மொத்தப் பக்கக்காட்சிகள்

11/16/2011

சுகமான தூ‌‌க்க‌த்‌தி‌ற்கு ‌சில முய‌ற்‌சிக‌ள்

 
பலரு‌ம் ‌நி‌ம்ம‌தியான தூ‌‌க்க‌ம் இ‌ன்‌றி அவ‌தி‌ப்படு‌கிறா‌ர்க‌ள். அத‌ற்கு அவ‌ர்களது நடைமுறை பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள்தா‌ன் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் உணர வே‌ண்டு‌ம்.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 அ‌ல்லது 9 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். 9 ம‌ணி‌க்கு‌ள் தொலை‌க்கா‌ட்‌சியை அணை‌த்து ‌வி‌ட்டா‌ல்தா‌ன் 1 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தூ‌க்க‌ம் உ‌ங்களை‌த் தழுவு‌ம்.

குறைந்த வெளிச்சத்தில் தூங்குவது ந‌ல்லது. வெ‌ளி‌ச்சமே இ‌ல்லாம‌ல் இருளாக இரு‌ப்பது‌ம் ச‌ரிய‌ல்‌ல. படு‌க்கை அறை கா‌ற்றோ‌ட்டமான, சு‌த்தமான அறையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

தூ‌ங்குவத‌ற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள்.

படுப்பதற்கு இரண்டரை மணிநேர‌த்‌தி‌ற்கு முன்பு இரவு உணவை முடித்துவிடுங்கள். தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு எ‌ளிய நடை‌ப்ப‌யி‌ற்‌சி அ‌ல்லது உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது

பா‌ம்பு ‌விஷ‌த்தை இற‌க்கு‌ம் வாழை‌த் த‌ண்டு

வாழை‌த் த‌ண்டி‌ன் சாறு பல நோ‌ய்களு‌க்கு மக‌த்தான மரு‌ந்தாக இரு‌ப்பது நா‌ம் பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் நம‌க்கு‌த் தெ‌ரியாத பல மக‌த்துவ‌‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது வாழை‌த் த‌ண்டு.

பொதுவாக நா‌ம் வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழ‌க்க‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ளை‌க் கறை‌க்க வாழை‌த் த‌ண்டு சாறெடு‌த்து அரு‌ந்துவா‌ர்க‌ள்.


வாழை‌த் த‌ண்டு நா‌ர்‌ச‌த்து ‌மி‌க்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும் ஆ‌ற்ற‌ல் கொ‌ண்டது.

ச‌ரியாக ‌சிறு‌நீ‌ர் வராதவ‌ர்க‌ள் வாழை‌த் த‌ண்டை சா‌ப்‌பி‌ட்டா‌ல் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.

வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்‌ஸ் வீதம் தினமும் கு‌டி‌த்து வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகு‌ம்.

நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்

 
 
பொதுவாக எ‌ண்ணெ‌ய் வகைக‌ளி‌ல் பாமா‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ப‌ற்‌றிய தவறான கரு‌த்து பொதும‌க்க‌ளிட‌ம் உ‌ள்ளது.

விலை ம‌லிவான பொரு‌ள் எ‌ன்றாலே அது தர‌த்‌‌திலு‌ம் ம‌லிவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ‌நினை‌‌ப்பது போ‌ன்றே பாமா‌‌யிலையு‌ம் தவறாக கருது‌கிறோ‌ம்.

பொதுவாக எ‌ண்ணெ‌ய் பொரு‌ட்களை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் ஆப‌த்து உ‌ண்டு எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

ஆனால‌் பாமா‌யி‌ல் எ‌ண்ணெ‌யி‌ல் பு‌ற்று நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் கரோ‌ட்டி‌ன் எ‌ன்னு‌ம் ஒரு ச‌த்து‌ப் பொரு‌‌ள் இரு‌க்‌கிறது எ‌ன்பது பலரு‌ம் அ‌றியாத தகவலாகு‌ம்.

எ‌ந்த எ‌ண்ணெயாக இரு‌ந்தாலு‌ம் பய‌ன்படு‌த்‌திய ‌‌மீ‌‌தியை ‌திரு‌ம்ப‌த் ‌திரு‌ம்ப உபயோ‌கி‌ப்பதே உடலு‌க்கு ‌‌தீ‌ங்கை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள். மாதா மாத‌ம் எ‌ண்ணெ‌‌ய் வகைகளை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌‌ங்க‌ள். ஒரு முறை ந‌ல்லெ‌ண்னை, ஒரு முறை சூ‌ரிய கா‌ந்‌தி எ‌ண்ணெ‌ய், ஒரு முறை பாமா‌யி‌ல் என மா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

பொய் கண்டு பிடிக்கும் இயந்திரம்


ஒரு நாள் அப்பா ஒரு பொய்காட்டி மிஷின் (Lie Detector) வாங்கி வந்தார்.அப்போது ம‌க‌ன் முத்து தாம‌த‌மாக வீட்டுக்கு வந்தான்.

அப்பா கேட்டார்: "முத்து எங்கே போயிட்டு இவ்வ‌ள‌வு நேர‌ம் க‌ழிச்சு வர்றே?

முத்து: " ந‌ண்ப‌ன் வீட்டுக்கு போயிட்டு வ‌ர்றேன்"

உட‌னே பொய்காட்டி மிஷின் "பொய், பொய்" என்று க‌த்திய‌து.

உட‌னே அப்பா: "பார்த்தியா, உன் பொய்யை இந்த‌ மிஷின் க‌ண்டுபிடிச்சுடிச்சு, யார் பொய் சொன்னாலும் க‌ண்டுபிடிச்சுடும், உண்மையை சொல்லு, எங்கே போயிட்டு வ‌ர்றே?"

முத்து: " நண்பருடன் சினிமாவுக்கு சென்று வந்தேன்."

அப்பா, கோப‌மாக‌ : "நான் உன் வ‌ய‌சுல‌ சினிமாவுக்கு சென்றதில்லை"

உட‌னே பொய்காட்டி மிஷின் "பொய், பொய்" என்று உரக்க க‌த்திய‌து.

அப்பாவுக்கு அவ‌மான‌மாக‌ப் போய்விட்ட‌து.

அம்மா: " உங்களோட‌ ம‌க‌ன் உங்க‌ மாதிரி தானே இருப்பான்" என்றாள்.

உட‌னே பொய்காட்டி மிஷின் "பொய், பொய்"  என்று ‌ உரக்க கூவ‌ ஆர‌ம்பித்த‌து .

நான் ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீசர்!”

ஒரு குழந்தை ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டது.


உடனே டாக்டரிடம் போக எண்ணி, தாய் அந்தக் குழந்தையைத் தூக்கிக்
கொண்டு வெளியே ஓடிவருகிறாள்…எதிரே ஒருவர்: “”எங்கேம்மா ஓடறே?”


“”என் பிள்ளை காசை விழுங்கிவிட்டான்….


அதுதான் ஆஸ்பத்திரிக்கு…!”


“”குழந்தையை இப்படிக் கொடு!”


கையில்வாங்கி… அதை தலை கீழாகப் பிடித்துக் கொண்டு…
ஒரு கை விரலால்… அதன் வயிற்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரியாகத் தட்ட… காசு வாய் வழியாக வெளியே வந்து விழுகிறது!


தாய்க்கு வியப்பு… மகிழ்ச்சி…


குழந்தையை வாங்கிக் கொண்டு சொல்கிறாள்:


“”ஐயா… ரொம்ப நன்றி…! நீங்க நிச்சயமா ஒரு டாக்டராத்தான்
இருக்கணும்!”


“”இல்லீங்க… நான் ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீசர்!”