மொத்தப் பக்கக்காட்சிகள்

12/27/2012

அதிவிரைவு இரயில்

உலகிலேயே அதிக தொலைவு பயணம் செய்யக்கூடிய அதிவிரைவு இரயில் ஒன்று சீனாவில் நேற்று முதல் செயபட்டது. இது 1400 மைல்கள் பயணம் செய்கிறது. இந்த அதிவிரைவு இரயில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து Guangzhou என்ற பகுதி வரை செல்கிறது. இன்று காலை இதன் முதல் பயணத்தை இரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதுவரை இந்த நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தை சுமார் 20 மணிநேரங்களில் பயணம் செய்த சீனப் பயணிகள் இனி எட்டே மணிநேரத்தில் தங்கள் பயணத்தை முடிக்கலாம்.

1400 மைல்கள் தூரத்தை வெறும் எட்டு மணிநேரங்களில் பயணம் செய்யும் இந்த இரயில் முதல் பயணத்தில் பயணம் செய்ய சீனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த ரயில் கடக்கும் தூரமானது கிட்டத்தட்ட லண்டனில் இருந்து Gibraltar என்ற பகுதிக்கு இடையேயுள்ள தூரத்திற்கு சமமானது. இந்த தூரத்தை வெறும் எட்டு மணி நேரத்தில் பயணிப்பது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயம்தான்.

இந்த அதிவேக இரயில், Shijiazhuang, Wuhan and Changsha, ஆகிய நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும். இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 186 mph ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக