மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது.
அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர். இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள் தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.
இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள்.
ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும்,மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.
ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.
மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும்.
ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.

Good
பதிலளிநீக்கு