மொத்தப் பக்கக்காட்சிகள்

11/19/2011

ரூ. 2,999ல் டேப்ளெட் பிசி : அசத்தும் ரிலையன்ஸ்

ரூ. 2,999ல் டேப்ளெட் பிசி : அசத்தும் ரிலையன்ஸ்

விரைவில் பரவலாக்கப்பட இருக்கும் 4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்தையும் இணைத்து, டேப்ளட் பிசி ஒன்றை வடிவமைத்து, பட்ஜெட் விலையில் வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான், உலகிலேயே மிக மலிவான விலையில் ஆகாஷ் என்னும் டேப்ளட் பிசியினை அண்மையில் வெளியிட்டது. மேல் நாடுகளில், பல நிறுவனங்கள் 4ஜி தொழில் நுட்பத்துடன் டேப்ளட் பிசியினை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலான விலையில் இதனைத் தர ரிலையன்ஸ் முன்வந்துள்ளது சிறப்பான முயற்சி ஆகும். ஏனென்றால், இந்த விலை மேல்நாட்டு விலையில் நான்கில் ஒரு பங்காகும். வரும் டிசம்பர் மாதம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்துடன் இயங்கும் டேப்ளட் பிசி ஒன்றை டேட்டாவிண்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் விலை ரூ. 2,999 என்ற அளவில் இருக்கும். முன்பு மொபைல் போன் பயன்பாடு அறிமுகமான போது மிகவும் மலிவான விலையில் நாடு முழுவதும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன் மற்றும் சேவையினை வழங்கி ரிலையன்ஸ் முன்னணி இடத்தைப் பிடித்தது. இதே வழியில், டேப்ளட் பிசி விற்பனையிலும் தன் தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிடுகிறது.

விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்? –



அரசு வழங்கும் அனைத்து இலவசங்களையும் நிறுத்தினால் விலை வாசி ஏற்றம் ஓரளவாவது  குறையும்

சாதிகள் இல்லையடி பாப்பா



சாதிகள் இல்லையடி பாப்பா "
சொன்னவர் 
மறைந்தார் அன்றே ....!
சாதி வெறியை 
தூண்டியே வாழ்கிறார் 
சிலர் இன்றே ....!

சாதி சாதி என்று 
சாகும் மனிதா....
சாதியில் பிரிவு 
எப்படி பிரித்தாய் ..?

நீயும் நானும் 
வேறு சாதி என்றால் 
நம்மை படைத்த 
இறைவன் எந்த சாதி ....?இறைவனுக்கு சாதி
இல்லையெனில் ...
எங்கிருந்து வந்தது 
இந்த வியாதி ....?

சாதி தருமா உயர்வு  ....?
சாதி தருமா வாழ்வு ....?
பின்
சாதியில் என்ன தாழ்வு ...?

ஆறடி குழிக்குள் அடங்கும்
ஆறறிவு மானுடா...
சாதி என்பதோர் வியாதி ...
சில மூர்க்கர்கள் செய்த சதி ....

சாதிகள் இல்லையென்று
சப்தமாய் கூறு........
முழங்கட்டும்  சமூகம்..
மனிதம் வாழ்கவென்று ....!

சூரிய ஒளி பேருந்து

பெருகி வரும் வாகனங்களும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் நாம் எல்லாரும் அறிந்த விசயம்தான். அதிக வாகனங்கள் இயக்க ப்படுவதால் ஏற்படும் எரிபொருள் இழப்பு மிகவும் ஈடுகட்ட முடியாத ஓன்று.இயற்கை வளமான எரிபொருட்கள் குறைந்து கொண்டே வருவதால் அதற்கும் முடிவு காணவேண்டிய நிலையில் இந்த உலகம் உள்ளது.
 
இவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் உலகமெல்லாம் ஈடுபட்டிருக்க ,  சீனாவை சேர்ந்த  யூசா சாங்  என்பவர் ஒரு புதிய நவீன வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார்.இந்த நவீன தொழில் நுட்பம் செயல்பட ஆரம்பித்துவிட்டால்சீனாவின் போக்குவரத்து நெரிசலும் சுற்றுப்புற சீர்கேட்டை கொண்டுவரும் புகையும்  (வாகனங்களால் வெளியிட படுபவை )  கணிசமாக குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளது. 
 

இதுதான் அந்த நவீன தொழில் நுட்பம் .  Straddling  Bus  என்று அழைக்கபடுகிறது.  18  அடி உயரமும் 25  அடி அகலமுமான ஒரு பேருந்து.     பிரத்தியேகமாக  வடிவமைக்கப்பட்ட  ஓடு பாதை பயன் படுத்தப்பட போகிறது.     இந்த பேருந்தின் மேல்தட்டில் மாத்திரம் பயணிகள் இருப்பார்கள்.   மேல் தட்டிற்கு கீழ் இருக்கும் சாலையில் மற்ற சிறு வாகனங்கள் சென்று வரும்.  படத்தை கூர்ந்து பாருங்கள்.  பேருந்தின் சக்கரங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் எப்படி அதன் கீழ் வாகனங்கள் சென்று வருகிறது என்பதையும்.  இதனால் இந்த பேருந்தின் நிமித்தம் எந்த போக்குவரத்து இடைஞ்சலும் இருக்காது.  சுமார் 1200  பேர் இதில் பயணிக்கும் சக்தி இருப்பதால் மற்ற பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.  சுமார் 40 கிமீ  வேகத்தில் செல்லும் இந்த பேருந்து 25  முதல் 30  சதவீத நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
 
 

இந்த பேருந்தை இயக்குவதற்க்கான சக்தி முழுவதும் பேருந்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடுகள் மூலம் பெறப்படும்.  பேருந்து நிறுத்தத்தின் கூரையிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு அந்த சக்தியும் பேருந்துக்கு மாற்றப்படும்.   இந்த பேருந்தின் மூலம் சுமார் 40  சாதாரண பேருந்துகளை ஈடுகட்ட முடியும்.  எனவே வருடத்திற்கு சுமார் 860000 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும் என்றும் சுமார் 2640000  கிலோ கார்பன் நச்சு பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.   ( நன்றி : நியூயார்க் டைம்ஸ் )

தீ பற்றி கொண்டால் ... என்ன செய்ய வேண்டும் ..?

நெருப்பு /  தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் .  வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது .  அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..



நெருப்பு என்றால் என்ன .?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது .   நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது . 
  1. வெப்பம்
  2. ஆக்சிஜென்
  3. எரிபொருள்
  4. தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன .  அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்பு 4  வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
  1. Class A நெருப்பு
  2. Class B நெருப்பு
  3. Class C நெருப்பு
  4. Class D நெருப்பு


 Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர்  ,  மரம் , துணி  போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .  இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் .   தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது .  எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .   இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers )  பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு : 

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .   இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் .  ஆனால் அது தவறான நடவடிக்கை 


 இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும்  , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் ,  நெருப்பு அதிகமாகும் .   எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க  CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும் 


Class C தீ / நெருப்பு : 

 மின்சார தீ இந்த வகையில் வருகிறது .  இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் .  அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு :  


தொழிற்சாலைகளில் உள்ள சோடியம்  , பொட்டாசியம் ,  டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது .   சோடியம் க்ளோரைட்  எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் .