மொத்தப் பக்கக்காட்சிகள்

8/31/2012

கவுண்டமணி

கவுண்டமணி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!.

கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்!

அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது `மிஸ்டர் பெல்’ என்று கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்தத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

 மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
   
·இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி’ என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ் –கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

 உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

·திருப்பதி ஏழுமலையான் தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம், நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைந்திருக்கிறார் கவுண்டமணி!

 சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

 கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

  புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி!

  ஓஷோவின் புத்தங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசு செய்வார்!

கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

 கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!’ என்பார்

 ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷீட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். `நம் செளகர்யம் பார்த்தா பத்தாது.... ஜனங்க நடமாட செளகர்யம் கொடுக்கணும்’ என்பார்!

 எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’, அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

`மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

 சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

 ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!
தொகுத்து வழங்குபவர்

திருமதி ஆனந்திராம்குமார்

நன்றி ஆனந்த  விகடன்

செல்வி ஜெ.ஜெயலலிதா - வாழ்க்கைக் குறிப்பு

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநி லம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.

அம்மா என்ற அன்பான வார்த்தையை அரசியல் அஸ்திரமாக மாற்றிகொண்டவர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக் இருந்தாலும், தலைமைக் கழகம் வந்தாலும், பட்டாடோப ஆர்ப்பாட்டங்களால் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் தலைவி

    கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார். ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!

    சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

    போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!

    சினிமா காலத்தில் இருந்து அவரை `வாயாடி’ என்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். இது பற்றி ஜெயலலிதாவிடம் ஒரு நிருபர் கேட்ட போது, சிரித்தபடி சொன்னார்...``அவர் கலகல... நான் லொடலொட!”

    உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

    ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

    'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

    `அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.

    ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா. ``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

    எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

    எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.

    பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி ரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.
   
தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள்.அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

    யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

    இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

    சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

    `நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

    பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

    ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

    பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

    ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

    போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

    இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

    ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

    ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

தொகுத்து வழங்குபவர்

திருமதி ஆனந்திராம்குமார்     நன்றி

ஆனந்த விகடன்

நான்.



நம்மை ஒருவ‌ர் பெய‌ரிட்டு அழைத்தால் நாம் திரும்பி பார்க்கிறோம்,
 
உட‌லைத்தான் தான் அந்த‌ பெய‌ரிட்டு அழைக்கிறோம்.
 
உட‌ல் இற‌ந்த‌தும் அந்த‌ பெய‌ரும் ம‌றைந்து விடுகிற‌து
.
இது என‌து பெய‌ர்,இது என‌து உட‌ல் ,இது என‌து பொருள்,இது என‌து உற‌வு என்கிறோம்.

என‌து என்னும்பொழுது அது, ந‌ம‌து உட‌லுக்கு சொந்த‌மான‌ பொருளைக்குறிக்கிற‌து.

ப‌ணம்,பொருள்,சொந்த‌ம்,ப‌ந்த‌ம் அனைத்தையும் இழக்கும் ஒரு நிலை வ‌ந்த‌ பிற‌கு, இனி நான் இழப்ப‌த‌ற்கு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு த‌ள்ளப்ப‌டுகிறோம்.

த‌ற்பொழுது இந்த உட‌லுக்கு, உலக‌ பொருட்க‌ள் ம‌ற்றும் ம‌னித‌ர்க‌ள் மீது எந்த‌வித‌ ப‌ற்றும் இல்லை,இந்த‌ நிலையில் நான் யார்?உட‌ல் ம‌ட்டும் தான் நானா?

மிகுந்த‌ க‌லைப்ப‌ட‌ந்த‌ நிலையில் நீண்ட‌ ஆழ்நிலைத்தூக்க‌ம் ஏற்ப‌டும்பொழுது,க‌ன‌வ‌ற்ற க‌ல‌ங்க‌ம‌ற்ற அந்த‌ தூக்க‌த்தின் பொழுது எந்த‌ ச‌ப்த‌மும் ந‌ம‌க்கு கேட்ப‌தில்லை,இடி இடித்தால் கூட‌ ந‌ம‌க்கு உறைப்ப‌தில்லை,ஒருவ‌ர் உசுப்பி அசைத்தாலும் நாம் உணர்வ‌தில்லை.இந்த‌ நிலையில் ந‌ம‌து பெய‌ரை அழைத்தாலும் நாம் எழுவ‌தில்லை.இப்பொழுது உட‌லையும்,உணர்வையும் இழந்த‌ ஒரு உன்ன‌த‌ நிலை ஏற்ப‌டுகிற‌து.இந்த‌ நிலையிலும் எஞ்சி இருக்கும் ஆன்ம‌ நிலை தான் அந்த‌ நான்.

இந்த‌ நானை உண‌ர்ந்த‌ வினாடியில், மின் காந்த‌ அலைக‌ளால் பேரின்ப‌க்க‌ட‌லில் உட‌லும் ம‌ன‌மும் மூழ்கிவிடும், இந்த‌ எல்லைய‌ற்ற இன்ப‌க்க‌ட‌லின் முன் உல‌க‌ சிற்றின்ப‌ங்க‌ள் அனைத்தும் பொடியாகி க‌ரைந்துவிடும்.பின்பு இந்த‌ சேற்றுக்கும்பி உட‌ம்பு ஒளி நிற‌ம்பி என் எல்லைய‌ற்ற அய்ய‌னின் ப‌ர வெளியில் சேர்ந்து க‌ரை சேரும்.

இந்த‌ அணுத்துக‌லுக்குள் ஒளிந்திருக்கும் நானைக்க‌ண்டு ஜென்ம‌ம் க‌ரைசேர‌ என‌து ப‌ர‌ம‌குரு இர‌ண்டு உபாய‌ங்க‌ள் சொல்லித்த‌ருகிறார்.
ஒன்று:எல்லைய‌ற்ற‌ அய்ய‌ன் மீது அன்புகொண்டு ச‌ர‌ணாக‌தி அடைந்து விடுவ‌து.

இர‌ண்டு:மேற்கூறிய‌ வ‌கையிலே உள்நோக்கி,ஆழ்நிலைப்ப‌டுத‌லில் ஈடுப‌ட்டு நான் யார் என்று உண‌ர்த‌ல்.

உண‌து எண்ண‌ங்களுக்கெல்லாம் அடித்தள‌ம் எது என்று க‌ண்டுபிடி,எங்கிருந்து அவை புற‌ப்ப‌டுகின்ற‌ன என்று உள்நோக்கு.நீ யார் என்று உண‌ர்ந்த‌ பின்ன‌ர் உன‌க்கு ஏதேனும் தேவைப்ப‌டுகிற‌தா என்று பார் என்கிறார் ப‌க‌வான்.

உட‌லைப் ப‌ட்டினி போட்டு,மிகுந்த‌ துன்ப‌த்திற்குள்ளாக்கி இறைவ‌னைத்தேடி த‌வ‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் பேய் கூட்ட‌த்தின‌ர் எங்கிறார் மானுல‌த்திற்கு யோக‌ சாஸ்திர‌ம் அருளிய‌ மகரிஷி ப‌த‌ஞ்ச‌லி முனிவ‌ர்.
உட‌ல் என்ற புனித‌ ஆல‌ய‌த்தில்,ஆன்ம‌ வ‌டிவ‌த்தில் வ‌சிக்கிறான் இறைவ‌ன்.ஆல‌ய‌த்தை புனித‌ப்ப‌டுத்தி இறைவ‌ன் நிரந்த‌ர‌மாக‌ வ‌சிக்க‌ ஏற்புட‌ய‌தாக‌ வைப்ப‌து ந‌ம‌து பாதையை மிக‌ இல‌குவாக்கும்.

குடும்ப‌த்துட‌னும், ச‌மூக‌த்துட‌னும் சேர்ந்து இருந்து கொண்டே இரைவ‌னை அடைய‌லாம் என்று ந‌ம‌க்கு வாழ்ந்து காட்டிய‌ ம‌ஹான்க‌ள் பாபாஜி அவ‌ர்க‌ளின் பிர‌த‌ம‌ சீட‌ரான,‌ "லாகிரி ம‌ஹாசாய‌ர்"அவர்க‌ளும் க‌ருணைக்க‌ட‌ல் அருப்பெரும் ஜோதி வ‌ள்ளல் பெருமான் அவர்க‌ளும்.லாகிரி ம‌ஹாசாய‌ர் அவர்க‌ளுக்கும்,ப‌க‌வான் அவர்க‌ளுக்கும் இறைவ‌னிட‌ம் ஐக்கிய‌மாகும் முன் உட‌லில் புற்று நோய்க்கட்டி தோன்றி,ப‌க்த‌ர்க‌ளின் வேண்டுகோளிற்கிண‌ங்க‌ ப‌ல‌முறை அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்ட‌து.அப்பொழுது ப‌க்த‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ஏற்ப‌டுகிற இந்த‌ நோய்க்கு கார‌ண‌ம் என்ன என்ற கேட்ட‌ன‌ர்.அத‌ற்கு அவ‌ர்க‌ள் சொன்ன ப‌தில்,உட‌ல் என்ற‌ இந்த‌ ச‌ட்டை க‌ழன்றுகொள்ள ஒரு கார‌ணம் வேண்டும் என்றும் அத‌னால் ஆன்மா என்றும் பாதிப்படைவ‌தில்லை என்றும் கூறின‌ர்.

உல‌கிலுள்ள அனைத்து இன்ப‌, துன்பங்க‌ளை அனுப‌விப்பது நானாகிய‌ என்றும் அழிவ‌ற்ற ஆன்ம‌ வ‌டிவ‌மே என்று உண‌ர்ந்து,இறைவ‌ன் மீது பக்தி கொண்டு அணுகும்பொழுது,இறைவ‌ன் ந‌ம் மீது மிகுந்த‌ அன்பு கொண்டு ந‌ம்மை அர‌வ‌ணைக்கிறான்.

8/29/2012

அரசியல் அரிச்சுவடி !


'' 'உனக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா?' என்று அரசியல்வாதிகள் அடிக்கடி மேடைகளில் சவால் விடுகிறார்களே, அது என்னங்க அரசியல் அரிச்சுவடி?''
''நல்லாக் கேட்டுக்கங்க...

அடிதடி விரும்பு

ஆடு கோழி விருந்து
 

இலவசம் வழங்கு
 

'ஈ' என இளி
 

உண்மை பேசேல்
 

ஊழலைக் கைவிடேல்
 

எண்ணாமல் செலவு செய்
 

ஏய்த்தலே மகிழ்ச்சி
 

ஐயப்பட்டுக் கூட்டு சேர்
 

ஒப்பனையில் மயக்கு
 

ஓட்டு ஒன்றே குறிக்கோள்!''
 
- என்.பி.குமரன், திருநெல்வேலி.
 
நன்றி ஆனந்த விகடன்

8/09/2012

கிருஷ்ண ஜெயந்தி - கொண்டாடப்படுவதன் விளக்கம்


மஹா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி)  பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் இந்திய மனங்களில் பல்வேறு விதங்களில் குடிகொண்டிருப்பவன். மீராவுக்கோ காதலன், ராதாவுக்கும் அவ்வாறே. அர்ஜுனனுக்கோ நண்பன், தத்துவ ஞானி, வழிகாட்டி.

நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர்.
பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒரு தரிசனம் கொடுக்கிறார். ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர். அவருக்கு போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சாங்கி சங்கீ சக்ரீச்ச நந்தகீ என்ற ஸ்லோகம் பீஷ்மருக்கு கிருஷ்ணர் கொடுத்த போர்வீரன் தரிசனத்தைக் குறிப்பதாகும்.

இந்துக் கடவுளர்களில் பக்தர்கள் மனதில் தனது தீராத விளையாட்டுத் தனத்தினால் அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. ராமர் பிறந்த தினம் நவமி.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.

இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டு

Thanks to Web Dunia.com