் தான் இருந்தாலும் 1001 ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக