நடிகர் லாரன்ஸ் நடிகர் ராகவ லாரன்ஸ் தீவிர ராகவேந்திரர் பக்தர். அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயலில் ராகவேந்திரருக்கு கோவிலும் கட்டியுள்ளார். கடவுள் நம்பிக்கை பற்றி லாரன்ஸ் அளித்த பேட்டி வருமாறு:-
கடவுள் இமயமலையில் இல்லை. கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வதில் இருக்கிறார். நான் ஆறு வயதில் இறைவனை உணர்ந்தேன். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடவுள் அருளாலும், என் அம்மாவின் பிரார்த்தனையாலும் பிழைத்தேன்.
நான் ராகவேந்திரரின் பக்தன். அவருக்கு கோவில் கட்ட முயன்றபோது ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார். அவர் தந்த ராகவேந்திரரின் மாதிரி போட்டோவை வைத்துதான் சிலையை உருவாக்கினேன்.
குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் மேல் அதிக பிரியம் காட்டுவார்கள். அதுபோல்தான் நான் கடவுளை பார்க்கிறேன். மனிதன்தான் முதல் கடவுள். குடும்பத்தை தவிக்கவிட்டு சன்னியாசம் போவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் மதிய உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
இப்போது நிறைய பேருக்கு மதிய உணவு போடுகிறேன். கடவுள்தான் இதற்கெல்லாம் காரணம். வாழ்க்கையை நல்வழிபடுத்த தியானம், யோகா அவசியம். நான் தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக