மொத்தப் பக்கக்காட்சிகள்

9/28/2024

உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா, அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"

எழுத்தாளர் சுஜாதா வீடு.

 

தயங்கி தயங்கி தன் கணவரிடம் கேட்டார் திருமதி சுஜாதா.

"என்னங்க...

நான் ஒண்ணு கேட்டா...

அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."

மனைவியை திரும்பிப் பார்க்காமலே,

"என்ன கேக்கப் போறே ?"

"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர் ?"

"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."

திருமதி மௌனம்.

"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."

"ஆமா."

"சீக்கிரம் கேளு."

"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்..."

"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."

சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.

"அதுதாங்க, அந்த வீடு விஷயம்..."

"எந்த வீடு ?"

"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."

"ம்..."

"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு..."

"நம்ம வீட்டுக்கு வந்த என்னோட நண்பர் சொல்லிட்டு போனார், அதானே?"

"ஆமா."

"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"

"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."

"சரி. இப்போ நாம இருக்கறது..?"

"இது நாம சொந்தமா வாங்கின வீடு."

"எத்தனை பெட்ரூம் ?"

"மூணு பெட்ரூம் வீடு."

"இது வசதியா இல்லையா ?"

"இருக்கு...ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா..."

"ம்..."

"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே.

உங்க நண்பர்தானே பணம் கொடுக்க ..."

சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.

"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன்.

புரியுதா ?"

"ம்"

"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை. ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா, அந்த நிமிஷத்தில இருந்து

நாம அவருக்கு அடிமை."

"ம்."

"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா,

அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"

"நேர்மையாத்தான்..."

"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"

(திருமதி சுஜாதா

அனுபவங்களிலிருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக