மொத்தப் பக்கக்காட்சிகள்

4/26/2012

7. திருநள்ளாறு சனீசுவரன்


நவக்கிரகங்களின் கோயில்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு கோயில் சனைச்சர பகவான் (சனீசுவரன் என பலராலும் கூறப்பட்டாலும் சமஸ்கிருதத்தில் "மெதுவாக செல்பவன்" என பொருள் படும் "சனைச்சர:" என்ற சொல்லே இவரது திரு நாமமாகும்) எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு ஆகும்.

தமிழ் நாட்டை சேர்ந்த
கோயிலாக கருதப்பட்டாலும் உண்மையில் இக்கோயில் இருக்கும் திருநள்ளாறு எனும் இடம் தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் தான் உள்ளது. காரைக்காலுக்கு மிகவும் அருகிலுள்ள திருநள்ளாறு எனும் புண்ணிய ஸ்தலத்தில் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் என்ற நாமத்தில் சிவ பெருமானும், பிராணாம்பிகையாக தாயாரும் வீற்றிருக்கிறார்கள். இவர்களிருவருக்கும் நடுவே உள்ளது சனைச்சர பகவானின் சன்னதி. அபய ஹஸ்தத்துடன் காட்சி தரும் சனைச்சர பகவானின் திரு உருவம் இக்கோயிலின் சிறப்பாகும்.

7-
ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் தர்பாரண்யேசுவரர் திருக்கோயில் கரைக்கலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனைச்சரரின் பார்வையால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல இன்னல்களை அனுபவித்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்து "நள தீர்த்தம்" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்கோயிலின் புஷ்கரிணியில் ஸ்நானம் செய்து தர்பாரண்யேசுவரரை தரிசனம் செய்து சனி தோஷத்திலிருந்து முக்தி பெற்றதாக கருதப்படுகிறது. ஆகவே சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடை பெரும் சனிப் பெயர்ச்சி நடைபெறும் நாளன்று இக்கோயிலில் பக்தர்கள் பல ஆயிரக் கணக்கில் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலை பற்றிய பல தகவல்கள் புதுச்சேரி அரசாங்க இணைய தளத்தில் தரப்பட்டுள்ளதை காணலாம்.

சனி பகவானுக்கு உரிய நிறம்
, உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-

நிறம்:
கறுப்பு
தானியம்:
எள்
வாகனம்:
காகம்
மலர்:
கருங்குவளை
உலோகம்:
இரும்பு
கிழமை:
சனி
இரத்தினம்:
நீலம்
பலன்கள்:
வியாதி, கடன், பேய், பிசாசு பயம் நீங்குதல்

சனைச்ச்ர ஸ்தோத்திரம்:

தசரத உவாச:

கோணோந்தகோ ரௌத்ரயமோதபப்ருஃ

கிருஷ்ண சனி பிங்கலமந்தஸௌரிஃ

நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா


ஸுராஸுராஃ கிம் புருஷோரகேந்த்ரா

கந்தர்வவித்யா தர பன்னகாஸ்ச்ச

பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா


நரா நரேந்திரா பசவோ மிருகேந்திரா

வன்யாஸ்ச்சயே கீடபதங்க பிருங்காஃ

பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா


தேசாஸ்ச்ச துர்காணி வனானி யத்ர

ஸேனானிவேசாஃ புரபத்தனானி

பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா


திலைர்யவைர்மாஷகுடான்னதானைர்

லோஹேன நீலாம்பரதானதோ வா

ப்ரீணாதி மந்த்ரைர்நிஜவாசரே ச

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா


பிரயாககூலே யமுனதடே ச

சரஸ்வதீ புண்ய ஜலே குஹாயாம்

யோ யோகிநாம் த்யான கதோபி சூக்ஷ்மம்

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா


அன்யப்பிதேசாத்ஸ்வக்ருஹம் பிரவிஷ்டஸ்

ததீயவாரே
ச நரஃ சுகீ ஸ்யாத்
கிருஹாத்கதோ யோ ந புனஃ பிரயாதி

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா
ஸ்ரஷ்டா ஸ்வயம் பூர்புவனத்ரயச்ய
திராதா ஹரீசோ ஹரதே பினாகி

ஏகஸ்த்ரிதா ருக்யஜுஃஸாமமூர்த்திஸ்

தஸ்மை நமஃ ஸ்ரீ ரவிநந்தனாயா

சன்யஷ்டகம் யஃ பிரயதஃ பிரபாதே
நித்யம் சுபுத்ரைஃ பசுபாந்தவைஸ்ச்ச

படேது ஸௌக்யம் புவிபோகயுக்த

பிராப்னோதி
நிர்வாணபதம் ததந்தே
கோணஸ்தஃ பிங்களோ பப்ருஃ கிருஷ்னோ ரௌத்ரோந்தகோ யமஃ

ஸௌரிஃ சனைஸ்ச்சரோ மந்தஃ பிப்பல்லாதேன ஸம்ஸ்துதஃ

ஏதானி தசநாமானி
பிராதருத்தாய யஃ படேத்
சனைஸ்ச்ச்ரகிருதா பீடா ந கதாசித்பவிஷ்யதீ
இதி ஸ்ரீ பிரம்மாண்டபுராணே சனைஸ்ச்ச்ர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக