[keedu Bhavan]
ஸ்ரீ நாகநாதராக சிவபெருமானும் சௌந்தர
நாயகியாக தாயாரும் எழுந்தருளி செய்த திருத்தலமாகிய கீழ்ப்பெரும்பள்ளம்
ஒரு நவக்கிரக ஸ்தலமுமாகும். கேது பகவான் அருள் செய்யும் புண்ணிய ஸ்தலம் தான்
கீழ்பெரும்பள்ளம்.
வாணகிரி என்ற பெயரிலும்
அறியப்படும் இந்த ஊர் திருவெண்காடிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு
நாகநாத சுவாமியை வழிபட்ட கேது பகவான் பாவங்களிலிருந்து
விடுபட்டதாக கூறப்படுகிறது. தலையுடன் கூடிய கேது பகவானை தரிசிப்பதென்பது மிகவும்
அரிது. அப்பேர்ப்பட்ட கேது பகவானை இங்கு காணலாம்.
புராணங்களின் படி மகா விஷ்ணுவால்
இரு துண்டங்கலாக்கப்பட்ட உடம்பின் பகுதி கேதுவாகவும் தலைப் பகுதி இராகுவாகவும் விளங்குவதாக அறிகிறோம். அமுதுண்ட காரணத்தால் பாம்பின் தலையுடன் கூடிய இராகு பகவானும் அறுபட்ட உடல் பொதிகை மலையில் விழுந்ததாகவும் இத்தனை கண்டெடுத்த ஒரு பிராமணன் இதனை பாதுகாத்து வந்ததாகவும்
பிற்காலத்தில் அமுதுண்ட காரணத்தால் ஒரு பாம்பின் தலை அசுர உடம்புடன் ஒட்டி கேது
பகவானாக ஆனதாகவும் கூறப்படுகிறது.
கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
திருட்டு பயம், கெட்ட பழக்கங்கள், சொத்து சேதம் அடைதல் அல்லது நாசமடைதல், மானமிழத்தல் மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றால் அல்லல் படுவர். இங்கு வந்து கேது பகவானை தரிசிக்கும் பக்தர்கள் தோஷங்களிலிருந்து முக்தி அடைவர் என நம்பப்படுகிறது.
கேது பகவானுக்கு உரிய நிறம்,
உலோகம்,
தானியம்
போன்றவை வருமாறு:-
நிறம்: பல்வேறு நிறங்கள் (பூ போட்டது போல்)
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வல்லி
உலோகம்: கருங்கல்
கிழமை: ஞாயிறு
இரத்தினம்: வைடூர்யம்
பலன்கள்: தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில்ருந்து நிவர்த்தி
கேது கவசம் என்ற மந்திரம்:-
கேதும் கராலவதனம் சித்ரவர்ணம்
கிரீடினம்
ப்ரணமாமி சதா கேதும் த்வஜாகாரம்
க்ரஹேச்வரம்
சிதரவர்ண சிரப்பாது பாலம்
தூம்ரசமத்யுதி
பாதுநேத்ரே பிங்கலாக்ஷ ஸ்ருதீ மே
ரக்தலோச்சன
க்ராணம் பாது ஸுவர்ணாபஸ்சிபுகம்
ஸிம்ஹிகாஸுத
பாது கண்டம் ச மே கேது ஸ்கந்தௌ
பாது க்ரஹாதிப
ஹஸ்தௌ பாது சுரஸ்ரேஷ்ட குக்ஷிம்
பாது மஹா க்ரஹ
ஸிம்ஹாஸன கடிம் பாது மத்யம் பாது
மஹாஸுர
ஊரூ பாது மஹாசீர்ஷோ ஜானுனி
மேதிகோபன
பாது பாதௌ ச மே க்ரூர சர்வாங்கம்
நர பிங்கள
ய இதம் கவசம் திவ்யம் சர்வரோக
விநாசனம்
சர்வசத்ரு விநாசம் ச தாரணாத்விஜயீ
பவேத்
இதி ஸ்ரீ
பிரஹ்மாண்டபுராணே கேது கவசம் சம்பூர்ணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக