பாக்யராஜ்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்திய சினிமாவின்
'திரைக்கதை ஜித்தன்’ கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன்.
'மிடாஸ் டச்’ இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து...
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மொத்தப் பக்கக்காட்சிகள்
2/12/2013
பாக்யராஜ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சினிமாவில், சீர்திருத்தங்கள்,
நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில்
சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய! | |
அப்பா
ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில்
பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை
எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!
|
|
சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம் 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான்' என்பார்! | |
ராதா நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937), கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்' (1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்! | |
'உலக
பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்'
என்று சொல்லி,
அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில்
வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும்
பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்! |
|
ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன! | |
ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்! | |
நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை
போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள்
கண்காட்சியாக வைப்பார்.
'நேற்று
பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்'
என்று அதில்
எழுதிவைப்பார்! |
|
எம்.ஜி.ஆரை
'ராமச்சந்திரா'
என்றும், சிவாஜியை
'கணேசா'
என்றும் அழைப்பார்.
மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்! |
|
இவரது
நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம்
கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு
சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால்,
அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்! |
|
என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, 'நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்' என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு! | |
எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்! | |
நான்கரை
ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது
ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து
கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு
விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம்
கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது! |
|
'அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்... நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', 'ஊருக்கு ஒரு லீடர்... அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்.... நான் சென்ஸ்' - இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்! | |
ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம்' என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். 'மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்தார்! | |
'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டபோது. 'எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் 'என்றார்! | |
ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. 'அண்ணாவின் அவசரம்', 'ராமாயணமா? கீமாயணமா?' என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பிவை! | |
ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்! | |
மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி' என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர். 'நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்' என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்! | |
''திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்! | |
தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். ''போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா'' என்பது அவரது அழுத்தமான கருத்து! | |
விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். 'ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால ஏத்துக்கிறேன்' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா! | |
'மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை' என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்! | |
''சுட்டாள்.... சுட்டான்.. சுட்டேன்'' என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது! | |
''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்'' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்! |
தொகுத்து வழங்குபவர்
திருமதி ஆனந்திராம்குமார் |
நன்றி
ஆனந்த விகடன் |
|
என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
என்.எஸ். கிருஷ்ணன்... தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!
வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம்!
ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம் ஆனால், 'சதி லீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது. மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!
தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்!
என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.
என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார், 'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்.
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!
'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கல் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கிய தினம் அது!

திருமதி ஆனந்திராம்குமார்
நன்றி ஆனந்த விகடன்
12/27/2012
அதிவிரைவு இரயில்
உலகிலேயே அதிக தொலைவு பயணம் செய்யக்கூடிய அதிவிரைவு இரயில் ஒன்று சீனாவில் நேற்று முதல் செயபட்டது. இது 1400 மைல்கள் பயணம் செய்கிறது. இந்த அதிவிரைவு இரயில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து Guangzhou என்ற பகுதி வரை செல்கிறது. இன்று காலை இதன் முதல் பயணத்தை இரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதுவரை இந்த நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தை சுமார் 20 மணிநேரங்களில் பயணம் செய்த சீனப் பயணிகள் இனி எட்டே மணிநேரத்தில் தங்கள் பயணத்தை முடிக்கலாம்.
1400 மைல்கள் தூரத்தை வெறும் எட்டு மணிநேரங்களில் பயணம் செய்யும் இந்த இரயில் முதல் பயணத்தில் பயணம் செய்ய சீனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த ரயில் கடக்கும் தூரமானது கிட்டத்தட்ட லண்டனில் இருந்து Gibraltar என்ற பகுதிக்கு இடையேயுள்ள தூரத்திற்கு சமமானது. இந்த தூரத்தை வெறும் எட்டு மணி நேரத்தில் பயணிப்பது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயம்தான்.
இந்த அதிவேக இரயில், Shijiazhuang, Wuhan and Changsha, ஆகிய நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும். இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 186 mph ஆகும்.

12/24/2012
தத்துவங்கள் 2016
- எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!
- தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - "அம்மா"
- சரியோ தவறோ கடந்துவிடுகிறது -வாழ்க்கை
- மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!
- பிரதர்க்கும் பிரதமர்க்கும் என்ன வித்தியாசம்?
- பிரதர் பேசியே கொல்லுவான், பிரதமர் பேசாம கொல்லுவார்!
- போனில் பாஸ் பேசும்போது
- பதில்-"எஸ் சார், ஓகே சார், ஓகே சார், எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார்!"
- உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!
- பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்!
- இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!
- நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும்
- பெண்கள் அழகு என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்!
- மறுத்து நான் அழகு என்பவர்கள் என்னை நேரில் பார்க்கவும்!
- 'சட்டம் தன் கடைமையைச் செய்யும்'ங்கிறாங்களே எங்க வீட்டிலேயும் கூரைல சட்டம் தன் கடைமையைச் செய்துகிட்டிருக்கே அதானா இது?
- பவர் ஸ்டாரை புடிச்சு ஜெயில்ல போட்டுட்டீங்க,
- அப்புறம் எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல பவரு !
- கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!
- ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")
- ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் - ஒவ்வொரு முறையும்!!
- இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.
- காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!
- சில தவறுகள் மன்னிக்கப்படாதது தான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!
- நல்லதாய் ஒரு காரியம் செய் என்பதற்கு வேண்டாத ஒருவருக்குக் காரியம் செய் என்பது பொருளல்ல!
- கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்!
- வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)