நமது புவியை ஒளிரச் செய்துக்கொண்டிருக்கும் சூரியனில் மேற்பரப்பில் இருந்து வெளியான சூரியப் புயல் கடும் வேகத்தில் பயணித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புவியின் வெளிப்பரப்பைத் தாக்கியுள்ளது
.சூரியனில் இருந்து இப்படிப்பட்ட புயல்
(Solar Storm) புதியது அல்ல
. ஆனால் அது புவியின் வெளிப்பரப்பைத் தாக்கியது அரிதான செய்தியாகும்
.
சூரியனின் மேல் பரப்பில் இருந்து வெளியாகும் இந்த புயல் கதிர் வீச்சுடனும்
, காந்த சக்தியுடனுமான வாயுப் பிழம்பாகும்
. சூரியனில் இருந்து காந்த சக்தியாக வெளிப்படும் இது பிறகு ஒளிரும் வாயுவாக மாறுகிறது என்று கூறுகின்றனர்
. கடந்த
24 ஆம் தேதி சூரியனின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட சூரியப் புயல் மணிக்கு
50 இலட்சம் மைல் வேகத்தில் பயணித்து இரண்டே நாட்களில் புவியின் வெளிப்பரப்பை தொட்டுள்ளது
. புவியை தொடும்போது அது மிகவும் வலிமை குறைந்த மத்திய தரமான சூரியப் புயலாக
(Medium - size solar storm) ஆனது என்று இதனை ஆய்வு செய்து
, தகவலை வெளியிட்ட யு
.எஸ்
. தேச கடல் மற்றும் வாயு மண்டல நிர்வாகத்தின்
(National Oceanic and Atmospheric Administration - NOAA) விண் வானிலை கணிப்பு மையம்
(space Weather Prediction Centre - SWPC) தெரிவித்துள்ளது
. அதன் கணக்குப்படி
, இந்த சூரியப் புயல் தாக்கம்
5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாம்
.
நாம் வாழும் புவியின் வெளிப்பரப்பை சூரியப் புயல் தாக்கியது நாம் சற்றும் உணரவில்லை என்றாலும்
, அது வந்த வழியில் இருந்த செயற்கைக் கோள்களுக்கும்
, இருப்பிடம் அறிய பயன்படுத்தும் கருவிகளுக்கும்
(Global Positioning System - GPS) பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது
.ஆனால் இதே சூரியப் புயல் இன்னும் வலிமையானதாக இருந்திருந்தால் அது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கைபேசிகளில் இருந்து மின்சார கட்டமைப்புகள் வரை பாதித்திருக்கும் என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள்
. இதில் விமான சேவை
, செயற்கைக்கோள்கள் ஆகியன பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் என்றும் கூறுகின்றனர்
. பொதுவாக சூரியனில் ஏற்படும் இப்படிப்பட்ட புயல்கள் புவிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு உருவானதில்லை என்று நாசா கூறுகிறது
. சூரியனில் ஏற்படும் புயலை கண்காணிக்க இரண்டு செயற்கைக் கோள்கை எதிரும் புதிருமாக நிறுத்தி ஆய்வு செய்து வருகிறது
. பல படங்களையும் எடுத்துள்ளது
.ஆம் ஆண்டில்தான் பலமான சூரியப் புயல் புவியைத் தாக்கியது என்று கூறுகின்றனர்
. அப்போது அதனை டேவிட் காரிங்க்டன் என்பவர் பதிவு செய்தார்
. சில நேரங்களில் சூரியனில் இருந்து வரும் இந்தப் புயலால் புவியின் வளி மண்டலம் ஒளிருவதையும் பதிவு செய்துள்ளார்கள்
. பச்சை நிறத்தில் அந்த வாயுப் படலம் ஒளிரும் காட்சியின் விடியோ பதிவுகளை இங்கிலாந்தின் டெலிகிராஃப் தொலைக்காட்சி தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது
.அறிவிலாளர்களில் சிலர்
- இதுபற்றி ஆழமாக ஆராய்ந்து வருபவர்கள்
, சூரியனின் மேல் பரப்பில் இருந்து உருவாகும் இப்படிப்பட்ட புயலிற்கு காரணமாக கொதிப்புகள் அதிகரித்து வருவதாகவும்
, அது எதிர்காலத்தில் பூமிக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்
. இவர்களை ஹீலியோ அணுவியலாளர்கள்
(Helio-Physicist) என்று கூறுகின்றனர்
.சூரியப் புயல்களால் உலகிற்கு பயனும் உள்ளது
. அதுதான் ஹீலியம் எனும் வாயுப் பொருள்
. சூரியப் புயலை புவியின் வளி மண்டலம் அப்படியே தடுத்து அமுக்கி விடுகிறது
. ஆனால் அப்படிப்பட்ட வளி மண்டல தடுப்பு சந்திரனுக்கு இல்லாததால்
, அவைகள் சந்திரனில் மோதி அதன் தரைக்குள் ஊடுறுவுகின்றன
. அதுவே அங்கு ஏராளமான அளவிற்கு ஹீலியம் இருப்பதற்குக் காரணம் என்கிறார்கள்
. ஒரு கிலோ ஹீலியத்தை பயன்படுத்தி ஒரு மில்லியன் டன் யுரேனியத்தை பயன்படுத்திப் பெறும் மின்சாரத்தை அணு உலைகளின் மூலம் உருவாக்கலாம் என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்
.
1859