மொத்தப் பக்கக்காட்சிகள்

8/31/2012

நான்.



நம்மை ஒருவ‌ர் பெய‌ரிட்டு அழைத்தால் நாம் திரும்பி பார்க்கிறோம்,
 
உட‌லைத்தான் தான் அந்த‌ பெய‌ரிட்டு அழைக்கிறோம்.
 
உட‌ல் இற‌ந்த‌தும் அந்த‌ பெய‌ரும் ம‌றைந்து விடுகிற‌து
.
இது என‌து பெய‌ர்,இது என‌து உட‌ல் ,இது என‌து பொருள்,இது என‌து உற‌வு என்கிறோம்.

என‌து என்னும்பொழுது அது, ந‌ம‌து உட‌லுக்கு சொந்த‌மான‌ பொருளைக்குறிக்கிற‌து.

ப‌ணம்,பொருள்,சொந்த‌ம்,ப‌ந்த‌ம் அனைத்தையும் இழக்கும் ஒரு நிலை வ‌ந்த‌ பிற‌கு, இனி நான் இழப்ப‌த‌ற்கு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு த‌ள்ளப்ப‌டுகிறோம்.

த‌ற்பொழுது இந்த உட‌லுக்கு, உலக‌ பொருட்க‌ள் ம‌ற்றும் ம‌னித‌ர்க‌ள் மீது எந்த‌வித‌ ப‌ற்றும் இல்லை,இந்த‌ நிலையில் நான் யார்?உட‌ல் ம‌ட்டும் தான் நானா?

மிகுந்த‌ க‌லைப்ப‌ட‌ந்த‌ நிலையில் நீண்ட‌ ஆழ்நிலைத்தூக்க‌ம் ஏற்ப‌டும்பொழுது,க‌ன‌வ‌ற்ற க‌ல‌ங்க‌ம‌ற்ற அந்த‌ தூக்க‌த்தின் பொழுது எந்த‌ ச‌ப்த‌மும் ந‌ம‌க்கு கேட்ப‌தில்லை,இடி இடித்தால் கூட‌ ந‌ம‌க்கு உறைப்ப‌தில்லை,ஒருவ‌ர் உசுப்பி அசைத்தாலும் நாம் உணர்வ‌தில்லை.இந்த‌ நிலையில் ந‌ம‌து பெய‌ரை அழைத்தாலும் நாம் எழுவ‌தில்லை.இப்பொழுது உட‌லையும்,உணர்வையும் இழந்த‌ ஒரு உன்ன‌த‌ நிலை ஏற்ப‌டுகிற‌து.இந்த‌ நிலையிலும் எஞ்சி இருக்கும் ஆன்ம‌ நிலை தான் அந்த‌ நான்.

இந்த‌ நானை உண‌ர்ந்த‌ வினாடியில், மின் காந்த‌ அலைக‌ளால் பேரின்ப‌க்க‌ட‌லில் உட‌லும் ம‌ன‌மும் மூழ்கிவிடும், இந்த‌ எல்லைய‌ற்ற இன்ப‌க்க‌ட‌லின் முன் உல‌க‌ சிற்றின்ப‌ங்க‌ள் அனைத்தும் பொடியாகி க‌ரைந்துவிடும்.பின்பு இந்த‌ சேற்றுக்கும்பி உட‌ம்பு ஒளி நிற‌ம்பி என் எல்லைய‌ற்ற அய்ய‌னின் ப‌ர வெளியில் சேர்ந்து க‌ரை சேரும்.

இந்த‌ அணுத்துக‌லுக்குள் ஒளிந்திருக்கும் நானைக்க‌ண்டு ஜென்ம‌ம் க‌ரைசேர‌ என‌து ப‌ர‌ம‌குரு இர‌ண்டு உபாய‌ங்க‌ள் சொல்லித்த‌ருகிறார்.
ஒன்று:எல்லைய‌ற்ற‌ அய்ய‌ன் மீது அன்புகொண்டு ச‌ர‌ணாக‌தி அடைந்து விடுவ‌து.

இர‌ண்டு:மேற்கூறிய‌ வ‌கையிலே உள்நோக்கி,ஆழ்நிலைப்ப‌டுத‌லில் ஈடுப‌ட்டு நான் யார் என்று உண‌ர்த‌ல்.

உண‌து எண்ண‌ங்களுக்கெல்லாம் அடித்தள‌ம் எது என்று க‌ண்டுபிடி,எங்கிருந்து அவை புற‌ப்ப‌டுகின்ற‌ன என்று உள்நோக்கு.நீ யார் என்று உண‌ர்ந்த‌ பின்ன‌ர் உன‌க்கு ஏதேனும் தேவைப்ப‌டுகிற‌தா என்று பார் என்கிறார் ப‌க‌வான்.

உட‌லைப் ப‌ட்டினி போட்டு,மிகுந்த‌ துன்ப‌த்திற்குள்ளாக்கி இறைவ‌னைத்தேடி த‌வ‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் பேய் கூட்ட‌த்தின‌ர் எங்கிறார் மானுல‌த்திற்கு யோக‌ சாஸ்திர‌ம் அருளிய‌ மகரிஷி ப‌த‌ஞ்ச‌லி முனிவ‌ர்.
உட‌ல் என்ற புனித‌ ஆல‌ய‌த்தில்,ஆன்ம‌ வ‌டிவ‌த்தில் வ‌சிக்கிறான் இறைவ‌ன்.ஆல‌ய‌த்தை புனித‌ப்ப‌டுத்தி இறைவ‌ன் நிரந்த‌ர‌மாக‌ வ‌சிக்க‌ ஏற்புட‌ய‌தாக‌ வைப்ப‌து ந‌ம‌து பாதையை மிக‌ இல‌குவாக்கும்.

குடும்ப‌த்துட‌னும், ச‌மூக‌த்துட‌னும் சேர்ந்து இருந்து கொண்டே இரைவ‌னை அடைய‌லாம் என்று ந‌ம‌க்கு வாழ்ந்து காட்டிய‌ ம‌ஹான்க‌ள் பாபாஜி அவ‌ர்க‌ளின் பிர‌த‌ம‌ சீட‌ரான,‌ "லாகிரி ம‌ஹாசாய‌ர்"அவர்க‌ளும் க‌ருணைக்க‌ட‌ல் அருப்பெரும் ஜோதி வ‌ள்ளல் பெருமான் அவர்க‌ளும்.லாகிரி ம‌ஹாசாய‌ர் அவர்க‌ளுக்கும்,ப‌க‌வான் அவர்க‌ளுக்கும் இறைவ‌னிட‌ம் ஐக்கிய‌மாகும் முன் உட‌லில் புற்று நோய்க்கட்டி தோன்றி,ப‌க்த‌ர்க‌ளின் வேண்டுகோளிற்கிண‌ங்க‌ ப‌ல‌முறை அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்ட‌து.அப்பொழுது ப‌க்த‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ஏற்ப‌டுகிற இந்த‌ நோய்க்கு கார‌ண‌ம் என்ன என்ற கேட்ட‌ன‌ர்.அத‌ற்கு அவ‌ர்க‌ள் சொன்ன ப‌தில்,உட‌ல் என்ற‌ இந்த‌ ச‌ட்டை க‌ழன்றுகொள்ள ஒரு கார‌ணம் வேண்டும் என்றும் அத‌னால் ஆன்மா என்றும் பாதிப்படைவ‌தில்லை என்றும் கூறின‌ர்.

உல‌கிலுள்ள அனைத்து இன்ப‌, துன்பங்க‌ளை அனுப‌விப்பது நானாகிய‌ என்றும் அழிவ‌ற்ற ஆன்ம‌ வ‌டிவ‌மே என்று உண‌ர்ந்து,இறைவ‌ன் மீது பக்தி கொண்டு அணுகும்பொழுது,இறைவ‌ன் ந‌ம் மீது மிகுந்த‌ அன்பு கொண்டு ந‌ம்மை அர‌வ‌ணைக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக